108MP கேமரா கொண்ட சிறந்த ஸ்மார்ட்போன்கள்: ஸ்மார்ட்போனில் காணப்படும் கேமரா மிக முக்கிய பங்கு வகிக்கிறது. நீங்கள் எங்காவது சென்று, உங்கள் கேமரா நன்றாக இல்லையென்றால், உங்களுக்கு அவமானவமாகிப் போகலாம். பல மகிழ்ச்சிகரமான, நல்ல தருணங்களை நீங்கள் உங்கள் கேமராவில் படம் பிடிக்க முடியாமல் போகலாம். ஆகையால், அனைவரும் நல்ல கேமராக்களை கோண்ட போன்களை வாங்கவே விரும்புகிறார்கள். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

50 அல்லது 64எம்பி அல்ல, 108எம்பி பிரைமரி கேமரா கொண்ட, உங்கள் பட்ஜெட்டுக்குள் வரக்கூடிய ஐந்து ஸ்மார்ட்போன்களைப் பற்றி இந்த பதிவில் காணலாம். பிரைமரி கேமராவுடன் இந்த ஸ்மார்ட்போன்களில் அல்ட்ராவைட் மற்றும் போர்ட்ரெய்ட் லென்ஸையும் பெறலாம். 


இவைதான் அசத்தலான கேமரா கொண்ட ஐந்து சிறந்த ஸ்மார்ட்போன்கள்:


- OnePlus Nord CE 3 Lite 5G: 


ஒன்பிளஸ் நிறுவனம் சமீபத்தில் இந்த ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் 108எம்பி மெயின் கேமரா மற்றும் இரண்டு 2MP கேமராக்கள் கொண்ட டிரிபிள் கேமரா அமைப்பைப் பெறுவீர்கள். ஸ்மார்ட்போனின் விலை ரூ.19,999 முதல் தொடங்குகிறது. முன்பக்கத்தில் 16எம்பி கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.


- Realme 10 Pro 5G: 


இந்த ஸ்மார்ட்போன் பெரிய 5000 mAh பேட்டரி, 108MP முதன்மை கேமரா மற்றும் இரண்டு 2MP கேமராக்களுடன் வருகிறது. செல்ஃபி மற்றும் வீடியோ எடுக்க முன்பக்கத்தில் 16எம்பி கேமரா உள்ளது. 18,999க்கு இந்த ஸ்மார்ட்போனை வாங்கலாம்.


மேலும் படிக்க | Realme: DSLR கேமராவுக்கு போட்டியாக வந்தாச்சு Realme ஸ்மார்ட்போன்..! 200MP கேமரா


- Xiaomi Redmi Note 11 Pro Plus 5G: 


இந்த ஸ்மார்ட்போனில் 108MP முதன்மை கேமரா, 8MP அல்ட்ராவைடு கேமரா மற்றும் 2 MP போர்ட்ரெய்ட் லென்ஸ் ஆகியவற்றை பயனர்கள் பெறலாம். முன்பக்கத்தில் 16எம்பி கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இதன் விலை ரூ.20,999 ஆகும். இந்த தொலைபேசி 5000 mAh பேட்டரி மற்றும் ஸ்னாப்டிராகன் 695 சிப்செட் ஆதரவைக் கொண்டுள்ளது.


- Samsung Galaxy M53 5G: 


சாம்சங்கின் இந்த ஸ்மார்ட்போனின் விலையும் ரூ.20,999 ஆகும். இதில், பயனர்கள் பின்புறத்தில் நான்கு கேமராக்களைப் பெறுவார்கள். இதில் 108MP பிரதான கேமரா, மற்றொரு 8MP மற்றும் இரண்டு 2MP கேமராக்கள் உள்ளன. முன்பக்கத்தில் 32 மெகாபிக்சல் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.


- Realme 9: 


ரியல்மீ நிறுவனத்தின் இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.16,999 ஆகும். இதில், பயனர்கள் 5000 mAh பேட்டரி, 16MP முன் கேமரா மற்றும் Snapdragon 680 சிப்செட் ஆகியவற்றின் ஆதரவைப் பெறுவார்கள். போனின் பின்புறத்தில் 108MP பிரதான கேமரா, 8MP அல்ட்ராவைடு கேமரா மற்றும் 2MP மூன்றாவது கேமரா உள்ளது.


உங்கள் விருப்பப்படி இந்த ஸ்மார்ட்போன்களில் ஏதேனும் ஒன்றை நீங்கள் வாங்கலாம். இந்த ஸ்மார்ட்போன்களில் சிலவற்றில், இ-காமர்ஸ் இணையதளங்களில் பயனர்களுக்கு தள்ளுபடி வழங்கப்படுகிறது.


மேலும் படிக்க | iPhone 13 விலையில் வீழ்ச்சி: பிளிப்கார்ட் சலுகையால் குஷியில் வாடிக்கையாளர்கள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ