கார் வாங்கணுமா? அசத்தலான மைலேஜுடன் பட்ஜெட்டுக்குள் வரும் 5 டாப் கார்கள்
வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப விற்பனையை சிறப்பான முறையில் பராமரிக்கும் வகையில், அனைத்து பெரிய வாகன உற்பத்தி நிறுவனங்களும் குறைந்த பட்ஜெட் கார்களை சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளன.
இந்தியாவில் உள்ள பெரும்பாலான மக்கள் மலிவு விலை கார்களை விரும்புகிறார்கள். பணத்திற்கான மதிப்பைப் பெறுவதுடன், காரின் மைலேஜும் மக்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப விற்பனையை சிறப்பான முறையில் பராமரிக்கும் வகையில், அனைத்து பெரிய வாகன உற்பத்தி நிறுவனங்களும் குறைந்த பட்ஜெட் கார்களை சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளன.
இதில் சமீபத்தில் சேர்ந்துள்ள கார் மாருதி சுசுகி செலிரியோ (Maruti Suzuki Celerio). இது 5 லட்சம் பட்ஜெட்டில் இருப்பது மட்டுமல்லாமல், அதன் மைலேஜும் வலுவானதாக உள்ளது. உங்கள் பட்ஜெட்டிற்குள் சிறந்த மைலேஜ் அளிக்கும் அசத்தலான கார்களைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.
மாருதி சுஸுகி செலிரியோ
மாருதி சுஸுகி இந்தியா, 2021 ஆம் ஆண்டிற்கான புதிய தலைமுறை செலிரியோவை ரூ.4.99 லட்சம் என்ற ஆரம்ப எக்ஸ்ஷோரூம் விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த விலை டாப் மாடலுக்கு ரூ.6.94 லட்சம் வரை உயர்கிறது. முதன்முறையாக, ஒரு லிட்டருக்கு 26.68 கிமீ மைலேஜ் தரும் புதிய தலைமுறை 1.0 லிட்டர் கே-சீரிஸ் பெட்ரோல் எஞ்சினை இந்த காருடன் நிறுவனம் வழங்கியுள்ளது. இந்த எஞ்சின் முந்தைய மாடலை விட 23 சதவீதம் அதிக எரிபொருளைச் சேமிக்கிறது என்றும், இந்திய பயணிகள் கார் சந்தையில் (Indian Passenger Car Market) அதிக பெட்ரோல் சேமிக்கும் கார் இது என்றும் நிறுவனம் கூறுகிறது.
டாடா பஞ்ச்
டாடா மோட்டார்ஸ் (Tata Motors) சமீபத்தில் பஞ்ச் மைக்ரோ எஸ்யூவியை ரூ.5.49 லட்சம் ஆரம்ப எக்ஸ்ஷோரூம் விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது. டாடா பஞ்சின் டாப் மாடலின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.8.79 லட்சம் வரை உயர்கிறது. இது நிறுவனத்தின் சப்-4 மீட்டர் SUV ஆகும். இது Tata Nexon க்கு கீழே வைக்கப்பட்டுள்ளது.இந்த காரில், 84 பிஎச்பி பவரையும், 113 என்எம் பீக் டார்க்கையும் வழங்கும் 1.2 லிட்டர் ரெவெட்ரான் பெட்ரோல் எஞ்சின் உள்ளது. இந்த காரில் வலுவான எஞ்சின் கிடைத்தாலும், ஒரு லிட்டர் பெட்ரோலில் இது சுமார் 19 கிமீ மைலேஜ் தருகிறது.
ALSO READ: Maruti Suzuki Celerio இன்று இந்திய சாலைகளில் களமிறங்கும்: விலை, பிற விவரங்கள் இதோ
மாருதி சுஸுகி ஆல்டோ
மாருதி சுஸுகி (Maruti Suzuki) ஆல்டோ நீண்ட காலமாக வாடிக்கையாளர்களின் முதல் தேர்வாக இருக்கிறது. ஆல்டோவின் ஆரம்ப விலை ரூ.3.15 லட்சம் ஆகும். இது டாப் மாடலுக்கு ரூ.4.38 லட்சமாக உயர்கிறது. இந்த காரில் 796 சிசி, 3-சிலிண்டர், 12-வால்வு எஞ்சின், 47.33 பிஎச்பி பவரையும், 69 என்எம் பீக் டார்க்கையும் உருவாக்குகிறது. இந்த காரின் எஞ்சின் பெட்ரோலின் அடிப்படையில் மிகவும் சிக்கனமானது மற்றும் ஒரு லிட்டரில் இது 22.05 கிமீ வரை இயங்கும். இந்த கார் நடுத்தர குடும்பங்களின் முதல் தேர்வாக உள்ளது.
Datsun Redi GO
Datsun India redi-GO இந்திய சந்தையில் மிகவும் விரும்பப்படுகிறது. இந்த காரின் ஆரம்ப எக்ஸ்ஷோரூம் விலை ரூ.3.98 லட்சமாக உள்ளது. இது டாப் மாடலுக்கு ரூ.4.96 லட்சமாக உயர்கிறது. 54 பிஎச்பி பவரையும், 72 என்எம் பீக் டார்க்கையும் வழங்கும் 0.8 லிட்டர் பெட்ரோல் எஞ்சினை நிறுவனம் இந்த காரில் பொருத்தியுள்ளது. இந்த காரில் 67 பிஎச்பி பவரையும், 91 என்எம் டார்க் திறனையும் வழங்கும் 1.0 லிட்டர் எஞ்சினுடன் இணைக்கப்பட்டுள்ளது. டாட்சன் வழக்கமாக காருடன் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸை வழங்கியது, அதே நேரத்தில் காரின் 1.0-லிட்டர் எஞ்சின் AMT விருப்பத்தையும் பெறுகிறது.
ரெனால்ட் க்விட்
Renault Kwid இன் ஃபேஸ்லிஃப்ட் மாடல் அறிமுகப்படுத்தப்பட்டு அதிக நாட்கள் ஆகவில்லை. தோற்றம் மற்றும் அம்சங்களில் பல மாற்றங்களுடன் நிறுவனம் இதனை சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.4.06 லட்சம் ஆகும். இது டாப் மாடலுக்கு ரூ.5.59 லட்சம் வரை செல்கிறது. ஒரு லிட்டர் பெட்ரோலில், இந்த காரை 22.3 கிமீ வரை ஓட்ட முடியும். நிறுவனம் இந்த காரில் 0.8 லிட்டர் மற்றும் 1.0 லிட்டர் எஞ்சின்களை நிறுவியுள்ளது. ரெனால்ட் இந்தியா இந்த காருக்கு சக்திவாய்ந்த அம்சங்களை வழங்கியுள்ளது, இதன் காரணமாக இது பணத்திற்கான மதிப்பாக மாறியுள்ளது.
ALSO READ: ரூ. 1 லட்சம் வரை தள்ளுபடி, 2 ஆண்டுகளுக்கான இலவச சர்வீசிங்: அசத்தும் Ola Cars
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR