Upcoming Smartphones On January 2024: 2023ஆம் ஆண்டில் Tecno, OnePlus, Xiaomi உள்ளிட்ட பல ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்கள் பல சிறந்த மொபைல்களை சந்தையில் அறிமுகப்படுத்தின. இந்த மொபைல்கள் அனைத்தும் சிறந்த தொழில்நுட்பங்களுடனும் மற்றும் மக்களுக்கு உதவக்கூடிய அம்சங்களுடன் வந்தன. பயனர்களும் பல தயாரிப்புகளை மிகவும் விரும்பினர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அந்த வகையில், இந்த ஆண்டைப் போலவே, பிறக்க இருக்கும் புத்தாண்டிலும் பல ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்கள் சந்தையில் தங்களின் தனித்துவமான தயாரிப்புகளை களமிறக்க தயாராக உள்ளன. வெளியீட்டு நிகழ்வுகள் ஜனவரி மாதத்திலேயே நிறுவனங்களால் ஏற்பாடு செய்யப்படுகின்றன, இதில் பல ஸ்மார்ட்போன்கள் சந்தையில் அறிமுகப்படுத்தப்படும். குறிப்பாக, இதில் 2024ஆம் ஆண்டின் தொடக்கத்தில் சந்தையில் வெளியாக காத்திருக்கும் மொபைல்கள் குறித்து காணலாம். 


ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் 2024ஆம் ஆண்டிலேயே பல்வேறு நிகழ்வுகளில் தங்கள் புதிய தயாரிப்புகளை வெளியிட தயாராகிவிட்டன. சில வெளியீட்டு நிகழ்வுகள் ஜனவரி 4 ஆம் தேதி (வரும் வியாழக்கிழமை) ஒரே நாளில் நடக்கின்றன. Tecno, Xiaomi மற்றும் Vivo ஆகியவற்றால் நடத்தப்படும் இந்த நிகழ்வுகளில் சில இந்தியாவில் நடைபெறுகின்றன. இது தவிர, மீதமுள்ள இரண்டு வெளியீட்டு நிகழ்வுகள் சீனாவில் OnePlus மற்றும் Honor நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 


மேலும் படிக்க | டக்குனு போட்டோஸ் டெலீட் ஆகிவிட்டதா... ஈஸியாக மீட்டுக்கலாம் - வழிகள் இதோ!


Vivo X100 Series


இந்த சீரிஸில், பயனர்களுக்காக இரண்டு ஸ்மார்ட்போன்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. Vivo X100 மற்றும் Vivo X100 Pro ஆகியவை ஆகும். இந்த மொபைல் ஜனவரி 4ஆம் தேதி இந்திய சந்தையில் Vivo நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்படும். இந்த போன் 6.78 இன்ச் 1.5K 120Hz (LTPO) வளைந்த OLED டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. மொபைலில், 50MP முதன்மை கேமரா மற்றும் 60MP அல்ட்ராவைடு கேமரா இருக்கும் என கூறப்படுகிறது. X100 மாடலில் 100W வயர்டு சார்ஜிங்குடன் 5,000mAh பேட்டரியைக் கொண்டிருக்கும். அதே நேரத்தில், X100 Pro 120W வயர்டு மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங் கொண்ட 5,400mAh பேட்டரியை கொண்டிருக்கும் எனலாம்.


Tecno Pop 8


டெக்னோ பாப் 8 ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஜனவரி 3ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 6.6 இன்ச் HD+ டிஸ்ப்ளே மற்றும் 90Hz புதுப்பிப்பு வீதத்துடன் (Refresh Rate) உடன் வருகிறது. இது உங்களுக்கு மென்மையான ஸ்க்ரோலிங் மற்றும் கேமிங் அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மொபைலில் 13MP பின்புற கேமரா உள்ளது. மேலும், 5,000mAh பேட்டரியுடன் மொபைல் வருகிறது. இது 10W சார்ஜிங்கை ஆதரிக்கிறது. இது Unisoc T606 சிப்செட் கொண்டது. இதன் விலை இன்னும் உறுதியாக அறிவிக்கப்படவில்லை.


OnePlus Ace 3


இந்த ஸ்மார்ட்போன் ஜனவரி 4ஆம் தேதி சீனாவில் அறிமுகப்படுத்தப்படும். இந்த போன் 6.78 இன்ச் 1.5K 120Hz டிஸ்ப்ளே மற்றும் Qualcomm Snapdragon 8 Gen 2 சிப்செட் கொண்டிருக்கும். இந்த மொபைலில், 50MP பிரதான கேமரா, 8MP அல்ட்ராவைடு கேமரா மற்றும் 2MP மேக்ரோ கேமராவுடன் வரும். செல்ஃபிக்காக 16MP கேமரா வழங்கப்படும். 5,500mAh பேட்டரியுடன், இது 100W சார்ஜிங்கை ஆதரிக்கும்.


Redmi Note 13 Series


இந்த சீரிஸில் மூன்று மாடல்கள் கிடைக்கும். Redmi Note 13 5G, Redmi Note 13 Pro 5G மற்றும் Redmi Note 13 Pro Plus 5G ஆகியவை ஆகும். இது வரும் ஜனவரி 4ஆம் தேதி இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என தெரிகிறது. இந்த ஸ்மார்ட்போன் IP68 வாட்டர் ரெசிஸ்டன்ஸ் மதிப்பீட்டில் வருகிறது. வளைந்த OLED டிஸ்ப்ளே மற்றும் 200MP கேமரா உள்ளிட்ட பல சிறந்த அம்சங்களை இந்த ஸ்மார்ட்போனில் காணலாம்.


மேலும் படிக்க | பெங்களூருவில் டெஸ்லா கார்... ஆச்சர்யத்தில் உறைந்த நெட்டிசன்கள் - பின்னணி என்ன?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ