JioFiber Airtel Fiber Monthly Plans: கொரோனாவுக்கு பின் ஒவ்வொருவரின் வாழ்க்கைச் சூழலும் பெரிய மாற்றத்தை சந்தித்துவிட்டது எனலாம். கொரோனாவின் தாக்கம் இல்லாத எவ்வித துறையையும் இந்த காலகட்டத்தில் நாம் பார்க்கவே முடியாது. கோவிட் காலகட்டம் பல்வேறு துறைகளை தலைகீழாக புரட்டிப்போட்டுவிட்டது எனலாம். அதில் முக்கியமான ஒன்று கல்வித்துறை. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பள்ளி, கல்லூரி மாணவர்கள் கொரோனா காலகட்டத்தில் பெரும்பாலும் ஆன்லைன் கிளாஸ் மூலமே கல்வி கற்றனர். இதனால், அவர்களுக்கு லேப்டாப், டேப்லெட், இணையம் என அனைத்திலும் நல்ல பரீட்சயம் உண்டானது எனலாம். ஆன்லைன் கல்வி என்பது வருங்காலத்தில் கல்வியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என முன்னரே கணித்திருந்தாலும் கோவிட் அதனை முன்கூட்டியே சாத்தியப்படுத்தியது எனலாம். 


மாணவர்கள் மட்டுமின்றி ஆசிரியர்களும் ஆன்லைன் மூலம் பாடம் நடத்துவதற்கான பயிற்சியை கொரோனா காலகட்டத்தில் மேற்கொண்டனர் எனலாம். காலத்திற்கு ஏற்றாற்போல் ஆசிரியர்களும் அப்டேட் ஆக வேண்டும் என்பதற்கு இவை உதாரணமாக அமைந்தது. அந்த வகையில், மாணவர்கள், ஆசிரியர்கள் என அனைவரும் வீட்டில் இணைய சேவையை வைத்திருப்பதும் கட்டாயமானது.


மேலும் படிக்க | செகன்ட் ஹேண்டில் வாங்க டாப் 5 பைக்குள் லிஸ்ட் இதுதான்! காசு மிச்சம், செலவும் குறைவு


அந்த வகையில், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஏற்ற அதிக வேக இணைய சேவையை வழங்கும் ஆஃப்டிக்கல் ஃபைபர் திட்டங்கள் குறித்து இங்கு காணலாம். தற்போது சந்தையில் ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகியவை பிரபலமாக காணப்படும் நிலையில், அந்த இரண்டு நிறுவனங்கள் வழங்கும் பல்வேறு மாதாந்திர திட்டங்களை இங்கு காணலாம். அதன்படி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு உபயோகமளிக்கும் முதலில் ஏர்டெல் ஃபைபர் வழங்கும் மாதாந்திர திட்டங்களையும், அடுத்து ஜியோ ஃபைபர் வழங்கும் மாதாந்திர திட்டங்களையும் காணலாம். 


ஏர்டெல் ஃபைபர் வழங்கும் மாதாந்திர திட்டங்கள் 


40Mbps திட்டம்: ஏர்டெல் ஃபைபர் மூலம் நீங்கள் புதிய இணைப்பைப் பெற விரும்பினால், 40Mbps வேகத்தில் வரம்பற்ற டேட்டாவை (Unlimited Data) வழங்கும் 499 ரூபாய் திட்டத்தை நீங்கள் பெறலாம். இந்த திட்டத்தில் Wynk மியூசிக் மற்றும் பிற சேவைகள் உங்களுக்கு கிடைக்கும்.


100Mbps திட்டம்:  அதிவேக இணைப்பை பெற இந்த 100Mbps திட்டத்தை நீங்கள் தேர்வு செய்யலாம், இதன் விலை 799 ரூபாய் ஆகும். இதனால் வாடிக்கையாளர்களுக்கு Wynk Music, Xstream Premium மற்றும் Apollo 24×7 ஆகியவற்றின் இலவச சந்தாக்களும் ஒரு மாதத்திற்கு கிடைக்கும். வழங்குகிறது. இருப்பினும், இணையம் வரம்பு 3,500 ஜிபி டேட்டா ஆகும். அதன் பிறகு வேகம் குறைந்துவிடும்.


200Mbps திட்டம்: இன்னும் அதிவேகமான இணையம் தேவை என்றால் இந்த 200Mbps திட்டத்தை நீங்கள் தேர்வு செய்யலாம். இதன் விலை மாதத்திற்கு 999 ரூபாய் ஆகும். Wynk Music, டிஸ்னி+ ஹாட்ஸ்டார், அமேசான் பிரைம் வீடியோ, Apollo 24×7, Xstream Premium ஆகியவற்றுக்கான இலவச சந்தாக்களை பெறலாம்.


ஜியோ ஃபைபர் வழங்கும் மாதாந்திர திட்டங்கள்


30Mbps திட்டம்: 399 ரூபாய்க்கு ஜியோ ஃபைபர் வழங்கும் இந்த மாதாந்திர திட்டத்தில் வரம்பற்ற பிராட்பேண்ட் டேட்டாவை பெறலாம். இருப்பினும், இந்த திட்டத்தில் வேறு பயன்கள் இருக்காது. 


100Mbps திட்டம்: உங்களுக்கு அதிவேக இணையத்தை வழங்கும். இந்த திட்டத்தை 699 ரூபாயில் பெறலாம். இது 100Mbps வேகத்தில் 30 நாட்களுக்கு வரம்பற்ற இணையத்தை வழங்கும்.


150Mbps திட்டம்: இன்னும் அதிவேக இணையம் தேவையென்றால் ஜியோ ஃபைபர் வழங்கும் 150Mbps திட்டத்தை பெறலாம். இதனை 999 ரூபாய்க்கு நீங்கள் வாங்கலாம். இதில் அமேசான் பிரைம், டிஸ்னி+ ஹாட்ஸ்டார்,  SonyLIV, ZEE5 மற்றும் 800க்கும் மேற்பட்ட சேனல்களுடனான டிவி சேவை போன்ற OTT பலன்கள் கிடைக்கும்.


மேலும் படிக்க | BSNL சூப்பர் டூப்பர் ரீச்சார்ஜ் பிளான்! 252 ஜிபி டேட்டா 84 நாட்கள் வேலிடிட்டி கம்மி விலையில்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ