குறைந்த விலையில் அறிமுகம் ஆகும் Hover மின்சார ஸ்கூட்டர்: அதிரடி விலை அசத்தும் அம்சங்கள்

ஹோவர் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்துவது குறித்து கோரிட் எலக்ட்ரிக் அதிகாரப்பூர்வமாக தகவல் அளித்துள்ளது. இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒவ்வொரு கட்டமாக அறிமுகப்படுத்தப்படும்.   

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 19, 2021, 06:57 PM IST
  • கோரிட் ஹோவர் ரூ .74,999 என்ற ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தப்படும்.
  • வாடிக்கையாளர்கள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ரூ .1,100 செலுத்தி முன்பதிவு செய்யலாம்.
  • ஸ்கூட்டரின் விநியோகம் நவம்பர் முதல் தொடங்கப்படும் என்று நிறுவனம் கூறுகிறது.
குறைந்த விலையில் அறிமுகம் ஆகும் Hover மின்சார ஸ்கூட்டர்: அதிரடி விலை அசத்தும் அம்சங்கள்  title=

Made in India Electric Scooter: நாட்டில் ஒவ்வொரு நாளும் பெட்ரோல் டீசல் விலை அதிகரித்து வரும் நிலையில், மின்சார ஸ்கூட்டர்களுக்கான மோகம் அதிகரித்து வருகிறது. மக்கள் இப்போது மின்சார ஸ்கூட்டர்களுக்கு முன்னுரிமை அளிக்கத் துவங்கியுள்ளனர். மின்சார வாகனங்களின் சந்தை மிக வேகமாக வளர்ந்து வருகிறது. 

புதிய ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் பல சந்தையில் புதிய மின்சார வாகனங்களை (Electric Vehicle) அறிமுகம் செய்கின்றன. 12 முதல் 18 வயதுடையவர்கள், உரிமம் இல்லாமல் ஸ்கூட்டர்களை இயக்கக்கூடிய வகையில், பல நிறுவனங்கள் பிரத்யேகமான மின்சார ஸ்கூட்டர்களையும் அறிமுகம் செய்கின்றன.

Made in India ஹோவர் மின்சார ஸ்கூட்டர் எப்போது அறிமுகம் ஆகும்?

Corrit Electric நிறுவனமும் தனது மின்சார ஸ்கூட்டரை (Electric Scooter) விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. நிறுவனம் அப்னா ஹோவர் என்ற மின்சார ஸ்கூட்டரை வடிவமைத்துள்ளது. இது இந்த மாத இறுதியில் அறிமுகம் ஆக உள்ளது. இளைய தலைமுறையினரை சிறப்பாக ஈர்க்கும் வகையில் இதன் வடிவமைப்பு உள்ளது.

Hover Electric Scooter: விலை

கோரிட் ஹோவர் ரூ .74,999 என்ற ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தப்படும். ஆனால் இது வாடிக்கையாளர்களுக்கு ரூ .69,999 என்ற விலையில் வழங்கப்படும். வாடிக்கையாளர்கள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ரூ .1,100 செலுத்தி முன்பதிவு செய்யலாம். இந்த ஸ்கூட்டரின் விநியோகம் நவம்பர் முதல் தொடங்கப்படும் என்று நிறுவனம் கூறுகிறது. ஸ்கூட்டர் சிவப்பு, மஞ்சள், இளஞ்சிவப்பு, ஊதா, நீலம் மற்றும் கருப்பு வண்ணங்களில் அறிமுகப்படுத்தப்படும்.

12 முதல் 18 வயதுடையவர்களுக்காக வடிவமைக்கப்பட்ட ஸ்கூட்டர்

கோரிட் எலக்ட்ரிக் தங்களது ஸ்கூட்டர் 12 முதல் 18 வயதுக்குட்பட்டவர்களை மனதில் வைத்து வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறுகிறது. இதில் சிறப்பு என்னவென்றால் இதை ஓட்ட ஓட்டுநர் உரிமம் (Driving Licence) தேவையில்லை. ஆகையால் அதன் டாப் ஸ்பீட் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளது. ஹோவர் ஸ்கூட்டரின் அதிகபட்ச வேகம் ஒரு மணி நேரத்துக்கு 25 கிமீ ஆகும்.

ALSO READ: Cheapest Electric Scooter: 1 ஆக்டிவா வாங்கும் விலையில், 2 மின்சார ஸ்கூட்டர்கள் 

எலக்ட்ரிக் ஸ்கூட்டர் எவ்வளவு எடையை சுமக்க முடியும்? 

ஹோவர் அதிகபட்சமாக 250 கிலோ எடையை எளிதில் சுமக்க முடியும். இந்த நாட்களில் மக்கள் தடிமனான சக்கரங்கள் கொண்ட சைக்கிள்கள் மற்றும் பைக்குகளை விரும்புகிறார்கள். இந்த நிலையில், இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அதன் தடிமனான டயர்கள் காரணமாக அனைவரையும் கவர்கிறது. அவை டியூப்லெஸ் மற்றும் டிஸ்க் பிரேக்குகளுடன் பொருத்தப்பட்டுள்ளன. இது தவிர, டூயல் ஷாக் அப்சார்பரும் இதில் கிடைக்கிறது.

ஹோவர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் எங்கே அறிமுகம் செய்யப்படும்?

ஹோவர் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்துவது குறித்து கோரிட் எலக்ட்ரிக் அதிகாரப்பூர்வமாக தகவல் அளித்துள்ளது. இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒவ்வொரு கட்டமாக அறிமுகப்படுத்தப்படும். அதாவது முதலில் இதை டெல்லியில் அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. பின்னர் இது பிற நகரங்களில் அறிமுகப்படுத்தப்படும்.

ALSO READ: Okaya Electric Scooter 'Freedum': ரூ. 69,999 அசத்தல் விலையில் அபார அம்சங்கள் 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News