Amazon Great Indian Festival Sale 2023: அமேசான் கிரேட் இந்தியன் தள்ளுபடி விற்பனை கடந்த அக்டோபர் மாதம் முதல் நடைபெற்று வருகிறது. அதில், ஸ்மார்ட்போன்கள், ஸ்மார்ட் டிவி, ஹெட்ஃபோன்கள், ப்ளுடூத் ஸ்பீக்கர்கள் உள்ளிட்ட எலெக்ட்ரானிக் சாதனங்கள் பெரும் தள்ளுபடியில் கிடைக்கின்றன.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அந்த வகையில், மடிக்கணினிகளுக்கும் பெரும் தள்ளுபடி வழங்கப்படுகிறது. கொரோனா தொற்றுக்கு பின் வீட்டில் இருந்து வேலை செய்யும் வழக்கம் அதிகரித்துவிட்டதால் தற்போது மடிக்கணினியின் தேவையும் அதிகரித்துள்ளது. அதுமட்டுமின்றி, குழந்தைகளின் கல்விக்கும் மடிக்கணினிகளின் தேவை தற்போது அதிகமாக உள்ளது. ஸ்மார்ட்போன்கள், டேப்கள், கணினிகள் போன்றவற்றைவிட மடிக்கணினியை எங்கு வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் கொண்டு செல்லலாம் என்பதால் அதை வாங்கவே பலரும் விரும்புகின்றனர். 


இந்நிலையில், Acer, HP, ASUS, Lenovo, Dell உள்ளிட்ட தயாரிப்பு நிறுவனங்களின் மடிக்கணினிகளில் சிறந்த சலுகைகள் தற்போது அமேசான் கிரேட் இந்தியன் தள்ளுபடி விற்பனையில் உள்ளன. இந்த மடிக்கணினிகள் மிகவும் மெல்லியதாகவும் எடை குறைந்ததாகவும் இருக்கும் என்பதை நினைவில் கொள்ளவும். HD டிஸ்ப்ளேவுடன் வலுவான பேட்டரியும் இத்துடன் கிடைக்கிறது. அதில், சிறந்த 5 லேப்டாப்களை இங்கு காணலாம். 


மேலும் படிக்க | நாய், பூனைகள் பேசுவதை புரிந்துகொள்ளலாம்... மிரட்டும் AI - முழு விவரம்!


ASUS Vivobook 15


அந்த நிறுவனத்தின் விலை 76 ஆயிரத்து 990 ரூபாய் ஆகும். ஆனால் அமேசானில் தற்போது 49 ஆயிரத்து 990 ரூபாய்க்கு கிடைக்கிறது. சுமார் 27 ஆயிரம் ரூபாய் வரை தள்ளுபடி இருந்தது. இந்த லேப்டாப் 15.6 இன்ச் நானோ எட்ஜ் டிஸ்ப்ளேவில் வருகிறது. இதில் விண்டோஸ் 11 OS உள்ளது. 


Dell 14 Laptop 


இந்த மடிக்கணினியின் விலை 45 ஆயிரத்து 181 ரூபாயாகும். ஆனால் அமேசானில் இதன் விலை 33 ஆயிரத்து 490 ரூபாயாகும். இதில் 14 இன்ச் டிஸ்ப்ளே உள்ளது. இது பெரிய டச்பேடுடன் முழு அளவிலான விசைப்பலகையைக் கொண்டுள்ளது. இது மிகவும் மெல்லியதாகவும், எடை குறைந்ததாகவும் உள்ளது.


HP Laptop 15s


HP நிறுவனத்தின் இந்த மடிக்கணியின் அசல் விலை 64 ஆயிரத்து 235 ரூபாய் ஆகும். ஆனால் அமேசானில் 48 ஆயிரத்து 990 ரூபாய்க்கு கிடைக்கிறது. சுமார் 16 ஆயிரம் ரூபாய் அளவில் தள்ளுபடி கிடைக்கிறது.  மடிக்கணினியில் 250 nits பிரகாசம், முழு HD டிஸ்ப்ளே, பேக்லிட் கீபோர்டு மற்றும் டூயல் ஸ்பீக்கர்கள் உள்ளன. அதன் எடையும் மிகவும் குறைவுதான்.


Acer Aspire 3


இந்த மடிக்கணினியின் அசல் விலை 48 ஆயிரத்து 999 ரூபாய் ஆகும். ஆனால் அமேசானில் தற்போது தற்போது 31 ஆயிரத்து 990 ரூபாயில் கிடைக்கிறது. அதாவது சுமார் 17 ஆயிரம் ரூபாய் தள்ளுபடி ஆகிறது. இந்த லேப்டாப் 15.6 இன்ச் முழுமையான HD டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இது 8 GB RAM மற்றும் 512 GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் கொண்டிருக்கிறது. இது 2-இன்-1 டிஜிட்டல் மைக்ரோஃபோன் மற்றும் HD வெப்கேமில் கட்டமைக்கப்பட்டுள்ளது. சக்தி வாய்ந்த பேட்டரியையும் கொண்டுள்ளது.


Lenovo IdeaPad Slim 3


இந்த மடிக்கணினியின் அசல் விலை 79 ஆயிரத்து 690 ரூபாயாகும். ஆனால் அமேசானில் தற்போது 52 ஆயிரத்து 990 ரூபாய்க்கு கிடைக்கிறது. இதுவும் சுமார் 27 ஆயிரம் ரூபாய் வரை தள்ளுபடியில் கிடைக்கிறது. மடிக்கணினியில் 720P கேமரா மற்றும் கோர் i7 CPU மாடல் உள்ளது. அதன் வடிவமைப்பு மிகவும் மெல்லியதாக உள்ளது.


மேலும் படிக்க | 4 ஜிபி டேட்டா இலவசம்... இதை செய்தால் போதும் - தீபாவளிக்கு பம்பர் பரிசை வழங்கும் BSNL


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ