இன்று தகவல் தொடர்பு மிகவும் சுலபமாகிவிட்டதில் வாட்ஸ்-அப்பின் பங்கு மிகவும் அதிகம். பேசுவதற்கு மட்டுமல்ல, முக்கிய ஆவணங்கள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைப் பகிர்ந்து கொள்வதற்கும் வாட்ஸ்-அப் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்பம் வளர்ந்துவிட்ட நிலையில் மோசடிகளும் அதிகரித்துவிட்டன. ஒருவரின் வாட்ஸ்அப் கணக்கு ஹேக் செய்யப்பட்டால், அது மிகப் பெரிய பிரச்சனையாக மாறிவிடும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஹேக்கர்கள் உங்கள் கணக்கைப் பயன்படுத்தி உங்களுடைய செய்திகளைப் படிக்கலாம் என்பது மட்டும் அல்ல, உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து பணத்தையும் எடுக்கலாம். எனவே உங்கள் வாட்ஸ்அப் கணக்கை பாதுகாப்பாக வைத்திருப்பது முக்கியம். வாட்ஸ்-அப் பாதுகாப்புக்கு உதவும் சில சுலபமான உதவிக்குறிப்புகளைத் தெரிந்துக் கொள்ளவும்.


கடவுச்சொல் வலுவாக இருக்க வேண்டும்


WhatsApp கணக்கைப் பாதுகாப்பாக வைத்திருக்க வலுவான கடவுச்சொல் இருக்க வேண்டும். அதேபோல, உங்கள் கடவுச்சொல் அல்லது பேட்டர்ன் லாக்கை யாருடனும் பகிர வேண்டாம். யாருடனும் பகிராவிட்டாலும், அவ்வப்போது கடவுச்சொல் மற்றும் பேட்டர்ன் லாக்கை தொடர்ந்து மாற்றவும். ஃபேஸ் ஐடி பூட்டு அல்லது கைரேகை ஸ்கேனரை வைப்பதும் உங்கள் ரகசியங்களை பாதுகாக்கும்.


இரு காரணி அங்கீகாரம் (2FA)


2FA என்பது உங்கள் கணக்கை ஹேக் செய்யாமல் பாதுகாக்க உதவும் கூடுதல் பாதுகாப்பு அடுக்காக இருக்கும். 2FA ஐ இயக்கும்போது, ​​உங்கள் கணக்கில் உள்நுழைய முயற்சிக்கும் போதெல்லாம் தொலைபேசி எண்ணுக்கு SMS வரும். யாராவது உங்கள் கடவுச்சொல்லை ஹேக் செய்தாலும் அவர்களால் உங்கள் கணக்கில் உள்நுழைய முடியாமல் பாதுகாப்பாக இருக்க இது உதவலாம்.


மேலும் படிக்க | சூப்பர் ஆஃபரில் புதிய REDX வோடபோன் போஸ்ட்பெய்ட் திட்டம் ! OTT சந்தா இலவசம்!


தெரியாத நபர்களிடமிருந்து வரும் செய்திகள் மற்றும் அழைப்புகளில் கவனம் அவசியம்


தெரியாத நபர்களிடமிருந்து செய்திகளையோ அழைப்புகளோ வந்தால் அவற்றை புறக்கணிக்கவும், அதோடு அது தொடர்பாக உடனடியாக புகாரளிக்கவும். இந்தச் செய்திகளில் உங்கள் போனை ஹேக் செய்வதற்கான இணைப்புகள் இருக்கலாம், அதைக் கிளிக் செய்தால், உங்கள் மொபைலில் மால்வேர் எனப்படும் தீங்கிழைக்கும் வைரஸ்கள் பதிவிறக்கமாகலாம், இது ஆன்லைனில் நீங்கள் ஏமற்றப்பட உதவியாக இருக்கலாம்.


கணக்கின் தனியுரிமை அமைப்புகள்


உங்கள் WhatsApp கணக்கின் தனியுரிமை அமைப்புகளைச் சரிபார்த்து, நம்பிக்கை ஏற்படும் நபர்களுடன் மட்டுமே தகவலைப் பகிர்கிறீர்கள் என்பதை உறுதிப்படுத்தவும். யார் உங்களை அழைக்கலாம் மற்றும் உங்களுக்கு செய்திகளை அனுப்பலாம், நீங்கள் கடைசியாகப் பார்த்த நிலையை யார் பார்க்கலாம், உங்கள் சுயவிவரப் படத்தை யார் பார்க்கலாம் ஆகிய பாதுகாப்பு முறைகளையும் நீங்கள் தேர்வு செய்யலாம்.


கணக்கு இணைக்கப்படும் சாதனங்கள்


உங்கள் WhatsApp கணக்கை ஸ்மார்ட்போன் அல்லது லேப்டாப் போன்ற மற்றொரு சாதனத்துடன் இணைக்கும் வசதி, வசதியானது என்பதை மறுக்க முடியாது. ஏனெனில், இதன் மூலம் உங்கள் வாட்ஸ்அப் கணக்கை வேறு பல சாதனங்களில் பயன்படுத்தலாம். ஆனால், உங்கள் வாட்ஸ்-அப் கணக்கில் வேறு யாரும் வேவு பார்க்காமல் இருப்பதை உறுதிப்படுத்திக்கொள்ளவும். பயபடுத்தாத கணக்கில் இருந்து வெளியேறவும்.


மேலும் படிக்க | வாட்ஸ்அப் கான்டெக்டுகளை QR குறியீடு மூலம் பகிரலாம்..! எப்படி என தெரிந்து கொள்ளுங்கள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ