ஜெம் ஆன்லைன் சந்தை: இந்தியாவில் ஆன்லைன் ஷாப்பிங் மோகம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்த வரிசையில் அமேசான் மற்றும் பிளிப்கார்ட் போன்ற இ-காமர்ஸ் இணையதளங்கள் மிகவும் பிரபலமானவை. விற்பனை மற்றும் சலுகைகள் காரணமாக, இந்த தளங்களில் பொருட்கள் மிகவும் மலிவான விலையில் கிடைக்கின்றன. இதன் காரணமாக, ஆன்லைன் சந்தையில் இந்த தளங்கள் தங்களின் ஆதிக்கம் செலுத்துகின்றனர். நாம் ஆன்லைன் ஷாப்பிங் செய்யும் போதெல்லாம், இந்த தளங்களை கண்டிப்பாக பார்வையிடுவோம். இருப்பினும், Amazon மற்றும் Flipkart ஐ விட மலிவான பொருட்கள் கிடைக்கும் ஒரு வலைத்தளம் உள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா? இன்று நாம் இந்த இணையதளத்தைப் பற்றி தான் காண உள்ளோம்.
இங்கு மலிவான பொருட்கள் கிடைக்கும்
தற்போது நாம் காண உள்ள இணையதளத்தின் பெயர் GeM (Government e Marketplace) ஆகும், இது அரசாங்கத்தால் நடத்தப்படும் மார்க்கெட் ஆகும். இங்கு பொருட்களை வாடிக்கையாளர் மலிவு விலையில் வாங்கலாம். இந்த சந்தையில் பொருட்களின் தரம் குறித்தும் சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது என்பதுதான் மிக சிறப்பான விஷயமாகும். இந்த சந்தையைப் பற்றி இன்னும் பலருக்குத் தெரியாது. இருப்பினும், ஃப்ளிப்கார்ட் மற்றும் அமேசானை விட குறைந்த விலையில் இந்த சந்தையில் பொருட்கள் கிடைக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | 5ஜி ஸ்மார்ட்போன் ரூ.12 ஆயிரம் மட்டுமே.. குறைந்த விலையில் களமிறக்கிய சாம்சங்க்
எவ்வளவு மலிவான விலையில் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது
இந்த இணையதளத்தில் எவ்வளவு மலிவாகப் பொருட்கள் வழங்கப்படுகின்றன என்று உங்கள் மனதில் கேள்வி இருந்தால், 2021-22 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட பொருளாதார ஆய்வில், ஜெம்மில் மிகவும் மலிவு விலையில் கிடைக்கும் 10 தயாரிப்புகள் இருப்பது தெரியவந்தது.
இந்த ஆய்வில், ஜெம்மில் கிடைக்கும் தயாரிப்புகள் மற்றும் பிற இ-காமர்ஸ் தளங்களில் கிடைக்கும் தயாரிப்புகள் உட்பட மொத்தம் 22 தயாரிப்புகளுக்கு இடையே ஒரு ஒப்பீடு செய்யப்பட்டது, மேலும் 10 தயாரிப்புகள் மற்ற தளங்களை விட 9.5 சதவீதம் மலிவானவை என்று கண்டறியப்பட்டது. எடுத்துக்காட்டாக, மற்ற தளங்களில் ரூ. 100 விலையுள்ள தயாரிப்பு ஜெம்மில் சுமார் ரூ.90க்கு மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் படிக்க | Redmi Note 12 4G: அழகான தோற்றம், அற்புதமான அம்சங்கள்.. விரைவில் வருகிறது!!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ