வரும் மாதங்களில் இந்திய சந்தையை கலக்க வரவிருக்கும் கார்கள்

Upcoming Cars: பல பெரிய நிறுவனங்கள் அடுத்த சில மாதங்களில் இந்திய சந்தையில் தங்கள் புதிய கார்களை அறிமுகப்படுத்த தயாராகி வருகின்றன 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : May 4, 2023, 06:29 PM IST
  • கியா செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட் ஜூன் அல்லது ஜூலையில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • இதில் ஒரு புதிய 1.5லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் இருக்கும்.
  • இது 160bhp/253 Nm அவுட்புட்டை உருவாக்கும்.
வரும் மாதங்களில் இந்திய சந்தையை கலக்க வரவிருக்கும் கார்கள் title=

அடுத்த சில மாதங்களில் வரவிருக்கும் புதிய கார்கள்: மாருதி சுஸுகி, டாடா, ஹோண்டா, ஃபோக்ஸ்வேகன் மற்றும் கியா போன்ற நிறுவனங்கள் அடுத்த சில மாதங்களில் இந்திய சந்தையில் தங்கள் புதிய கார்களை அறிமுகப்படுத்த தயாராகி வருகின்றன. இதில் புதிய மாடல்கள், ஃபேஸ்லிஃப்ட்கள், புதிய மாறுபாடுகள் மற்றும் சிறப்பு பதிப்புகள் ஆகியவை அடங்கும். சந்தையில் எந்தெந்த புதிய கார்கள் வரப் போகின்றன என்பதை இந்த பதிவில் காணலாம். 

டாடா அல்ட்ரோஸ் சிஎன்ஜி

டாடா அல்ட்ரோஸ் சிஎன்ஜி லைன்அப்பில் நான்கு சிஎன்ஜி வகைகளில் கிடைக்கும் - XE, XM+, XZ மற்றும் XZ+. இதில் 1.2லி, 3-சிலிண்டர் பெட்ரோல் எஞ்சினுடன் டூயல் சிலிண்டர் சிஎன்ஜி கிட் ஒவ்வொன்றும் 30 லிட்டர் கொள்ளளவு கொண்டதாக இருக்கும். சிஎன்ஜி மோடில் இந்த கார் 77 பிஎச்பி பவரையும், 97 என்எம் டார்க் திறனையும் உருவாக்கும். இதன் முன்பதிவு ரூ.21,000க்கு முன்பே தொடங்கிவிட்டது.

கியா செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட்

கியா செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட் ஜூன் அல்லது ஜூலையில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் ஒரு புதிய 1.5லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் இருக்கும். இது 160bhp/253 Nm அவுட்புட்டை உருவாக்கும். இதனுடன், தற்போதுள்ள 1.5லி பெட்ரோல் மற்றும் 1.5லி டர்போ டீசல் இன்ஜின்களும் கிடைக்கும். இதில் 6-ஸ்பீடு மேனுவல், 6-ஸ்பீடு IMT, 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் மற்றும் CVT கியர்பாக்ஸ் தேர்வு இருக்கும். இதில் ஏடிஏஎஸ் தொழில்நுட்பத்துடன்10.25 இஞ்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ருமெண்ட் க்ளஸ்டர் மற்றும் பேனரோமிக் சன்ரூஃபுடன் ஹைவே ட்ரைவிங் அசிஸ்டன்ஸ், ரிமோட் ஸ்மார்ட் பார்க்கிங் அசிஸ்ட் போன்ற அம்சங்கள் கிடைக்கும். 

மேலும் படிக்க | Second Hand வாகனம் வாங்கும் போது இந்த தவறை மட்டும் செய்துவிடாதீர்கள்

மாருதி சுஸுகி ஜிம்னி

மாருதி சுசுகி தனது 5-டோர் ஜிம்னி லைஃப்ஸ்டைல், ஆஃப்-ரோடை, Zeta மற்றும் Alpha டிரிம்களில் அறிமுகப்படுத்த உள்ளது. இதில் பயன்படுத்தப்பட்டுள்ள 1.5L K15B பெட்ரோல் இன்ஜின் 105bhp மற்றும் 134Nm அவுட்புட்டை உருவாக்குகிறது. இதில் 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் 4-ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் ஆப்ஷன் கிடைக்கும். இதனுடன், இதில் இன்னும் பல அம்சங்களும் கிடைக்கும்.

புதிய ஹோண்டா எஸ்யூவி

ஹோண்டா கார்ஸ் இந்தியா தனது புதிய நடுத்தர அளவிலான (மிட் சைஸ்) எஸ்யூவி -ஐ ஜூன் மாதம் அறிமுகப்படுத்தவுள்ளது. புதிய ஹோண்டா எஸ்யூவியின் வடிவமைப்பு மற்றும் ஸ்டைலிங் புதிய ஹோண்டா டபிள்யூஆர்-வி மற்றும் சிஆர்-வி எஸ்யூவிகளால் ஈர்க்கப்பட்டதாக, அவற்றை ஒத்ததாக இருக்கும். இதன் நீளம் 4.2 முதல் 4.3 மீட்டர் வரை இருக்கும். மேலும் இது புதிய சிட்டி செடான் தளத்தில் அமைக்கப்படும். மேலும், சிட்டி செடானுடன் கூடிய பவர்டிரெய்னும் இதில் கிடைக்கும்.

வாக்ஸ்வேகன் விர்டஸ் புதிய மாறுபாடு

வாக்ஸ்வேகன் 1.5L TSI பெட்ரோலுடன் விர்டஸ் செடானின் புதிய மேனுவல் வேரியண்ட்டை ஜூன் 2023 இல் அறிமுகப்படுத்தும். மேலும், நிறுவனம் 1.5 லிட்டர் TSI பெட்ரோல் எஞ்சின் மற்றும் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ்கள் கொண்ட விர்டஸின் சிறப்பு பதிப்பான 'ஜிடி எட்ஜ் லிமிடெட் கலெக்ஷன்' ஐ அறிமுகப்படுத்தும். இந்த லிமிடட் எடிஷன் எக்ஸ்க்ளூசிவ் டீப் பிளாக் பர்ள் கலர் ஸ்கீமில் வரும். மேலும் இதில் லாவா ப்ளூ நிறமும் கிடைக்கும்.

ஃபோக்ஸ்வேகன் டைகன் புதிய மாறுபாடு

இந்த காரிலும், வெர்டஸைப் போலவே இரண்டு புதிய வேரியண்ட்கள் மற்றும் சிறப்பு பதிப்பு அறிமுகப்படுத்தப்படும். புதிய 1.5L TSI டர்போ பெட்ரோல் GT மற்றும் GT பிளஸ் டிரிம்கள் கிடைக்கும். இதனுடன், 'ஜிடி எட்ஜ் லிமிடெட் கலெக்ஷன்' புதிய வண்ணத் திட்டங்களான டீப் பிளாக் பேர்ல் மற்றும் கார்பன் ஸ்டீல் மேட் ஆகியவற்றுடன் கிடைக்கும்.

மேலும் படிக்க | Maruti Dzire CNG: வெறும் ரூ. 1 லட்சம் கொடுத்து வாங்கலாம், எளிய இஎம்ஐ கணக்கீடு இதோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News