iPhone 13 பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி: அதிரடி முடிவெடுத்தது ஆப்பிள் நிறுவனம்
தற்போதைய சிப்செட் கட்டுப்பாடுகள் காரணமாக ஆப்பிள் இந்த ஆண்டுக்கான ஐபோன் உற்பத்தி மதிப்பீட்டை 90 மில்லியனிலிருந்து 80 மில்லியனாகக் குறைத்தது. இப்போது இந்த எண்ணிக்கை மீண்டும் திருத்தப்படும் என்று தெரிகிறது.
ப்ளூம்பெர்க் செய்துள்ள தொழில்துறை ஆய்வுகள் மற்றும் ஆதாரங்களின்படி, ஐபோன் 13 தொடருக்கான தேவை குறைந்துள்ளதாகவும், உற்பத்தி மதிப்பீடுகளை மேலும் குறைக்கப்போவதாகவும் ஆப்பிள் அதன் சப்ளையர்களுக்குத் தெரிவித்துள்ளது.
முன்னதாக, தற்போதைய சிப்செட் கட்டுப்பாடுகள் காரணமாக ஆப்பிள் இந்த ஆண்டுக்கான ஐபோன் உற்பத்தி மதிப்பீட்டை 90 மில்லியனிலிருந்து 80 மில்லியனாகக் குறைத்தது. இப்போது இந்த எண்ணிக்கை மீண்டும் திருத்தப்படும் என்று தெரிகிறது.
ஆப்பிள் விடுமுறை காலத்திற்காக காத்திருக்கிறது
கிடைப்பது அரியதாக இருக்கும் ஐபோன்களை (iPhones) வாங்குவதை மக்கள் தவிர்க்க முடிவெடுத்துள்ளனர். இதுவே ஆப்பிள் ஐபோன்களின் தேவை குறைவதற்கு ஒரு பெரிய காரணமாக பார்க்கப்படுகின்றது. வாடிக்கையாளர்கள் மத்தியில் இப்படிப்பட்ட அதிருப்திகள் உள்ள போதிலும், வழக்கமாக இருப்பது போல, விடுமுறை காலத்தில், ஆப்பிள் போன்களின் விற்பனை சாதனை அளவில் இருக்கும் என ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.
இதில் கணிக்கப்பட்ட நான்காவது காலாண்டின் விற்பனை மொத்தம் 117 பில்லியன் டாலரைத் தாண்டியுள்ளது. இது இதே கால அளவில் கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் 6% அதிகமாகும். ஆப்பிளின் முக்கிய கூறுகளின் சப்ளையர்கள் மற்றும் அசெம்பிளி பார்ட்னர்கள் இந்த விஷயத்தில் இன்னும் கருத்து தெரிவிக்கவில்லை.
ALSO READ: இதுதான் உலகின் மிகவும் மலிவான 5G iPhone! முழு விவரம் இதோ https://zeenews.india.com/tamil/technology/cheapest-apple-new-iphone-se-to-be-launch-376554
விடுமுறை காலத்தில் நல்ல விற்பனை இருந்துள்ளது
நிறுவனம் இன்னும் சாதனை விடுமுறை காலத்தை நோக்கி பயணித்துக்கொண்டு இருக்கிறது. ஆய்வாளர்கள் காலண்டர் ஆண்டின் கடைசி மூன்று மாதங்களில் விற்பனை 6 சதவீதம் அதிகரித்து 117.9 பில்லியன் டாலராக (தோராயமாக ரூ. 8,84,055 கோடி) இருக்கும் என்று கணித்துள்ளனர். ஆனால் இது ஆப்பிள் (Apple) நிறுவனம் மற்றும் வால் ஸ்ட்ரீட் ஏற்கனவே கற்பனை செய்த பிளாக்பஸ்டர் காலாண்டாக இருக்காது. பற்றாக்குறை மற்றும் டெலிவரி தாமதங்கள் பல நுகர்வோரை ஏமாற்றமடையச் செய்துள்ளன. மேலும் பணவீக்கம் மற்றும் ஓமிக்ரான் மாறுபாடு தொற்றுநோயால் சிரமப்படும் வணிகர்களுக்கு புதிய சவால்களைக் கொண்டு வருவதால், இது விற்பனையில் தாக்கத்தை ஏற்படுத்தலாம்.
2022 மாடலின் எதிர்பார்ப்புகள்
இத்தனை பிரச்சனைகளுக்கு இடையில், வாடிக்கையாளர்கள், ஐபோன் 13 ஐ (iPhone 13) முழுவதுமாகத் தவிர்த்து, அடுத்த ஆண்டு வரவுள்ள மேம்படுத்தப்பட்ட பதிப்புக்காக காத்திருக்கத் தொடங்கிவிட்டார்கள். தற்போதைய வரிசையானது, ஸ்டாண்டர்ட் மாடலுக்கு 799 டாலர் (தோராயமாக ரூ. 59,890) மற்றும் ப்ரோவிற்கு 999 டாலர் (தோராயமாக ரூ. 74,890) எனத் தொடங்குகிறது. இது ஒரு புதிய வடிவமைப்பைக் கொண்ட iPhone 12 -ன் ஒரு சிறிய புதுப்பிப்பாகக் கருதப்படுகிறது. இதன் விலை ரூ. 59,999 ஆகும்/. 2022 மாடலில் பெரிய மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
ALSO READ: iPhone-ஐ மிஞ்சும் அம்சம், அசத்தும் Oppo போன்: விவரம் இதோ
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR