ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா (Vi) உட்பட இந்தியாவின் அனைத்து முக்கிய தொலைத்தொடர்பு நிறுவனங்களும் சமீபத்தில் தங்கள் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தியிருக்கின்றன. போஸ்ட்பெய்டு மற்றும் ப்ரீபெய்ட் திட்டங்களின் விலை இப்போது தோராயமாக 22 சதவீதம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்களின் விலை உயர்வுக்குப் பிறகான புதிய கட்டணங்கள் ஜூலை 3 முதல் அமலுக்கு வந்திருக்கிறது, வோடபோன் ஐடியாவின் புதிய கட்டணங்கள் ஜூலை 4 முதல் நடைமுறைக்கு வந்திருக்கின்றன. இந்த சூழலில் இந்த சிம்களை சிலர் இரண்டாம் தர சிம்களாக பயன்படுத்துகின்றனர். அவர்கள் இந்த சிம் கார்டுகளை ஆக்டிவாக வைத்திருக்க இதுவரை ரீச்சார்ஜ் செய்து வந்த பேஸிக் பிளான்களின் விலையும் உயர்ந்திருக்கிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | இந்த ஜூலையில் இந்தியாவில் களமிறங்கும் புத்தும் புதிய பைக் மற்றும் கார்கள்...


ஏர்டெல் பேஸிக் பிளான்


ஏர்டெல் அதன் குறைந்தபட்ச ரீசார்ஜ் திட்டத்தின் விலையை ரூ. 20 அதிகரித்துள்ளது. முன்பு ரூ.179 விலையில் இருந்த இந்த திட்டம் இப்போது ரூ.199 ஆக உள்ளது.28 நாட்கள் வேலிடிட்டி. இந்த ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தில் பயனர்கள் தினமும் 2ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால் மற்றும் 100 இலவச எஸ்எம்எஸ் ஆகியவற்றை பயன்படுத்திக் கொள்ளலாம்.


வோடாஃபோன் ஐடியா பேஸிக் பிளான்


வோடபோன்-ஐடியாவின் குறைந்தபட்ச ரீசார்ஜ் திட்டம் ரூ.98க்கு கிடைக்கிறது, ஆனால் 10 நாட்கள் மட்டுமே செல்லுபடியாகும். ஒரு மாதத்தை ஈடுகட்ட, பயனர்கள் ரூ.199-பிளானை ரீசார்ஜ் செய்ய வேண்டும். ரூ.98 திட்டமானது பயனர்களுக்கு வரம்பற்ற அழைப்பு மற்றும் 200எம்பி டேட்டாவை வழங்குகிறது. இருப்பினும், இந்த திட்டத்தில் இலவச எஸ்எம்எஸ் வசதி கிடைக்காது.


ஜியோ பேஸிக் பிளான்


ஜியோ நிறுவனத்தின் குறைந்தபட்ச ரீசார்ஜ் திட்டம் ரூ. 149 கிடைக்கும். இதன் வேலிடிட்டி 14 நாட்கள் செல்லுபடியாகும். இந்த திட்டத்தில் ஒரு நாளைக்கு 1 ஜிபி டேட்டா, வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் ஜியோ டிவி மற்றும் ஜியோ சினிமா போன்ற அம்சங்களுக்கான சப்ஸ்கிரிப்சன் ஆகியவை அடங்கும்.


இந்த நிறுவனங்களின் வரிசையில் பிஎஸ்என்எல் இணையவில்லை. அந்த நிறுவனம் தனது 4ஜி சேவையை அடுத்த மாதம் நாடு முழுவதும் அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு ஏற்ப பிஎஸ்என்எல் சமீபத்தில் 10,000 மொபைல் டவர்களை 4ஜிக்கு மேம்படுத்தியுள்ளது. மேலும்,  புதிய 4G ரீசார்ஜ் திட்டங்களை அறிவித்தது. இந்த ப்ரீபெய்ட் திட்டங்களில் அன்லிமெட்ட் வாய்ஸ் கால் மற்றும் 4G டேட்டா உட்பட பல்வேறு சேவைகள் கிடைக்கும்.


மேலும் படிக்க | Jio vs Airtel vs Vi: 1ஜிபி டேட்டா இப்போ இவ்வளவா? எதில் விலை குறைவு?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ