பல்சர் பைக்குகளின் விலை கிடுகிடு உயர்வு! பஜாஜ் நிறுவனம் அதிரடி
பல்சர் பைக்குகளின் விலையை பஜாஜ் நிறுவனம் உயர்த்தியுள்ளதால், வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
புனேவை தலைமையிடமாகக்கொண்டு இயங்கும் பஜாஜ் நிறுவனம், பல்சர் பைக்குகளின் விலையை திடீரென உயர்த்தியுள்ளது. புதிய மாடல்களை பல்வேறு சலுகைகளுடன் அறிமுகம் செய்த நிறுவனம், சத்தமில்லாமல் பல்சர் என்250, எஃப்250 பல்சர் மற்றும் டாமினர் 250, 400 பைக்குகளின் விலைகளை உயர்த்தியுள்ளது.
மேலும் படிக்க | ஜனவரி மாதத்தில் விற்பனையான டாப் 5 ஸ்கூட்டர்ஸ்
புதிய விலைகளின்படி, பல்சர் 220F விலை 660 ரூபாய் அதிகரித்து ரூ. 1.34 லட்சத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது. பல்சர் F250 சீரிஸ் விலை ரூ. 915 அதிகரிக்கப்பட்டுள்ளது. பல்சர் N250 விலை 1180 ரூபாய் உயர்த்தப்பட்டு இருக்கிறது. இதேபோல் புதிய பல்சர் F250 விலை 1.41 லட்சம் ரூபாய் என அறிவித்துள்ள பஜாஜ் நிறுவனம், பல்சர் N250 விலை ரூ. 1.39 லட்சத்துக்கு விற்பனை செய்யப்படும் என அறிவித்துள்ளது.
இதேபோன்று பஜாஜ் டாமினர் 250-ன் எக்ஸ் ஷோரூம் விலை 5000 ரூபாய் உயர்த்தப்பட்டு 1.64 லட்சத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது. டாமினர் 400-ன் எக்ஸ் ஷோரூம் விலை ரூ.4,500 உயர்த்தப்பட்டுள்ளது. இதன்மூலம டாமினர் 400 எக்ஸ் 2.17 லட்சமாக உயர்ந்துள்ளது. புதிய பல்சர் என் 250 மற்றும் பல்சர் எஃப்250 மாடல்களைப் பொறுத்த வரை 249.07சிசி, சிங்கில் சிலிண்டர், ஏர்/ஆயில் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டுகின்றன. மேலும் இந்த என்ஜின் 24 பி.ஹெச்.பி. திறன், 21.5 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வருகிறது.
மேலும் படிக்க | அட்டகாசமான போனை அறிமுகம் செய்தது Poco: நம்ப முடியாத விலை, நவீன அம்சங்கள்
இவைதவிர, ஃபுல் எல்.இ.டி. லைட்டிங், செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், ஸ்ப்லிட்-ஸ்டைல் சீட், சைடு-ஸ்லிங் டூயல் பாரெல் எக்சாஸ்ட், டூயல் சேனல் ஏ.பி.எஸ். உள்ளிட்ட அம்சங்களும் இடம்பெற்றுள்ளன. பல்சரின் புதிய மாடல்கள் சுசுகி ஜிக்சர் 250 மற்றும் யமஹா FZ250 ஆகிய பைக்குகளுக்கு போட்டியாக சந்தையில் களமிறக்கப்பட்டுள்ளது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR