Year Ender 2023: புயலை கிளப்பிய 5ஜி ஸ்மார்ட்போன்கள்... இந்தாண்டின் நாலு நச் மொபைல்கள்!

Year Ender 2023: நடப்பு 2023ஆம் ஆண்டு அறிமுகமான 20 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவான ஸ்மார்ட்போன்களையும், அதன் முக்கிய அம்சங்களையும் இதில் காணலாம்.

Written by - Sudharsan G | Last Updated : Dec 23, 2023, 11:30 AM IST
  • 5ஜி ஸ்மார்ட்போன்கள் இந்தாண்டு அதிகளவில் அறிமுகமாகின.
  • இருப்பினும், ரூ.20 ஆயிரத்திற்கும் கீழ் குறைவாகவே வெளியானது.
  • அதில் இந்த நான்கு மொபைல்கள் குறிப்பிடதக்கவை.
Year Ender 2023: புயலை கிளப்பிய 5ஜி ஸ்மார்ட்போன்கள்... இந்தாண்டின் நாலு நச் மொபைல்கள்! title=

Year Ender 2023, 5G Smartphones: 2023ஆம் ஆண்டு இன்னும் சில நாள்களில் நிறைவடைந்து புத்தாண்டு பிறக்க உள்ளது. புத்தாண்டை கோலாகலமாக கொண்டாடும் முன் நடப்பு 2023ஆம் ஆண்டை திரும்பிப்பார்த்து முக்கிய அம்சங்களை நினைவுக்கூர்வது முக்கியமானது. ஏனென்றால், நடப்பாண்டின் தொடர்ச்சியை புரிந்துகொண்டால்தான் அடுத்தாண்டுக்கான எதிர்பார்ப்பை நாம் சரிவர கட்டமைக்க முடியும் எனலாம்.

இந்த ஆண்டு, Oppo, Vivo, Oneplus உள்ளிட்ட பல நிறுவனங்கள் தங்களின் பல்வேறு 5ஜி ஸ்மார்ட்போன்களை உலகளவிலும் இந்திய சந்தையிலும் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்த சாதனங்கள் அனைத்தும் லேட்டஸ்ட் அம்சங்களுடன் பொருத்தப்பட்டிருந்தன. 

ஆனால் 20 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவான 5ஜி ஸ்மார்ட்போன்கள் என்று எடுத்து பார்த்தால் அதன் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே இருக்கும். நீங்கள் பட்ஜெட்டில் 5ஜி ஸ்மார்ட்போன் வாங்க விரும்பினால், இது உங்களுக்கு பெரிதும் உதவிகரமாக இருக்கும். இந்தாண்டு அறிமுகமான 20 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவான ஸ்மார்ட்போன்களை இதில் காணலாம்.

மேலும் படிக்க | கிறிஸ்துமஸில் பிடிச்சவங்களுக்கு மொபைல் கிப்ட் பண்ணுங்க... இருக்குது முரட்டு தள்ளுபடி!

iQOO Z7 5G

இந்த மொபைலின் விலையை முதலில் சொல்லிவிடுவோம். இது 18 ஆயிரத்து 999 ரூபாயாகும். இது ஆண்ட்ராய்டு 13 அடிப்படையிலான Funtouch OS 13 மூலம் இயங்குகிறது. இது 64MP மற்றும் 2MP கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. மேலும், சாதனத்தில் 16MP முன்பக்க கேமரா உள்ளது. மொபைலில் 4500mAh பேட்டரி உள்ளது, இதில் 44W ஃபிளாஷ் சார்ஜிங் உதவிக்கரமாக இருக்கும்.  

Vivo T2 5G

Vivo நிறுவனத்தின் இந்த 5ஜி ஸ்மார்ட்போனில் AMOLED டிஸ்ப்ளே உள்ளது, இது 90Hz புதுப்பிப்பு வீதத்துடன் (Refresh Rate) உடன் வருகிறது. இந்த மொபைலில் சிறந்த புகைப்படங்களை எடுக்கலாம், அதற்கேற்ப 64MP OIS ஆண்டிஷேக் (Anti-Shake) கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மொபைலில் Snapdragon 695 5ஜி சிப்செட் உள்ளது. இதில் 4500mAh பேட்டரி உள்ளது. இதன் விலை 16 ஆயிரத்து 999 ரூபாயாகும்.

Poco X5 Pro

Poco நிறுவனத்தின் இந்த மொபைல் Snapdragon 778G சிப்செட் பிராஸஸரை கொண்டுள்ளது. இதில் 6.67 இன்ச் Xfinity AMOLED டிஸ்ப்ளே உள்ளது. மேலும் மொபைலில் 108MP, 8MP மற்றும் 2MP கேமரா அமைப்பு உள்ளது. செல்பி எடுக்க 16MP முன்பக்க கேமரா உள்ளது. இந்த மொபைல் 5000mAh பேட்டரியுடன் வருகிறது, இது 67W வேகமான சார்ஜிங்கை ஆதரிக்கிறது.

OnePlus Nord CE 3 Lite 5G

இந்த மொபைலில் Qualcomm Snapdragon 695 பிராஸஸர் உள்ளது, இது போனின் செயல்திறனை அபாரமாக்குகிறது. இது 67W SUPERVOOC சார்ஜிங்கை ஆதரிக்கும் 5000mAh பேட்டரியும் கொண்டுள்ளது. மொபைலில் 108MP, 2MP மற்றும் 2MP பின்புற கேமராக்கள் உள்ளன. செல்ஃபிக்காக 16MP முன்பக்கக் கேமராவைக் கொண்டுள்ளது. இதன் விலை 19 ஆயிரத்து 998 ரூபாயாகும்.
 
மேலும் படிக்க | அமேசான் பிரைம் பயனர்களுக்கு நல்ல செய்தி... சந்தா அதிரடி குறைப்பு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News