Realme: DSLR கேமராவுக்கு போட்டியாக வந்தாச்சு Realme ஸ்மார்ட்போன்..! 200MP கேமரா

டிஎஸ்எல்ஆர் கேமராவுக்கு இணையான கேமரா குவாலிட்டியுடன் ரியல்மீ புதிய ஸ்மார்ட்போன் களமிறக்குகிறது. 200 எம்பி கேமரா குவாலிட்டி இருக்கும் என்ற தகவல் வெளியாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.    

Written by - S.Karthikeyan | Last Updated : Apr 27, 2023, 02:12 PM IST
Realme: DSLR கேமராவுக்கு போட்டியாக வந்தாச்சு Realme ஸ்மார்ட்போன்..! 200MP கேமரா  title=

ரியல்மி நிறுவனம் 11 சீரிஸ் மொபைல்களை மே 10 ஆம் தேதி சீனாவில் அறிமுகப்படுத்த உள்ளது. ஆனால் எத்தனை மொபைல்கள் வழங்கப்படும் என்பதை நிறுவனம் தெரிவிக்கவில்லை. ஆனால் வெளியாகியிருக்கும் தகவலின்படி, Realme 11 Pro+ உடன் Realme 11 மற்றும் Realme 11 Pro ஆகிய மொபைல்கள் களமிறக்கப்படும் என்று கூறப்படுகிறது. இப்போது வெளியாகியிருக்கும் டீசரில் மொபைல் சிறப்பான வடிவமைப்புடன் உள்ளது. குறிப்பாக, கேமரா மிகப்பெரிய கவனத்தை ஈர்த்திருக்கிறது.

மேலும் படிக்க | iPhone 13 விலையில் வீழ்ச்சி: பிளிப்கார்ட் சலுகையால் குஷியில் வாடிக்கையாளர்கள்

Realme 11 Pro+ க்கு லெதர் பேக் 

Realme 11 Pro+-ன் சமீபத்திய டீஸர், ஸ்மார்ட்போன் தங்கம் மற்றும் கருப்பு நிற ஷேடோவுடன் டூயல் வடிவமைப்புடன் இருக்கிறது. பின்புறத்தில் ஒரு பெரிய வட்ட கேமரா தொகுதியைக் கொண்டிருக்கும். கேமரா அமைப்பில் 200 எம்பி பிரைமரி கேமரா இருக்கும். ஆனால் மற்ற இரண்டு சென்சார்கள் பற்றிய தகவல் சஸ்பென்ஸாக வைக்கப்பட்டிருக்கிறது. கேமராவுக்கு மேற்புறத்தில் எல்இடி ப்ளாஷ் உள்ளது.

Realme 11 Pro+ வடிவமைப்பு

தொலைபேசியின் வடிவமைப்பிற்காக, முன்னாள் GUCCI வடிவமைப்பாளர் மேட்டியோ மெனோட்டோவுடன் Realme கூட்டு சேர்ந்துள்ளது. இந்த மொபைல் வளைந்த பின்புறம் மற்றும் சட்டத்துடன், 'சன்ரைஸ் சிட்டி' என்ற பெயரைக் கொண்ட பழுப்பு நிற ஃபாக்ஸ் லெதர் பேனலைக் கொண்டுள்ளது. பின் பேனலில் தங்கம் மற்றும் வெள்ளி ஸ்டிச் கொண்ட செங்குத்து பட்டை உள்ளது. மேலும், போனின் பிரேம் தங்க நிறத்தில் உள்ளது. பவர் மற்றும் வால்யூம் பட்டன்கள் மொபைலின் வலது பக்கத்தில் உள்ளன. சிம் ட்ரே, USB டைப்-சி போர்ட் மற்றும் ஸ்பீக்கர் கிரில் ஆகியவை கீழ் விளிம்பில் அமைந்துள்ளன.

Realme 11 Pro+ விவரக்குறிப்புகள்

Realme 11 Pro+ ஆனது 120Hz புதுப்பிப்பு வீதம் மற்றும் முழு HD+ தெளிவுத்திறனுடன் கூடிய பெரிய 6.7-இன்ச் AMOLED டிஸ்ப்ளேவைப் பெறும். இந்த போன் Dimensity 7-series செயலி மூலம் இயக்கப்படும். மேலும், 100W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் சக்திவாய்ந்த 5,000mAh பேட்டரியை போன் பேக் செய்யும் என்று ஊகிக்கப்படுகிறது.

மேலும் படிக்க | மே 1 முதல் அமலுக்கு வரும் புதிய விதி..! அழைப்புகள், SMS-ல் மிகப்பெரிய மாற்றம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News