புதுடெல்லி: Apple iPhone SE 3 அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த தொலைபேசியின் வடிவமைப்பும் 'கிளாசிக்' iPhone SE (2020) போலவே இருக்கும் என்று புதிய வெளிப்பாடுகள் தெரிவிக்கின்றன. ஆனால் சமீபத்தில் கசிந்த தகவலில் பல்வேறு விஷயங்கள் இந்த  ஸ்மார்ட்போனில் இருப்பதை வெளிக்காட்டுகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஐபோன் (iPhone) எஸ்இ 3 மாடல் எல்சிடி டிஸ்ப்ளேவுடன் வரும், அது தற்போதைய சீரீஸில் எல்சிடி பேனலை வழங்கும் ஒரே ஐபோனாக மாறும் என்கிற தகவல் கிடைத்துள்ளது. ஐபோன் SE-யின் மூன்றாம் தலைமுறை மாடலை அறிமுகப்படுத்துவதன் மூலம் ஆப்பிள் அந்த வெற்றியை மீண்டும் அடையும். 


ALSO READ: Buy Now Pay Later: பண்டிகை கால ஷாப்பிங்கில் இனி டென்ஷன் வேண்டாம் 


ஐபோன் SE 2 மாடல் ஐபோன் 8-ஐ அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டிருந்தாலும், வரவிருக்கும் SE மாடல் iPhone XR மாடலின் வடிவமைப்பைப் பெறலாம் என்கிற தகவல் கிடைத்துள்ளது. மேலும் ஐபோன் SE 3 அல்லது ஐபோன் எஸ்இ 2022 எல்சிடி டிஸ்ப்ளேவுடன் வரும் கடைசி ஐபோனாகவும் இருக்கும்.


இதில் நாட்ச் டிஸ்ப்ளே மற்றும் கர்வ்டு ஃப்ரேமை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.புதிய ஐபோன் ஃபிளாக்ஷிப்கள் பிளாட் ஆன விளிம்புகளுடன் வருகின்றன.மேலும் Face ID-ஐ ஆதரிக்குமா என்பதில் தெளிவு இல்லை. வரவிருக்கும் iPhone SE 3 ஆனது 5G ஆதரவைக் கொண்டு வரும் என்றும் அது A15 Bionic SoC வடிவில் மேம்படுத்தப்பட்ட ப்ராசஸரைரப் பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


இதில் 64 ஜிபி, 128 ஜிபி மற்றும் 256 ஜிபி விருப்பங்கள் உட்பட பல சேமிப்பு வகைகளில் கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


ALSO READ: Flipkart அசத்தும் சலுகை: வெறும் ரூ.4,999-க்கு கிடைக்கிறது சாம்சங் Smart TV 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR