எரிபொருள் செலவு கவலை இனி இருக்காது... பஜாஜ் எத்தனால் பைக் விரைவில் அறிமுகம்...
இந்தியா பசுமை இயக்கத்தை நோக்கி மிக வேகமாக முன்னேறி வரும் நிலையில், பெட்ரோல் மற்றும் டீசல் இல்லாத மாற்று எரிபொருளில் இயங்கும் வாகனங்களின் பயன்பாடு தொடர்ந்து ஊக்குவிக்கப்பட்டு வருகின்றது.
இந்தியா பசுமை இயக்கத்தை நோக்கி மிக வேகமாக முன்னேறி வரும் நிலையில், பெட்ரோல் மற்றும் டீசல் இல்லாத மாற்று எரிபொருளில் இயங்கும் வாகனங்களின் பயன்பாடு தொடர்ந்து ஊக்குவிக்கப்பட்டு வருகின்றது. இந்தியாவின் மாறி எரிசக்தி தேவையை மனதில் வைத்து, நாட்டின் முன்னணி இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான பஜாஜ் ஆட்டோ, உலகின் முதல் CNG பைக்கான பஜாஜ் ஃப்ரீடம் பைக்கை இந்த மாத தொடக்கத்தில் அறிமுகப்படுத்தி இரு சக்கர வாகனத் துறையில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது.
பஜாஜ் நிறுவனத்தின் ஃப்ரீடம் 125 (Bajaj Freedom 125) வாடிக்கையாளர்களிடமிருந்தும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. வரும் நாட்களில் மேலும் பல சிஎன்ஜி மாடல்களை அறிமுகப்படுத்தவுள்ளது எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில், இப்போது பஜாஜ் நிறுவனம் எத்தனாலில் இயங்கும் தனது முதல் மோட்டார் சைக்கிளை அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடப்பு நிதியாண்டில் பஜாஜ் நிறுவனம் தனது முதல் எத்தனால் டூ-வீலரை விற்பனைக்குக் கொண்டு வந்துவிடும் பஜாஜ் நிறுவனத்தின் மூத்த அதிகாரியான ராஜீவ் பஜாஜ் பேட்டியளித்த நேர்காணல் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பஜாஜ் நிறுவனம் எத்தனாலில் இயங்கும் மோட்டார்சைக்கிளை அடுத்த மாதம் அதாவது செப்டம்பரில் அறிமுகப்படுத்தலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், பஜாஜ் நிறுவனத்தின் எத்தனால் மோட்டார் சைக்கிள் தொடர்பான பிற விவரங்கள் வெளியிடப்படவில்லை.
எத்தனால் எரிபொருளில் இயங்கும் இரு சக்கர வாகனத்தை தயாரிக்கும் நிறுவனம் தற்போதுள்ள மாடல்களை மட்டுமே தயார் செய்யும் என்று தொழில் வல்லுநர்கள் நம்புகின்றனர். அந்த வகையில் முதல் பஜாஜ் எத்தனால் பைக் பல்சர் மாடலாக இருக்கலாம் என கூறப்படுகிறது. பல்சர் என்ற பெயர் வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருக்கும் சூழ்நிலையில், அதை எளிதாக விளம்பரப்படுத்த முடியும் என்பது சாதகமான விஷயமாக இருக்கும்.
நாட்டில் எத்தனாலில் இயங்கும் மோட்டார் சைக்கிள்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. இதுவரை, TVS மோட்டாரின் Apache RTR 200 4V E100 தவிர, எந்த இரு சக்கர வாகன உற்பத்தியாளரும் E100 பைக்கை அறிமுகப்படுத்தவில்லை. E100 எத்தனால் பைக்குகள் 100% எத்தனால் எரிபொருளில் இயங்குகின்றன. பெட்ரோலுடன் ஒப்பிடும்போது எத்தனால் அரிக்கும் தன்மை கொண்டது, இயந்திரத்தின் சில பிளாஸ்டிக் மற்றும் ரப்பர் பாகங்கள் சீக்கிரம் சேதமடையலாம். எனவே, இந்த சிக்கலை தீர்க்கும் முயற்சியில் நிறுவனங்கள் புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.
பெட்ரோலுடன் ஒப்பிடும்போது எத்தனாலின் விலை பாதி தான். எத்தனால் விலை லிட்டருக்கு 60 ரூபாய் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்திருந்தார். நிதின் கட்கரி தொடர்ந்து மாற்று எரிபொருள் மற்றும் பசுமை ஆற்றலில் இயங்கும் வாகனங்களை ஊக்குவித்து வருகிறார். கடந்த ஆண்டு டொயோட்டா கொரோலா ஹைப்ரிட்டை நிறுவனம் அறிமுகப்படுத்தியபோது, டொயோட்டாவின் ஃப்ளெக்ஸ்-எரிபொருள் பைலட் திட்டத்தை அவர் துவக்கி வைத்தார். இதைத் தொடர்ந்து, ஹைட்ரஜனில் இயங்கும் டொயோட்டா மிராய் காரையும் மத்திய அமைச்சர் தொடங்கி வைத்தார்.
மேலும் படிக்க | Bajaj Freedom 125: உலகின் முதல் CNG பைக் அறிமுகம்... எரிபொருள் செலவு 50% குறையும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ