Bajaj Freedom 125 CNG Bike: உலகில் இன்று வரை யாரும் முயற்சி செய்யாததை நாட்டின் முன்னணி இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான பஜாஜ் ஆட்டோ சாதித்துள்ளது. பஜாஜ் ஆட்டோ, உலகின் முதல் CNG பைக்கான பஜாஜ் ஃப்ரீடம் பைக்கை அறிமுகம் செய்துள்ளது. மத்திய சாலை மற்றும் போக்குவரத்து நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, CNG பைக் அறிமுக விழாவில் கலந்து கொண்ட நிலையில், சந்தையில், ஃப்ரீடம் பைக் ஒரு கேம் சேஞ்சராக இருக்கும் என பாராட்டினார். கவர்ச்சிகரமான தோற்றம் மற்றும் வடிவமைப்பை கொண்ட இந்த பைக்கின் ஆரம்ப விலை ரூ.95,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
பஜாஜ் CNG பைக்கின் தோற்றம்
பஜாஜ் ஆட்டோவின் இந்த சிஎன்ஜி பைக் சிறப்பான வடிவமைப்பை கொண்டுள்ளது. பைக்கை பார்த்தவுடன் உங்கள் மனதில் தோன்றும் முதல் கேள்வி சிஎன்ஜி சிலிண்டர் எங்கே உள்ளது என்பது தான். பைக்கில் சிஎன்ஜி சிலிண்டரை எங்கு வைக்கப்படுள்ளது என்பதை யூகிக்கக்கூட முடியாமல் இருப்பது, இதன் சிறப்பு அம்சம் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பாராட்டு தெரிவித்துள்ளார். பைக்கில் முன்பக்கத்தில் உள்ள மிக நீளமான இருக்கையின் கீழ் சிஎன்ஜி டேங்க் பொருத்தப்பட்டுள்ளது. இதில், பச்சை நிறம் சிஎன்ஜியையும், ஆரஞ்சு நிறம் பெட்ரோலையும் குறிக்கிறது என பஜாஜ் ஆட்டோ கூறியுள்ளது.
பஜாஜ் ஃப்ரீடம் 125 CNG பைக்கில் உள்ள அம்சங்கள்
வடிவமைப்பைப் பொறுத்தவரை, பஜாஜ் ஃப்ரீடம் 125 பைக்கில் எல்இடி ஹெட்லைட்கள் மற்றும் டெயில்லைட்கள் மற்றும் ஹாலஜன் இண்டிகேட்டர்கள் ஆகியவை உள்ளன. புளூடூத் இணைப்பை ஆதரிக்கும் மோனோக்ரோம் எல்சிடி டிஸ்ப்ளே உள்ளது. பஜாஜ் எரிபொருள் டேங்கில் ஒரு பொதுவான ஃபிளாப் மூலம் பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி இரண்டையும் நிரப்பலாம்.
பஜாஜ் ஃப்ரீடம் சிஎன்ஜி டேங்க் ஆற்றல் மற்றும் செயல்திறன்
உலகின் முதல் சிஎன்ஜி பைக்கான பஜாஜ் ஃப்ரீடமில், 125 CC திறன் கொண்ட பெட்ரோல் எஞ்சின் உள்ளது. பைக்கில் சிஎன்ஜி டேங்க் இரண்டு கிலோ எரிபொருளை தாங்கும் வகையில் உள்ளது. அதோடு இரண்டு லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்கும் உள்ளது. இந்த பைக்கை பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி என இரண்டிலும் இயக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி இரண்டையும் சேர்த்து பார்க்கும் போது, இதன் ரேஞ்ச் சுமார் 300 கிலோ மீட்டர் என கூறப்படுகிறது. மைலேஜ் பற்றி குறிப்பிடுகையில், இந்த பைக் 1 கிலோ சிஎன்ஜியில் 102 கிமீ மைலேஜையும், 1 லிட்டர் பெட்ரோலில் 67 கிமீ மைலேஜையும் கொடுக்கும் என்கிறது நிறுவனம்.
மேலும் படிக்க | இந்த ஜூலையில் இந்தியாவில் களமிறங்கும் புத்தும் புதிய பைக் மற்றும் கார்கள்...
எரிபொருள் செலவு
பிற பெட்ரோல் மாடலை விடவும் இந்த பைக்கிற்கான எரிபொருள் செலவு மிகவும் குறைவு என்று பஜாஜ் ஆட்டோ கூறுகிறது. தினசரி பயன்பாட்டிற்கான செலவு தோராயமாக 50% குறையும் என நிறுவனம் கூறுகிறது. வாகன உரிமையாளர் இதன் மூலம், அடுத்த 5 ஆண்டுகளில் தோராயமாக ரூ.75,000 சேமிக்க முடியும் எனக் கூறுகிறது பஜாஜ் நிறுவனம்.
பஜாஜ் ஃப்ரீடம் பைக் மாடல்கள் விபரம்
பஜாஜ் சிஎன்ஜி பைக்கை பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி ஆகிய இரண்டிலும் இயக்க ஏதுவாக ஹேண்டில்பாரில் சுவிட்ச் கொடுத்துள்ளது. இந்த பட்டனை அழுத்துவதன் மூலம் பெட்ரோலில் இருந்து CNG பயன்முறைக்கும், CNG பயன்முறையில் இருந்து பெட்ரோலுக்கும் மாற்ற முடியும். பைக்கில் உள்ள சிஎன்ஜி சிலிண்டரின் எடை 16 கிலோ, சிஎன்ஜியை நிரப்பிய பிறகு இதன் எடை 18 கிலோவாக இருக்கும். பஜாஜ் ஃப்ரீடமின் மொத்த எடை 147 கிலோ. பஜாஜ் ஃப்ரீடமின் மூன்று மாடல்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அவை பஜாஜ் ஃப்ரீடம் டிரம் (விலை ரூ 95,000), பஜாஜ் ஃப்ரீடம் டிரம் LED (விலை ரூ 1,05,000), பஜாஜ் ஃப்ரீடம் டிஸ்க் LED (விலை ரூ 1,10,000) .
மேலும் படிக்க | Jio vs Airtel vs Vi: 1ஜிபி டேட்டா இப்போ இவ்வளவா? எதில் விலை குறைவு?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ