Apple Car: குபெர்டினோவை தளமாகக் கொண்ட தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள், தானாகவே, அதாவது, மற்ற எந்த ஆட்டோமொபைல் உற்பத்தி நிறுவனத்தின் உதவியுமின்றி, ஒரு மின்சார வாகனத்தை உருகவாக்கி வருவதாக கூறப்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

Maeil Economic Daily (MacRumors வழியாக) படி, ஐபோன் தயாரிப்பாளரான ஆப்பிள், தற்போது இறுதி பாகங்கள் சப்ளையர்களைத் தேர்வு செய்து வருகிறது. முன்னதாக, தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள் (Apple), BMW, ஹூண்டாய், நிசான் மற்றும் டொயோட்டா ஆகிய நிறுவனங்களை தொடர்பு கொண்டு, மின்சார வாகன தயாரிப்பில் கூட்டு சேர்ந்து பணிபுரிவது குறித்து ஆராய்ந்தது.


ஆப்பிள் இப்போது, தகவல் கோரிக்கை (RFI), முன்மொழிவுக்கான கோரிக்கை (RFP) மற்றும் கொடேஷன் கோரிக்கை (RFQ) ஆகியவற்றை உலகளாவிய ஆட்டோமொபைல் பாக உற்பத்தியாளர்களுக்கு அனுப்பும் செயல்முறையை முடித்துவிட்டது.


ஆப்பிள் சமீபத்தில் வாகன உற்பத்தி, ஸ்டீயரிங், டைனமிக்ஸ், சாப்ட்வேர் மற்றும் பணித்திட்ட மேலாண்மை ஆகியவற்றில் பெரிய உற்பத்தி அனுபவம் கொண்ட இரண்டு முன்னாள் மெர்சிடிஸ் பொறியாளர்களை பணிக்கு அமர்த்தியது.


ALSO READ:Tata Tigor EV: அட்டகாசமாக அறிமுகம் ஆன இந்த மின்சார காரின் முழு விவரங்கள் இதோ


இந்த பொறியாளர்கள் இப்போது ஆப்பிள் நிறுவனத்தின் சிறப்பு திட்டக் குழுவில் தயாரிப்பு வடிவமைப்பு பொறியாளர்களாக பணிபுரிகின்றனர். இவர்கள் 'Apple Car' பணித்திட்டத்துக்காக பிரத்யேகமாக பணியில் அமர்த்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.


நம்பகமான ஆப்பிள் ஆய்வாளரான மிங்-சி குவோ, முன்பு, ஆப்பிள் காரின் அறிமுகம் 2025-2027 வரை நடக்க வாய்ப்பில்லை என்று கூறியிருந்தார்.


ஒரு ஆய்வுக் குறிப்பில், ஆப்பிள் மின்சார கார் (Electric Car) விவரக்குறிப்புகள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்று குவோ கூறினார். மேலும், வாகனத்தின் அறிமுகம் 2028 ஆண்டு, அல்லது அதையும் தாண்டிச் சென்றாலும் ஆச்சரியப்பட எதுவுமில்லை என்று அவர் தெரிவித்தார்.


ஆப்பிளின் மின்சார கார் திட்டத்தின் தற்போதைய தலைவர் டக் ஃபீல்ட், ஆப்பிள் நிறுவனத்தை விட்டு ஃபோர்டுக்கு செல்கிறார் என்பது கூடுதல் தகவலாகும்.


ஃபோர்டு (Ford) நிறுவனத்தின் மேம்பட்ட தொழில்நுட்பம் மற்றும் உட்பொதிக்கப்பட்ட செயல்முறைகளின் தலைமை அதிகாரியாக ஃபீல்ட் நியமிக்கப்பட்டுள்ளார்.


ALSO READ: Ola அடுத்த அதிரடி: விரைவில் வருகிறது ஓலா மின்சார கார், விவரம் இதோ!!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR