2023இன் சிறந்த லேப்டாப்கள்... படிக்க, வேலை பார்க்க, கேம் விளையாட... தரமான டாப் 4 மாடல்கள்!
Year Ender 2023: 2023ஆம் ஆண்டின் சிறந்த மடிக்கணினிகளையும், குறிப்பாக ரூ. 60 ஆயிரத்திற்கும் குறைவான மலிவு விலையில் கிடைக்கும் மாடல்களையும் இதில் காணலாம்.
Year Ender 2023, Best Laptops: 2024 புத்தாண்டு இன்னும் சில நாள்களில் பிறக்கப்போகிறது. நடப்பு 2023ஆம் ஆண்டின் கடைசி வாரத்தில் நாம் இருக்கிறோம். இந்த கடைசி வாரத்தில் இந்தாண்டு வெளியான முக்கிய தயாரிப்புகளை நினைவுக்கூர்வது அவசியமாகும். அந்த வகையில், வெளியான முக்கிய மடிக்கணினிகள் குறித்து இதில் காணலாம்.
இந்த ஆண்டு ஆப்பிள், டெல், ஆசஸ் உள்ளிட்ட பல முன்னணி நிறுவனங்கள் பல லேப்டாப்களை சந்தையில் அறிமுகப்படுத்தின. இந்த மடிக்கணினிகள் அனைத்தும் சமீபத்திய தொழில்நுட்பம் மற்றும் முக்கிய அம்சங்களுடன் வந்திருந்தன. அதன் அபார செயல்திறன் மற்றும் மலிவான விலை காரணமாக, இந்த லேப்டாப்கள் சந்தையில் பேசுபொருளாகவும் இருந்தன.
கொரோனாவுக்கு பிந்தைய காலகட்டத்தில் மடிக்கணினிகளின் தேவைகள் அதிகமாகிவிட்டது. வீட்டில் இருந்து வேலை பார்ப்பது (Work From Home), பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், தொழில் வல்லுநர்கள் ஆகியோருக்கு மடிகணினிகள் தேவைப்படுகின்றன. இப்போது 2024 புத்தாண்டு தொடங்கும் முன், 2023ஆம் ஆண்டின் சிறந்த மடிக்கணினிகளையும், குறிப்பாக ரூ. 60 ஆயிரத்திற்கும் குறைவான மலிவு விலையில் கிடைக்கும் மாடல்களையும் இதில் காணலாம்.
ASUS Vivobook 16X (2022)
இந்த லேப்டாப்பில் 16ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி எஸ்எஸ்டி உள்ளது. லேப்டாப்பில் AMD Ryzen 7 5800HS பிராஸஸர் பொருத்தப்பட்டுள்ளது. இதில் AMD ரேடியான் வேகா 7 கிராபிக்ஸை ஆதரிக்கும் 16-இன்ச் FHD+ டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இதில் விண்டோஸ் 11 மற்றும் MS Office 2021 ஆகியவை லேப்டாப்பில் முன்பே ஏற்றப்பட்டுள்ளன. இதை வாங்க விரும்பினால் அமேசானில் 57 ஆயரித்து 990 ரூபாய்க்கு ஆர்டர் செய்யலாம்.
மேலும் படிக்க | 400 ரூபாய்க்கு 12 OTT, அன்லிமிடெட் 5G டேட்டா: ஜியோவின் புதிய சலுகை
HP Victous Gaming Laptop
ரூ.60 ஆயிரத்திற்கும் குறைவான விலையில் நல்ல லேட்டஸ்ட் கேமிங் லேப்டாப்பை வாங்க விரும்பினால், இது உங்களுக்கு சிறந்த ஆப்ஷனாக இருக்கும். இதில் நீங்கள் சிறந்த கேமிங் அனுபவத்தைப் பெறுவீர்கள். இது 6 Core AMD Ryzen 5 5600H பிராஸஸர் மற்றும் 4ஜிபி AMD Radeon RX 6500M கிராபிக்ஸ் கார்டை கொண்டுள்ளது.
இதில் நீங்கள் சிறந்த வீடியோ கேம்களையும் எளிதாக விளையாடலாம். இந்த லேப்டாப் மைக்ரோ எட்ஜ் 15.6 இன்ச் டிஸ்ப்ளே மற்றும் 144Hz புதுப்பிப்பு வீதத்துடன் (Refresh Rate) வருகிறது. இது Wi-Fi 6E மற்றும் புளூடூத் 5.2 இணைப்புடன் பொருத்தப்பட்டுள்ளது. நீங்கள் இதை வாங்க விரும்பினால், அமேசானில் 51 ஆயிரத்து 490 ரூபாய்க்கு கிடைக்கிறது.
HP Pavilion X360 11th Gen Intel Core i3
HP நிறுவனத்தின் இந்த லேப்டாப் 8ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி எஸ்எஸ்டி உடன் வருகிறது. மடிகணினியின் செயல்திறனை மேம்படுத்த, இது சக்திவாய்ந்த 11th Gen இன்டெல் கோர் i3 பிராஸஸரை கொண்டுள்ளது. இது 250nits மற்றும் தொடுதிரையை ஆதரிக்கும் 14-இன்ச் FHD டிஸ்ப்ளே கொண்டுள்ளது. மேலும், இது 360 டிகிரி வரை சுழலும். இந்த லேப்டாப் வேகமான சார்ஜிங் கொண்டுள்ளது. 3 செல் பேட்டரி மற்றும் முன்பே ஏற்றப்பட்ட விண்டோஸ் 11 மற்றும் MS Office உடன் வருகிறது. இதனை 2 இன் 1 மடிகணினி என்று பலரும் அழைக்கின்றனர். நீங்கள் இதனை அமேசானில் 54 ஆயிரத்து 133 ரூபாய்க்கு ஆர்டர் செய்யலாம்.
Lenovo ThinkPad E14
60 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவான விலையில் கிடைக்கும் லேப்டாப்களில் இதுவும் ஒரு சிறந்த ஆப்ஷனாகும். இதில் AMD Ryzen 5 7530U பிராஸஸர் உள்ளது. இந்த லேப்டாப்பில் 16ஜிபி DDR4 ரேம் மற்றும் 512ஜிபி எஸ்எஸ்டி ஸ்டோரேஜ் அமைப்பு உள்ளது. இது 14-இன்ச் WUXGA டிஸ்ப்ளே கொண்டுள்ளது, இதில் AMD ரேடியான் கிராபிக்ஸ் கார்டு பொருத்தப்பட்டுள்ளது. இது அமேசானில் 57 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கலாம்.
மேலும் படிக்க | 2024-ல் விற்பனைக்கு வரும் செடான் கார்களில் சிறந்தது எது?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ