புத்தாண்டுக்கு ஏறக்குறைய இன்னும் 13 நாட்களே இருப்பதால், இந்த ஆண்டு விற்பனையை ஜோராக முடிக்க கார் நிறுவனங்கள் போட்டிப் போட்டுக்கொண்டு ஆஃபர்களை அள்ளி வழங்குகின்றன. ஒரே நேரத்தில் அனைத்து நிறுவனங்களும் ஆஃபர்களை அறிவித்திருப்பதால், எதை தேர்ந்தெடுப்பது என்பதில் உங்களுக்கு குழப்பம் இருக்கலாம். அதனால், பெஸ்ட் ஆஃபர்களை கொடுத்துள்ள 5 கார்களின் லிஸ்ட் இதோ..!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

1. ரெனால்ட் டஸ்டர்
(Renault Duster)


ரெனால்ட் டஸ்டர் அதிகபட்சமாக 1.3 லட்சம் வரையில் வாடிக்கையாளர்களுக்கு ஆஃபர்களை அள்ளிக்கொடுக்கிறது. 50 ஆயிரம் ரூபாய் வரை எக்ஸ்சேஞ்ச் ஆஃபரும். 50 ஆயிரம் ரூபாய் ரொக்க தள்ளுபடியும், 30 ஆயிரம் ரூபாய் வரை கார்ப்ரேட் தள்ளுபடியும் அடங்கும். கார் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு 1.10 லட்சம் ரூபாய் வரை ஸ்பெஷல் லாயல்டி சலுகையும் கிடைக்கும் என ரெனால்ட் டஸ்ட்ர் அறிவித்துள்ளது.


2. நிசான் கிக்ஸ்
(Nissan India)


நிசான் கிக்ஸ் கார்களுக்கு அதிகபட்சம் ஒரு லட்சம் ரூபாய் வரை ஆஃபர்களை அந்நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி, ரொக்கத் தள்ளுப்படி 15 ஆயிரம் ரூபாய் வரையிலும், 70 ஆயிரம் ரூபாய் வரை எக்ஸ்சேஞ்ச் போனஸூம் கிடைக்கும். மேலும், 5 ஆயிரம் ஆன்லைன் புக்கிங் போனஸ், 10 ஆயிரம் கார்ப்ரேட் போனஸ் இந்த ஆஃபரில் அடங்கும். காம்பாக்ட் எஸ்.யூ.வியான 1.5 லிட்டர் பெட்ரோல் வேரியண்டுக்கு 456 ஆயிரம் ரூபாய் வரை ஆஃபர் கொடுக்கப்படுகிறது. 10 ஆயிரம் ரூபாய் ரொக்கத் தள்ளுபடியும், 20 ஆயிரம் ரூபாய் எக்ஸ்சேஞ்ச் போனஸ் கொடுக்கும் நிசான், ஆன்லைன் புக்கிங் போனஸாக 5 ஆயிரம் ரூபாய் கொடுக்கப்படும் என அறிவித்துள்ளது.


ALSO READ | இனிமேல் உங்க மொபைலும் மினி லேப்டாப்! வருகிறது புதிய வசதி!


3. மஹிந்திரா அல்டுராஸ் ஜி4
(Mahindra Alturas G4)


டாப் 5-ல் 3வது இடத்தில் இருப்பது மஹிந்திரா அல்டுராஸ் SUV.  ஆண்டின் கடைசி மாதமான டிசம்பரில் 81,500 ரூபாய் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 50,000 ரூபாய் வரை எக்ஸ்சேஞ்ச் போனஸ், 11,500 ரூபாய் வரை கார்ப்பரேட் போனஸ் மற்றும் 20,000 ரூபாய்க்கு பிற சலுகைகள் கொடுக்கப்படுகின்றன. அதேநேரத்தில் இந்த எஸ்யூவியின் சலுகைகள் அனைத்தும் டீலர்ஷிப்புக்கு ஏற்ப மாறுபடும்.


4. ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ்
(Hyundai Grand i10 Nios)


ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ், இந்த மாதம் அதிகபட்சமாக 50,000 வரை தள்ளுபடிகள் கொடுத்து விற்பனை செய்யப்படுகிறது. டர்போ வேரியண்ட் கார்களுக்கு மட்டுமே பொருந்தும் என அறிவித்துள்ள இந்த நிறுவனம், பெட்ரோல் மற்றும் டீசல் வேரியண்ட் கார்களுக்கு அதிகபட்சம் 25 ஆயிரம் ரூபாய் தள்ளுபடிகள் கிடைக்கும் என தெரிவித்துள்ளது. ஸ்போர்ட்ஸ் பெட்ரோல் டிடி வேரியண்ட் மாடல் கார்களுக்கு தள்ளுபடிகள் எதுவும் இல்லை. CNG மாடல் கார்கள் 17,300 ரூபாய் வரை தள்ளுபடியுடன் விற்பனை செய்யப்படுகின்றன.


ALSO READ | Jio, Airtel, Vi: உங்களுக்கு ஏற்ற மலிவான ரீசார்ஜ் திட்டங்களின் விவரம் இதோ


5. ஹோண்டா சிட்டி
(Honda City)


ஹோண்டா பிராண்டில், 5th ஜென் ஹோண்டா சிட்டி செடான் மாடல் கார்களுக்கு அதிகபட்சமாக 45,108 ரூபாய் வரையிலான தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பிராண்டில் இருக்கும் அனைத்து கார்களுக்கும் இதே சலுகைகள் பொருந்தும் என அறிவித்துள்ள ஹோண்டா, இதில் 7,500 ரூபாய் வரை ரொக்கத் தள்ளுபடி கிடைக்கும் என கூறியுள்ளது. இவைதவிர 8,108 ரூபாய் வரையிலான உதிரிபாக சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கார் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு 15 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான கார் எக்ஸ்சேஞ்ச் தள்ளுபடியும், 5 ஆயிரம் ரூபாய் லாயல்டி போனஸ் மற்றும் 9,000 ரூபாய் ஹோண்டா கார் எக்ஸ்சேஞ்ச் போனஸ், 8,000 ரூபாய் கார்ப்ரேட் தள்ளுபடி கிடைக்கும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR