Best Affordable Cars: ரூ. 5 லட்சத்தை விட குறைவான விலையில் கிடைக்கும் டாப் கார்கள்
Best Affordable Cars: குறைந்த விலையில் நல்ல காரை வாங்கும் எண்ணம் உங்களுக்கு உள்ளதா? அப்படியென்றால், இந்த செய்தி உங்களுக்கு மிக உதவியாக இருக்கும்.
மலிவு விலை கார்கள்: நாட்டில் ஒவ்வொரு மாதமும் ஏராளமான கார்கள் விற்பனையாகின்றன. இதில் ஹேட்ச்பேக்குகள், செடான்கள், SUV -கள் மற்றும் சொகுசு கார்களின் பல மாடல்கள் அடங்கும். ஆனால் அதில் பெரும்பாலானவை ஹேட்ச்பேக் பிரிவில் விற்கப்படுகின்றன. ஏனெனில் அவை அளவு சிறியதாகவும் விலை குறைவாகவும் உள்ளன. இத்துடன் இவற்றில் அதிக மைலேஜும் கிடைக்கின்றன. குறைந்த விலையில் நல்ல காரை வாங்கும் எண்ணம் உங்களுக்கு உள்ளதா? அப்படியென்றால், இந்த செய்தி உங்களுக்கு மிக உதவியாக இருக்கும். 5 லட்சத்திற்கும் குறைவான விலையில் இருக்கும் சில கார்களைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.
மாருதி ஆல்டோ கே10
மாருதி சுஸுகியின் ஆல்டோ கே10 தற்போது நாட்டில் மிகவும் மலிவு விலையில் உள்ள கார் ஆகும். இது Std, Lxi, Vxi, Vxi+ என நான்கு வகைகளில் சந்தையில் விற்பனையில் உள்ளது. இதில் 67 பிஎச்பி ஆற்றலையும் 89 என்எம் டார்க்கையும் உற்பத்தி செய்யும் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் உள்ளது. இதன் பூட் ஸ்பேஸ் 214 லிட்டர் ஆகும். இதன் ஆரம்ப எக்ஸ்ஷோரூம் விலை ரூ.3.99 லட்சம் ஆகும்.
மேலும் படிக்க | SUV வாங்கப்போறீங்களா? சந்தையை கலக்க வரவுள்ளன 5 கிளாஸ் மாடல்கள்
ரெனால்ட் க்விட்
5 லட்சத்திற்கும் குறைவான விலைக்கு இந்த காரும் சிறந்த தேர்வாக இருக்கும். இந்த காரில் இரண்டு இன்ஜின்களுக்கான தேர்வு கிடைக்கிறது. அதில் ஒன்று 1.0 லிட்டர், 3 சிலிண்டர் பெட்ரோல் மற்றும் மற்றொன்று 0.8 லிட்டர் 3 சிலிண்டர் பெட்ரோல் எஞ்சின் கிடைக்கும். இதில் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் AMT டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன் கிடைக்கிறது. இதன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.4.70 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது.
மாருதி சுசுகி எஸ்-பிரஸ்ஸோ
மாருதியின் இந்த காரில் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் 66 பிஎச்பி பவரையும், 89 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இதில் CNG ஆப்ஷனும் கிடைக்கிறது. இந்த காரின் ஆரம்ப எக்ஸ்ஷோரூம் விலை ரூ.4.26 லட்சம் ஆகும். இந்த கார் சிஎன்ஜி -யில் 32 kmpl மைலேஜை பெறுகிறது.
மாருதி ஈகோ
இந்த கார் 5 மற்றும் 7 இருக்கைகள் கொண்ட அமைப்பில் வருகிறது. இந்த காரில் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் உள்ளது. இந்த எஞ்சின் 72.4 பிஎச்பி பவரையும், 98 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த கார் சிஎன்ஜியில் லிட்டருக்கு 20 கிமீ மைலேஜ் தரும். இதன் ஆரம்ப எக்ஸ்ஷோரூம் விலை ரூ.5.27 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது.
கூடுதல் தகவல்
உங்களிடம் கார் அல்லது பைக் இருந்தால், நீங்கள் அடிக்கடி எதிர்கொள்ளும் பிரச்சனை ஒன்று உள்ளது. இது அடிக்கடி வாகன ஓட்டிகளை தொந்தரவு செய்வதுண்டு. வாகனங்களின் டயர்கள் விரைவாக தேய்ந்து போவதாக மக்கள் பலமுறை புகார் தெரிவித்து வருகின்றனர். ஆனால், வாகனத்தின் டயர்கள் தேய்ந்து கிடப்பதற்குப் பின்னால், அந்த நிறுவனத்தை விட வாகன உரிமையாளரின் அலட்சியமே பெரிய காரணமாக உள்ளது. இதுமட்டுமின்றி, வாகனத்தின் டயர்கள் தேய்மானம் அடைந்தால், சாலை விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. டயர் தேய்மானத்தைத் தவிர்ப்பதற்கான உதவிக்குறிப்புகளை இங்கே காணலாம்.
- டயர் அழுத்தத்தில் சிறப்பு கவனம் செலுத்துங்கள்
- அவ்வப்போது டயர்களை மாற்றவும்
- டயர் சீலண்டை பயன்படுத்துங்கள்
- எப்போது கார் டயர்களை மாற்றுவது சரி?
மேலும் படிக்க | வரும் மாதங்களில் இந்திய சந்தையை கலக்க வரவிருக்கும் கார்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ