Top speed electric scooters in India 2021: நீங்கள் ஒரு அதிவேகமான மின்சார ஸ்கூட்டரை வாங்க எண்ணினால், இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். சந்தையில் உங்களுக்கு பல ஆப்ஷன்கள் கிடைக்கின்றன. பல்திறன் கொண்ட பல வகை மின்சார ஸ்கூட்டர்கள் சந்தையில் உள்ளன. வேகம் குறைவாக மற்றும் அதிவிரைவாக உள்ள பல ஸ்கூட்டர்கள் உள்ளன. அத்தகைய சில ஸ்கூட்டர்களைப் பற்றி இங்கே காணலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஓலா எஸ் 1


ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் (Ola Electric Scooter) ஓலா எஸ் 1 மணிக்கு 115 கிமீ வேகம் கொண்டது. இது 3.0 வினாடிகளில் மணிக்கு 0 முதல் 40 கிமீ வேகத்தை எட்டுகிறது. இதன் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை 99,999 ரூபாய் ஆகும். ரூ .499 செலுத்தி இதை முன்பதிவு செய்யலாம். இந்த ஸ்கூட்டர் 10 வண்ணங்களில் கிடைக்கும். ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால், இது 181 கிமீ தூரத்தை அடைகிறது.


ஏதர் 450X


ஏதர் எனர்ஜியின் (Ather Energy) மின்சார ஸ்கூட்டர் ஏத்தர் 450 எக்ஸ், வேகத்தின் அடிப்படையில் ஒரு சிறந்த ஸ்கூட்டர் ஆகும். இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 80 கிலோமீட்டராக உள்ளது. இது 0 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தை 3.3 வினாடிகளில் எட்டும். இதன் எக்ஸ்-ஷோரூம் விலை 1,44,500 ரூபாய். இது முழு சார்ஜில் 116 கிமீ பயணத்தை நிறைவு செய்கிறது.


ALSO READ: Electric Scooter: ஸ்கூட்டர் வாங்க போறீங்களா, எந்த ஸ்கூட்டர் சிறந்தது 


சிம்பிள் ஒன்


சிம்பிள் எனர்ஜி நிறுவனத்தின், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஸ்கூட்டர் சிம்பிள் ஒன் ஆகும். இந்த ஸ்கூட்டரின் அதிகபட்ச வேகம் மணிக்கு 105 கிமீ ஆகும். ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால், இந்த ஸ்கூட்டர் 236 கிமீ பயணிக்கிறது. இது வெறும் 2.95 வினாடிகளில் 0 முதல் 40 கிமீ வேகத்தை எட்டும்.


டிவிஎஸ் ஐக்யூப்


டிவிஎஸ் மோட்டாரின் (TVS Motors)மின்சார ஸ்கூட்டர் டிவிஎஸ் ஐ-க்யூப் ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 78 கிலோமீட்டர் ஆகும். டெல்லியில் இதன் ஆன்-ரோட் விலை ரூ. 1,00,777. இது முழு சார்ஜில் 75 கிமீ பயணத்தை நிறைவு செய்கிறது. இந்த ஸ்கூட்டரை நீங்கள் 2251 ரூபாய் இஎம்ஐ யிலும் வாங்கலாம்.


ALSO READ: குறைந்த விலையில் அறிமுகம் ஆகும் Hover மின்சார ஸ்கூட்டர்: அதிரடி விலை அசத்தும் அம்சங்கள் 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR