Maruti Dzire CNG: வெறும் ரூ. 1 லட்சம் கொடுத்து வாங்கலாம், எளிய இஎம்ஐ கணக்கீடு இதோ

Maruti Dzire CNG Loan EMI Downpament: மாருதி டிசையர் சிஎன்ஜி வகைகளை வாங்கும் எண்ணம் இருந்து, டவுண்பேமெண்டாக 1 லட்சம் ரூபாய் கொடுக்க முடியும் என்றால், அத்தகைய சூழ்நிலையில், எவ்வளவு ஈஎம்ஐ செலுத்த வேண்டி வரும்

Written by - Sripriya Sambathkumar | Last Updated : May 1, 2023, 07:53 PM IST
  • மாருதி டிசையரின் விஎக்ஸ்ஐ சிஎன்ஜி வகையின் விலை ரூ.8.39 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆகும்.
  • இதன் ஆன்ரோடு விலை சுமார் ரூ.9.44 லட்சம்.
  • இந்த காரை வாங்க ரூ.1 லட்சம் முன்பணம் செலுத்தினால், சுமார் ரூ.8.44 லட்சம் கடன் வாங்க வேண்டி வரும்.
Maruti Dzire CNG: வெறும் ரூ. 1 லட்சம் கொடுத்து வாங்கலாம், எளிய இஎம்ஐ கணக்கீடு இதோ title=

மாருதி டிசையர் சிஎன்ஜி கடன் இஎம்ஐ டவுன்பேமென்ட்: மாருதி சுஸுகி டிசையர் நாட்டில் அதிகம் விற்பனையாகும் செடான் ஆகும். இது LXi, VXi, ZXi மற்றும் ZXi+ டிரிம் நிலைகளில் வருகிறது. இது மொத்தம் 9 வகைகளில் கிடைக்கிறது. இவற்றில் இரண்டு சிஎன்ஜி வகைகள் உள்ளன. டிசையர் விலை ரூ.6.44 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) தொடங்கி ரூ.9.31 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை செல்கிறது. இது 1197cc பெட்ரோல் எஞ்சினுடன் வருகிறது.

அதனுடன் ஹீல் ஃபேக்டரி பொருத்தப்பட்ட சிஎன்ஜி கிட் ஆப்ஷனும் இதில் கிடைக்கிறது. அதன் பெட்ரோல் வகைகளின் மைலேஜ் லிட்டருக்கு 22.61 கிமீ ஆகும். அதே சமயம் சிஎன்ஜி வகைகளின் மைலேஜ் 31.12 கிமீ/கிகி ஆகும். மாருதி டிசையர் சிஎன்ஜி வகைகளை வாங்கும் எண்ணம் இருந்து, டவுண்பேமெண்டாக 1 லட்சம் ரூபாய் கொடுக்க முடியும் என்றால், அத்தகைய சூழ்நிலையில், எவ்வளவு ஈஎம்ஐ செலுத்த வேண்டி வரும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். 

Maruti Dzire VXI CNG: டவுன்பேமெண்ட் மற்றும் இஎம்ஐ

மாருதி டிசையரின் விஎக்ஸ்ஐ சிஎன்ஜி வகையின் விலை ரூ.8.39 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆகும். இதன் ஆன்ரோடு விலை சுமார் ரூ.9.44 லட்சம். இந்த காரை வாங்க ரூ.1 லட்சம் முன்பணம் செலுத்தினால், சுமார் ரூ.8.44 லட்சம் கடன் வாங்க வேண்டி வரும். கடன் காலம் 5 ஆண்டுகள் மற்றும் வட்டி விகிதம் 9% (பொதுவாக இந்த காலம் மற்றும் வட்டிதான் சராசரியாக இருக்கும்) என்று வைத்துக்கொண்டால், அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.17,536 தவணையாக செலுத்த வேண்டி வரும். இதற்கு, நீங்கள் மொத்தம் ரூ.2 லட்சம் வட்டி செலுத்த வேண்டும்.

மேலும் படிக்க | கார் / பைக் டயரில் இந்த பிரச்சனை வருகிறதா? இதோ உங்களுக்கான டிப்ஸ்

Maruti Dzire ZXI CNG: டவுன்பேமெண்ட் மற்றும் இஎம்ஐ

மாருதி டிசையர் இசட்எக்ஸ்ஐ சிஎன்ஜி வகை காரின் விலை ரூ.9.07 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆகும். இதன் ஆன்ரோடு விலை சுமார் ரூ.10.17 லட்சம். டிசையர் இசட்எக்ஸ்ஐ சிஎன்ஜிக்கு ரூ.1 லட்சம் டவுன்பேமென்ட் செய்தால், தோராயமாக ரூ.9.17 லட்சம் கடன் வாங்க வேண்டும். கடன் காலம் 5 ஆண்டுகள் மற்றும் வட்டி விகிதம் 9% என நீங்கள் கருதினால், அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு மாதமும் சுமார் 19,050 ரூபாய் இஎம்ஐ செலுத்த வேண்டும். இதற்கு, நீங்கள் மொத்தம் ரூ.2.25 லட்சம் வட்டி செலுத்த வேண்டும்.

கூடுதல் தகவல்:

இந்திய சந்தையில் ஹேட்ச்பேக் கார்களுக்கு எப்போதும் அதிக தேவை உள்ளது. இந்த பிரிவில் பல்வேறு பிராண்டுகளில் இருந்து ஏராளமான மாடல்கள் கிடைக்கின்றன. ஆனால் சில காலங்களாக ஒரு மாடலுக்கு இந்த பிரிவில் அதிக தேவை ஏற்பட்டுள்ளது. அதுதான் மாருதி சுசுகி பலேனோ. அதற்கான காரணம் என்ன? பல வாடிக்கையாளர்கள் இங்க காரை விரும்பும் அளவு அப்படி இதில் என்ன உள்ளது? இந்த காரைப் பற்றிய முழு விவரங்களை இந்த பதிவில் காணலாம். 

Maruti Suzuki Baleno:மாறுபாடுகள் மற்றும் வண்ணங்கள்

மாருதி சுஸுகி பலேனோ சிக்மா, டெல்டா, ஸீட்டா மற்றும் ஆல்பா ஆகிய நான்கு வகைகளில் இந்திய சந்தையில் கிடைக்கிறது. இந்த பிரீமியம் ஹேட்ச்பேக் கார் சந்தையில் மொத்தம் 6 மோனோடோன் வண்ணங்களில் கிடைக்கிறது. இதில் நெக்சா ப்ளூ, பர்ள் ஆர்டிக் வைட், கிராண்ட்டியூர் கிரே, ஸ்ப்ளெண்டிட் சில்வர், ஓபுலண்ட் ரெட், லக்ஸ் பீஜ் மற்றும் பர்ள் மிட்நைட் பிளாக் ஆகிய வண்ணங்கள் உள்ளன.

(பொறுப்புத் துறப்பு: இந்த தகவல் ஆன்லைன் இஎம்ஐ கால்குலேட்டரின் அடிப்படையில் எடுக்கப்பட்டது. இதில் மாற்றங்கள் சாத்தியமே. ஆகையால், காரை வாங்குவதற்கு முன், சம்பந்தப்பட்ட டீலரிடம் இருந்து நிதி விவரங்களைப் பெறுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.)

மேலும் படிக்க | கார் வாங்கப்போறீங்களா? இந்தியாவின் டாப் 10 பாதுகாப்பான கார்கள் இவைதான்

மேலும் படிக்க | Used Cars: 4 லட்சம் ரூபாயில் கிடைக்கும் சூப்பர் சிஎன்ஜி கார்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News