Jio, Airtel, Vi: உங்களுக்கு ஏற்ற மலிவான ரீசார்ஜ் திட்டங்களின் விவரம் இதோ

குறிப்பிட்ட தரவு மற்றும் வரம்பற்ற அழைப்பு வசதியை தவிர, இந்த திட்டங்களில் வேறு என்னென்ன வசதிகள் உள்ளன என்பதை இந்த பதிவில் காணலாம். 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Sripriya Sambathkumar | Last Updated : Dec 16, 2021, 07:41 PM IST
  • ஜியோவின் 84 நாட்களுக்கு செல்லுபடியாகும் ரூ.666 திட்டத்தில் தினமும் 1.5 ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ், வரம்பற்ற அழைப்பு வசதி ஆகியவை வழங்கப்படுகின்றன.
  • Vi இன் ரூ.2899 திட்டத்தில், 1.5 ஜிபி டேட்டா, 365 நாட்களுக்கான செல்லுபடி காலம், தினமும் 1.5ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ் ஆகியவை வழங்கப்படுகின்றன.
  • ஏர்டெல்லின் ரூ.666 திட்டத்தில், தினசரி 100 எஸ்எம்எஸ், 1.5 ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்பு, 77 நாட்களுக்கான செல்லுபடி காலம் ஆகியவை வழங்கப்படுகின்றன.
Jio, Airtel, Vi: உங்களுக்கு ஏற்ற மலிவான ரீசார்ஜ் திட்டங்களின் விவரம் இதோ  title=

Airtel vs Jio vs Vi: அனைத்து மொபைல் நெட்வொர்க் நிறுவனங்களும் தங்கள் ப்ரீபெய்ட் திட்டங்களின் விலையை உயர்த்தியுள்ளன. எனவே நீங்கள் வரம்பற்ற அழைப்பு வசதியுடன் டேட்டாவுக்கான பேக்குகளையும் சேர்த்து வாங்க விரும்பினால்,  ஏர்டெல், ஜியோ மற்றும் வோடபோன் ஐடியாவில், ஒரு நாளைக்கு 1.5 GB டேட்டாவுக்கான திட்டங்களுக்கு  எவ்வளவு செலவாகும் என்பதை இந்த பதிவில் காணலாம். 

குறிப்பிட்ட தரவு மற்றும் வரம்பற்ற அழைப்பு வசதியை தவிர, இந்த திட்டங்களில் வேறு என்னென்ன வசதிகள் உள்ளன என்பதையும் இங்கு காணலாம்.

ஜியோ ப்ரீபெய்ட் திட்டம்

ஒரு நாளைக்கு 1.5 ஜிபி கிடைக்கும் ஜியோவின் (Jio) மலிவான திட்டத்துக்கான தொகை ரூ 119 ஆகும். இதன் செல்லுபடியாகும் காலம் 14 நாட்கள். இதில், வரம்பற்ற அழைப்பு மற்றும் 300 எஸ்எம்எஸ் வசதி வழங்கப்படுகிறது. 

ரூ.199 திட்டத்தில், தினசரி 100 எஸ்.எம்.எஸ்,  1.5 GB டேட்டா, வரம்பற்ற அழைப்பு ஆகியவை வழங்கப்படுகிறது. அதன் செல்லுபடியாகும் காலம் 23 நாட்கள் ஆகும். 

ஜியோவின் ரூ.239 திட்டத்தில், தினமும் 1.5 ஜிபி டேட்டா, 28 நாட்கள் வேலிடிட்டி, 100 எஸ்எம்எஸ், வரம்பற்ற அழைப்பு வசதி ஆகியவை வழங்கப்படுகின்றன. 

ரூ.479 திட்டத்தில், தினமும் 1.5 ஜிபி டேட்டா 100 எஸ்எம்எஸ், அன்லிமிட்டெட் அழைப்பு ஆகிய நன்மைகள் உள்ளன. இதன் வேலிடிட்டி 56 நாட்கள் ஆகும். 

ஜியோவின் 84 நாட்களுக்கு செல்லுபடியாகும் ரூ.666 திட்டத்தில் தினமும் 1.5 ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ், வரம்பற்ற அழைப்பு வசதி ஆகியவை வழங்கப்படுகின்றன. 

ஜியோவின் ரூ.2545 திட்டத்தில், 1.5 ஜிபி டேட்டா, 336 நாட்களுக்கான செல்லுபடி காலம், தினமும் 1.5 ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ், வரம்பற்ற அழைப்பி வசதி ஆகியவை கிடைக்கும். 

ALSO READ | 1 ரூபாய்க்கு ஜியோ வழங்கும் ரீசார்ஜ் திட்டம் 

ஏர்டெல் ப்ரீபெய்ட் திட்டம்

ஒரு நாளைக்கு 1.5 ஜிபி கிடைக்கும் ஏர்டெல் (Airtel) திட்டத்தின் விலை ரூ. 299 ஆகும். இதன் செல்லுபடியாகும் காலம் 28 நாட்கள். இதில் அன்லிமிடெட் கால் மற்றும் 100 எஸ்எம்எஸ் வசதி தினமும் வழங்கப்படுகிறது. இது தவிர, அமேசான் பிரைம் வீடியோவின் மொபைல் பதிப்பிற்கு 30 நாள் சந்தாவும் வழங்கப்படுகிறது. 

ஏர்டெல்லின் ரூ. 479 திட்டத்தில் தினசரி 100 எஸ்.எம்.எஸ், 1.5 GB டேட்டா, வரம்பற்ற அழைப்பு, 56 நாட்களுக்கான செல்லுபட்டி காலம் ஆகியவையும் வழங்கப்படுகின்றது. இதிலும் அமேசான் பிரைம் வீடியோவின் மொபைல் எடிஷனுக்கு 30 நாள் இலவச சந்தா வழங்கப்படுகிறது. 

ஏர்டெல்லின் ரூ.666 திட்டத்தில், தினசரி 100 எஸ்எம்எஸ், 1.5 ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்பு,  77 நாட்களுக்கான செல்லுபடி காலம் ஆகியவை வழங்கப்படுகின்றன. 

ரூ.719 திட்டத்தில், தினமும் 1.5 ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ், வரம்பற்ற அழைப்பு, 84 நாட்களுக்கான செல்லுபடி காலம் ஆகியவை வழங்கப்படுகின்றன. 

Vi ப்ரீபெய்ட் திட்டம்

Vi இன் ரூ 299 திட்டத்தில் நாள் ஒன்றுக்கு 1.5 ஜிபி கிடைக்கும். இதன் செல்லுபடியாகும் காலம் 28 நாட்கள் ஆகும். இதில், அன்லிமிடெட் அழைப்பு மற்றும் 100 எஸ்எம்எஸ் வசதி தினமும் வழங்கப்படுகிறது. 

ரூ.479 திட்டத்தில் தினசரி 100 எஸ்.எம்.எஸ், 1.5 GB டேட்டா, வரம்பற்ற அழைப்பு, 56 நாட்களுக்கான செல்லுபடி காலம் ஆகியவை வழங்கப்படுகின்றன. 

ரூ.666 திட்டத்தில், தினமும் 1.5 ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ், அன்லிமிட்டெட் அழைப்பு, 77 நாட்களுக்கான செல்லுபடி ஆகியவை வழங்கப்படுகின்றன. 

Vi இன் ரூ.719 திட்டத்தில், தினசரி 100 எஸ்.எம்.எஸ், 1.5 GB டேட்டா, 84 நாட்களுக்கான செல்லுபடி காலம், வரம்பற்ற அழைப்பு வசதி ஆகியவை  வழங்கப்படுகின்றன.

ரூ.1449 திட்டத்தில், 180 நாட்களுக்கான செல்லுபடி, தினமும் 1.5 ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ், வரம்பற்ற அழைப்பு ஆகிய நன்மைகள் வழங்கப்படுகின்றன. 

Vi இன் ரூ.2899 திட்டத்தில், 1.5 ஜிபி டேட்டா, 365 நாட்களுக்கான செல்லுபடி காலம், தினமும் 1.5ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ் ஆகியவை வழங்கப்படுகின்றன. 

ALSO READ | BSNL இன் அதிரடியான ஆபர் ரூ,599யில் தினமும் கிடைக்கும் 5GB டேட்டா 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR 

Trending News