பெட்ரோல் - டீசல் விலையேற்றத்தால் சிறந்த மைலேஜ் கொடுக்கும் பைக்குகளை மக்கள் அதிகம் தேடுகின்றனர். அவர்களுக்காக அதிக மைலேஜ் கொடுக்கும் 4 பைக்குகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. அதுவும் குறைவான பட்ஜெட் விலையில் கிடைக்கின்றன.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஹீரோ HF டீலக்ஸ்


இந்த பைக்கில் 97.2சிசி, ஏர்-கூல்டு, 4-ஸ்ட்ரோக் சிங்கிள்-சிலிண்டர் OHC இன்ஜின் இருக்கும். அதிகபட்சமாக 8.24 bhp பவரையும், 8.05Nm உச்ச முறுக்குவிசையையும் உருவாக்குகிறது. இது 4-ஸ்பீடு கியர்பாக்ஸ் டிரான்ஸ்மிஷன் இருக்கும். இந்த பைக் அதிகபட்சமாக  83 kmpl மைலேஜ் தருவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. டெல்லி எக்ஸ்ஷோரூம் விலை 56,070 ரூபாயாகும். அதிகபட்சமாக 64,520 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. 


மேலும் படிக்க | குறைந்த பட்ஜெட்டில் அசத்தலான பைக்குகளை வாங்கணுமா? சிறந்த பைக்குகளின் பட்டியல் இதோ


பஜாஜ் CT 110X


ஒரே ஒரு வேரியண்டில் வரும் இந்த பைக், 115 cc DTS-i இன்ஜினை கொண்டிருக்கும். அதிகபட்சமாக 8.4 bhp பவரையும், 9.81 Nm உச்ச முறுக்குவிசையையும் உருவாக்குகிறது. இதன் தொடக்க டெல்லி எக்ஸ்ஷோரூம் விலை ரூ.59,104.


டிவிஎஸ் ரேடியான்


டிவிஎஸ் நிறுவனத்தின் விலை குறைந்த பைக் இதுவாகும். இதன் தொடக்க டெல்லி எக்ஸ்ஷோரூம் விலை ரூ.59,925.  அதிகபட்சமாக ரூ.74,966 விரை விற்பனையாகிறது. இது லிட்டருக்கு 69 கிமீ மைலேஜ் தரும். இது மணிக்கு 95 கிமீ வேகத்தில் செல்லும்.


ஹீரோ எச்எஃப் 100


நாட்டிலேயே விலை குறைந்த பைக் இதுதான். Hero HF 100 ஒரே ஒரு வேரியண்டில் மட்டுமே கிடைக்கிறது. டெல்லியில் எக்ஸ்ஷோரூம் விலையான 51,450 ரூபாயில் விற்பனையாகிறது.  இந்த பைக்கில் 97.2 சிசி 4-ஸ்ட்ரோக் ஏர்-கூல்டு இன்ஜின் இடம் பெற்றிருக்கும். அதிகபட்சமாக 8,000 ஆர்பிஎம்மில் 7.91 பிஎச்பி ஆற்றலையும், 5,000 ஆர்பிஎம்மில் 8.05 என்எம் உச்ச முறுக்குவிசையையும் உருவாக்குகிறது. இதன் இன்ஜினில் 4-ஸ்பீடு கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. இது லிட்டருக்கு 70 கிமீ மைலேஜ் தரும்.


மேலும் படிக்க | கார் வாங்கணுமா? இந்த மாதம் வாங்கினால் கிடைக்கும் அதிரடி தள்ளுபடிகள், சலுகைகள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR