இந்தியாவில் முன்னணி நெட்வார்க்காக  இருக்கும் ஜியோவுக்கு போட்டியாக பாரதி ஏர்டெல் நிறுவனம் தனது நெட்வொர்க்கை 4ஜி ஆகா மாற்ற முடிவு செய்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

4ஜி சேவையில் ஆரம்பித்த ஜியா நிறுவனம் இந்தியாவில் தனது நெட்வொர்க்கை வலுவாக கட்டமைத்துள்ளது. நகரம் முதல் கிராமம் வரை ஜியோ நெட்வொர்க் பறந்து விரிந்து கிடக்கிறது. பல்வேறு சலுகைகளை அறிவித்து, மற்ற நிறுவனத்தை காட்டிலும் ஜியோ அதிக வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது.


தற்போது 4ஜி சேவை வழங்கி வரும் ஜியோ நிறுவனம், 2020 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் 5ஜி சேவை வழங்கும் என முகேஷ் அம்பானி சமீபத்தில் கூறியிருந்தார்.


ஜியோ நிறுவனத்தின் போட்டியை சமாளிக்கவும், தங்கள் வாடிக்கையாளர்களை தக்க வைத்துக்கொள்ளவும் ஏர்டெல் நிறுவனம் தனது அனைத்து விதமான நெட்வொர்க்கை 4ஜி ஆகா மாற்ற திட்டமிட்டுள்ளது.


அதாவது 2ஜி மற்றும் 3ஜி சேவையை பயன்படுத்தி வரும் வாடிக்கையாளர்களை அதிகவே 4 ஜி நெட்வொர்க்கிற்கு மாற்ற முடிவு செய்துள்ளது.


பாரதி ஏர்டெல் நிறுவனம் தனது நெட்வொர்க்கை 4ஜி ஆகா மாற்றினால், வாடிக்கையாளர்களை மகிழ்ச்சி அடைவார்கள். ஜியோவுக்கு போட்டியாகவும் இருக்கலாம்.