Maruti Suzuki Celerio இன்று இந்திய சாலைகளில் களமிறங்கும்: விலை, பிற விவரங்கள் இதோ

'இந்தியாவின் மிகச்சிறந்த எரிபொருள் சிக்கன பெட்ரோல் கார்', மாருதி செலிரியோ இன்று இந்தியச் சாலைகளில் களமிறங்கும். இது எரிபொருள் சிக்கன காராக இருப்பதால், இந்த காரின் அறிமுகம் மக்களுக்கு பெரிய நிவாரணமாக வந்துள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 10, 2021, 12:19 PM IST
  • இந்தியாவின் மிகச்சிறந்த எரிபொருள் சிக்கன பெட்ரோல் கார் அறிமுகம்.
  • செலிரியோ இரண்டு முன்பக்க ஏர் பேக்குகள், ஏபிஎஸ் மற்றும் கன்சோல் பேனலில் கேமராவுடன் ரிவர்சிங் சென்சார் ஆகியவற்றைக் கொண்டிருக்கும்.
  • மாருதி சுசுகி செலிரியோ ஆரம்பத்தில் பெட்ரோல் வேரியண்டில் வரும்.
Maruti Suzuki Celerio இன்று இந்திய சாலைகளில் களமிறங்கும்: விலை, பிற விவரங்கள் இதோ title=

'இந்தியாவின் மிகச்சிறந்த எரிபொருள் சிக்கன பெட்ரோல் கார்', மாருதி செலிரியோ இன்று இந்தியச் சாலைகளில் களமிறங்கும். அதிகரித்து வரும் எரிபொருள் பிரச்சனையால் மக்கள் ஏற்கனவே பெரும் தொல்லையில் உள்ளனர். இது எரிபொருள் சிக்கன காராக இருப்பதால், இந்த காரின் அறிமுகம் மக்களுக்கு பெரிய நிவாரணமாக வந்துள்ளது.

மாருதி சுஸுகி (Maruti Suzuki) இன்று (நவம்பர் 10 ஆம் தேதி) செலிரியோவை அறிமுகப்படுத்தும். இது இளைஞர்கள் மற்றும் கார் பிரியர்களை குறி வைத்து வடிவமைக்கப்பட்டுள்ளது.

புதிய தொடுதிரை கன்சோல், புஷ் பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப், ஆட்டோ இன்ஜின் ஸ்டார்ட்/ஸ்டாப், மல்டி-ஃபங்க்ஷன் ஸ்டீயரிங் வீல் போன்றவை வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு இதில் அமைந்திருக்கும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

மாருதி சுசுகி செலிரியோ (Maruti Suzuki Celerio) ஆரம்பத்தில் பெட்ரோல் வேரியண்டில் வரும். எனினும், நிறுவனம் சில நாட்களில் சிஎன்ஜி டிரிம்-ஐ சேர்க்கும் என்று கூறப்படுகின்றது. அறிமுக தேதி அறிவிப்புக்கு முன், மாருதி சுஸுகி, செலிரியோவிற்கான முன்பதிவுகளை வெறும் ₹11,000 முதல் தொடங்கியது. எனவே, கார் மலிவு விலை காராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ALSO READ: Best Mileage தரும் கார் இதுதான்: Maruti-யின் அசத்தலான காரின் புக்கிங் துவங்குகிறது!!

2021 செலிரியோ, புதிய ஸ்வீப்-பேக் ஹெட்லேம்ப்கள், எல்இடி ஹெட்லைட்கள், புதிய பம்பர் மற்றும் ஃபிளேர்ட் வீல் ஆர்ச்சுகள் வரை குரோம் பட்டையுடன் புதிய கிரில்லைப் பெறுகிறது. உட்புறம் முழுவதும் கருப்பு தீம், கேபின் முழுவதும் ஃபாக்ஸ் அலுமினிய அக்செண்டுகள், செங்குத்து ஏசி வென்ட்கள் அகியவை இதில் உள்ளன.

பாதுகாப்புக்காக, செலிரியோ இரண்டு முன்பக்க ஏர் பேக்குகள், ஏபிஎஸ் மற்றும் கன்சோல் பேனலில் கேமராவுடன் ரிவர்சிங் சென்சார் ஆகியவற்றைக் கொண்டிருக்கும். கார் ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோவை ஆதரிக்கிறது.

மாருதி சுஸுகி இந்தியாவில் தனது இந்த செலிரியோ காரை (Car) வேகன்ஆர் போன்ற எஞ்சின்களுடன் அறிமுகம் செய்யும் . அதாவது 1.0 லிட்டர் மூன்று சிலிண்டர் K10 பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் இடையே தேர்வு செய்துகொள்ளலாம். டிரான்ஸ்மிஷன் விருப்பங்கள், ஐந்து-வேக மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஐந்து-வேக AMT ஆகியவையும் மாருதி வேகன்ஆர் போல் இதிலும் இருக்கலாம்.

மாருதி சுஸுகி, செலிரியோவின் விலையை சுமார் ₹4.5 லட்சம் என (எக்ஸ்-ஷோரூம்) வைத்திருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முந்தைய மாடல்கள் ₹4.66 லட்சம் முதல் ₹6.1 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம்) கிடைக்கின்றன.

ALSO READ: Maruti Suzuki மின்சார கார்: எப்போது அறிமுகம்? விவரம் இதோ

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News