ISRO Latest News: இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து காலை 10 மணிக்கு ககன்யான் பயணத்தின் சோதனை வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. இதன்மூலம் அனைத்து தடைகளையும் சவால்களையும் தாண்டி, ககன்யான் பயணத்தின் முதல் சோதனை விமானத்தை ஏவுவதன் மூலம் இஸ்ரோ வரலாறு படைத்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதற்கு இது டெஸ்ட் வெஹிக்கிள் அபார்ட் மிஷன்-1 மற்றும் டெஸ்ட் வெஹிக்கிள் டெவலப்மெண்ட் ஃப்ளைண்ட் (டிவி-டி1) என்றும் பெயரிடப்பட்டு உள்ளது. அதாவது எளிமையான மொழியில் சொல்லவேண்டும் என்றால், விண்வெளி பயணத்தின் போது ராக்கெட்டில் ஏதேனும் கோளாறு ஏற்பட்டால், விண்வெளி வீரரை பாதுகாப்பாக பூமிக்குக் கொண்டு வரும் சிஸ்டம் சோதனை செய்யப்பட்டது.


நான் ரொம்ப ஹேப்பி - இஸ்ரோ தலைவர் எஸ் சோம்நாத்


இந்த வரலாற்று வெற்றி குறித்து இஸ்ரோ தலைவர் எஸ் சோம்நாத் கூறுகையில், டிவி-டிவி1 பணி வெற்றிகரமாக தொடங்கப்பட்டு உள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வெற்றிக்காக ஒட்டுமொத்த இஸ்ரோ குழுவிற்கும் வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.



மேலும் படிக்க - ஸ்டாலினுக்கு நன்றி சொன்ன இஸ்ரோ தலைவர்... சந்திப்புக்கு என்ன காரணம்?


வெற்றிகரமாக ஏவப்பட்டு மீண்டும் பூமிக்கு திரும்பிய ககன்யான் சோதனைக் கலன்


மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தில் மொத்தம் மூன்று கட்ட சோதனைகள் உள்ளது. ஒற்றை நிலை திரவ ராக்கெட், குழு தொகுதி மற்றும் க்ரூ எஸ்கேப் சிஸ்டம் ஆகியவை அபார்ட் மிஷனுக்காக உருவாக்கப்பட்டன.  அதன் முதல் கட்ட சோதனை இன்று நடைபெற்றது. இந்த சோதனை 8.8 நிமிடங்கள் நீடித்தது. முதல் சோதனையில், 17 கிமீ தூரம் சென்ற பிறகு ராக்கெட்டில் இருந்து சோதனைக் கலன் வெற்றிகரமாக பிரிந்து சென்றது. அடுத்த 9 நிமிடங்களில் பிரிந்து சென்ற சோதனைக் கலன் மூன்று பாரசூட்டுடன் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 10 கிமீ தொலைவில் உள்ள வங்காள விரிகுடாவில் பத்திரமாக தரையிறக்கப்பட்டது.



முதல்கட்ட சோதனை இருமுறை ஒத்தி வாய்ப்பு


முன்னதாக இன்று இருமுறை இந்த சோதனைஉ பணி ஒத்திவைக்கப்பட்டது. இது காலை 8 மணிக்கு ஏவப்பட இருந்த நிலையில், சாதகமற்ற வானிலை காரணமாக நேரம் 8.45 ஆக மாற்றப்பட்டது. ராக்கெட் ஏவுவதற்கு 5 வினாடிகளுக்கு முன்பு என்ஜின்னில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக கவுண்ட் டவுட் நிறுத்தப்பட்டது. சிறிது நேரம் கழித்து பிரச்சனை சரி செய்யப்பட்டு சரியாக காலை 10 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டா முதலாவது ஏவுதளத்தில் இருந்து டிவி-டி1 (TV-D1) ககன்யான் மாதிரி சோதனை விண்கலம் வெற்றிகரமாக ஏவப்பட்டது.



ககன்யான் திட்டத்தில் நான்கு சோதனைகள்


மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தில் மொத்தம் நான்கு மாதிரி சோதனைகள் மேற்கொள்ளபப்ட உள்ளது. இன்று வெற்றிகரமாக ஏவப்பட்ட TV-D1 ஐத் தொடர்ந்து TV-D2, D3 மற்றும் D4 சொதைகள் இன்னும் நடைபெறவுள்ளது.


மேலும் பற்றிக்க - இஸ்ரோ தலைவரின் மாதச் சம்பளம் இவ்வளவு தானா... இது நியாமா - கேள்வி எழுப்பிய தொழிலதிபர்!


ககன்யான் மிஷன் குறிக்கோள் என்ன?


ககன்யான்-வில் 3 விண்வெளி வீரர்கள் 400 கிமீ தூரம் பயணம்


'ககன்யான்' மூலம் 3 உறுப்பினர்கள் கொண்ட குழு 400 கிமீ மேலே உள்ள பூமியின் சுற்றுப்பாதைக்கு 3 நாள் பணிக்காக அனுப்பப்படும். இதன் பிறகு, சோதனைக் கலன் பாதுகாப்பாக கடலில் தரையிறக்கப்படும். இந்த பயணத்தில் இந்தியா வெற்றி பெற்றால், மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் திட்டத்தில் வெற்றி பெற்ற நான்காவது நாடாக இந்தியா மாறும். அமெரிக்கா, சீனா மற்றும் ரஷ்யா இதற்கு முன் மனிதர்களை விண்ணுக்கு அனுப்பி உள்ளது,


பெங்களூரு பயிற்சி நிலையத்தில் விண்வெளி வீரர் பயிற்சி


இதற்காக நான்கு விண்வெளி வீரர்களுக்கு இஸ்ரோ பயிற்சி அளித்து வருகிறது. பெங்களூருவில் நிறுவப்பட்ட விண்வெளி வீரர் பயிற்சி நிலையத்தில், அவர்களுக்கு வகுப்பறை பயிற்சி, உடல் தகுதி பயிற்சி, சிமுலேட்டர் பயிற்சி மற்றும் விமான உடை பயிற்சி அளிக்கப்படுகிறது.


பிரதமர் மோடி 2018 இல் ககன்யான் திட்டத்தை அறிவித்தார்


2018 ஆம் ஆண்டு, பிரதமர் மோடி தனது சுதந்திர தின உரையில் ககன்யான் திட்டத்தை அறிவித்தார். இந்த பணியை 2022க்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இருப்பினும், கோவிட் தொற்றுநோய் காரணமாக அது தாமதமானது. இப்போது 2024 ஆம் ஆண்டின் இறுதியில் அல்லது 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இது முடிவடையும். ககன்யான் பணிக்காக சுமார் 90.23 பில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


மேலும் பற்றிக்க - விண்வெளிக்கு மனிதர்களை அனுப்ப இஸ்ரோ திட்டம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ