5Gயை வெளியிடும் BSNL: நீங்களும் BSNL நெட்வொர்க்கைப் பயன்படுத்துபவராக இருந்தால், இந்தச் செய்தி உங்கள் மனதை மகிழ்விக்கும். கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, மத்திய அரசு ஒரு பெரிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அடின்படி விரைவில் 25000 மொபைல் டவர்களை நிறுவ இந்திய அரசு தயாராகி வருகிறது. இது தொடர்பான தகவலை  தொடர்பு துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். மேலும், புதிய டவர்ககள் அமைப்பதற்கு ரூ.36,000 கோடி அரசு அனுமதி அளித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

5ஜி சேவையை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். மத்திய தகவல் தொடர்பு அமைச்சர், மாநில தகவல் தொழில்நுட்ப அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதன் போது, ​​அனைத்து மாநிலங்களின் தகவல் தொழில்நுட்ப அமைச்சர்களும், இணைப்பை ஒரு சவாலான விஷயமாக கூறினர். அப்போது இது குறித்து அஸ்வினி வைஷ்ணவ் கூறுகையில், 'இணைப்பைப் பொறுத்தவரை, மாநிலங்களில் இணைப்பை மேம்படுத்த, மாநிலங்கள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.


மேலும் படிக்க | பிளிப்கார்ட் மற்றும் அமேசானுக்கு ஆப்பு வைத்த அரசு இணையதளம்


அனைத்து மாநில அரசுகளையும் பாராட்டினார்
இதனிடையே பிரதமர் கதி சக்தி மாஸ்டர் திட்டத்தில் இணைந்ததற்காக அனைத்து மாநில அரசுகளையும் மத்திய அமைச்சர் பாராட்டினார். ஒன்றிணைந்து செயல்படுவதால் நல்ல பலன் கிடைக்கும் என்றார். பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) புத்துயிர் பெறுவதன் மூலம் இணைப்புப் பிரச்சனை பெரிய அளவில் தீர்க்கப்படும் என்றும் மத்திய அமைச்சர் உறுதியளித்தார். பிஎஸ்என்எல்-ன் மறுமலர்ச்சிக்காக எங்களிடம் ரூ.1.64 லட்சம் கோடி உள்ளது, இது அவர்களின் மூலதன முதலீட்டுத் தேவை மற்றும் தொழில்நுட்பத்தை மேம்படுத்த போதுமானது என்றார்.


பல நகரங்களில் 5ஜி சேவை கிடைக்கும்
வரும் காலத்தில், நாட்டின் 200க்கும் மேற்பட்ட நகரங்கள் 5ஜி சேவையைப் பெறத் தொடங்கும் என மத்திய அமைச்சர் முன்னதாக அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அஸ்வினி வைஷ்ணவின் அறிக்கைக்குப் பிறகு, BSNL இன் 5G சேவை வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் நாட்டின் 200க்கும் மேற்பட்ட நகரங்களில் கிடைக்கத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


மேலும் படிக்க | 5ஜி ஸ்மார்ட்போன் ரூ.12 ஆயிரம் மட்டுமே.. குறைந்த விலையில் களமிறக்கிய சாம்சங்க்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ