அமேசான் சம்மர் அப்ளையன்சஸ் ஃபெஸ்ட்: அமேசானில் கோடைகால உபகரணங்கள் திருவிழா நடந்து வருகிறது. இந்த விற்பனை பிப்ரவரி 21 அதாவது இன்று தொடங்கி, பிப்ரவரி 22 அதாவது நாளை வரை மட்டுமே இருக்கும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த விற்பனையில் விண்டோ ஏசி, ஸ்பிளிட் ஏசி, ஃப்ரிட்ஜ் மற்றும் கூலர் ஆகியவற்றில் பெரும் தள்ளுபடிகள் கிடைக்கும். குளிர்சாதன பெட்டிகள் (ஃப்ரிட்ஜ் ) மற்றும் குளிரூட்டிகள் (ஏசி) ஆகியவற்றுக்கு 40% வரை தள்ளுபடி கிடைக்கும். கோடை காலத்திற்கு தயாராக விண்டொ ஏசி வாங்கும் எண்ணத்தில் நீங்கள் இருந்து, ஆனால், உங்கள் பட்ஜெட் குறைவாக இருந்தால், இந்த விற்பனை உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். வோல்டாஸின் விண்டோ ஏசி-களை வாடிக்கையாளர்கள் மிக மலிவாக வாங்கலாம். மலிவான விலையில் ஏசி-களை இந்த விற்பனையில் எப்படி வாங்குவது என இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம். 


அமேசான் சம்மர் அப்ளையன்சஸ் ஃபெஸ்ட்: வோல்டாஸ் 1.4 டன் விண்டோ ஏசி சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள்


அமேசான் விற்பனையில் கிடைக்கும் இந்த ஏசி வோல்டாஸ் 1.4 டன் விண்டோ ஏசி 5 ஸ்டார் மதிப்பீட்டுடன் வருகிறது. அதாவது நாள் முழுவதும் இயங்கினாலும் இதனால் வரும் மின்சாரக் கட்டணம் மிகக் குறைவாக இருக்கும். அதன் அறிமுக விலை ரூ. 33,990 ஆகும். எனினும், இந்த விற்பனையில் இந்த ஏசி ரூ.27,990-க்கு கிடைக்கிறது. அதாவது, இந்த விண்டோ ஏசியில் 6 ஆயிரம் ரூபாய் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதற்குப் பிறகு இந்த விற்பனையில் வங்கி மற்றும் எக்ஸ்சேஞ்ச் சலுகைகளும் கிடைக்கின்றன. இதன் காரணமாக இந்த விண்டோ ஏசியின் விலை இன்னும் கணிசமாகக் குறையும்.


மேலும் படிக்க | Flipkart Sale, வெறும் ரூ.764க்கு 32 இன்ச் ஸ்மார்ட் டிவியை வாங்கலாம் 


அமேசான் சம்மர் அப்ளையன்சஸ் ஃபெஸ்ட்: வோல்டாஸ் 1.4 டன் விண்டோ ஏசி-க்கு கிடைக்கும் பேங்க் ஆஃபர்


வோல்டாஸ் 1.4 டன் விண்டோ ஏசியை வாங்க, எச்டிஎஃப்சி வங்கி கார்டு மூலம் பணம் செலுத்தினால், 10 சதவீதம் உடனடி தள்ளுபடி கிடைக்கும். அதாவது ஏசி-யின் விலையில் ரூ.2,799 குறைக்கப்படும். அதாவது, விண்டோ ஏசியின் விலை ரூ.25,191 ஆகக் குறையும். இதற்கு மேல் இந்த விற்பனையில் ஒரு எக்ஸ்சேஞ்ச் சலுகையும் கிடைக்கிறது. 


அமேசான் சம்மர் அப்ளையன்சஸ் ஃபெஸ்ட்: வோல்டாஸ் 1.4 டன் விண்டோ ஏசி எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்


வோல்டாஸ் 1.4 டன் விண்டோ ஏசி-யில் ரூ.4,430 மதிப்பிலான எக்ஸ்சேஞ்ச் சலுகை கிடைக்கிறது. வாடிக்கையாளர்கள் தங்கள் பழைய ஏசியை மாற்றிக் கொண்டால், இந்த தள்ளுபடி கிடைக்கும். ஆனால் உங்கள் பழைய ஏசியின் கண்டிஷன் நன்றாகவும், லேட்டஸ்ட் மாடலாகவும் இருந்தால் மட்டுமே ரூ.4,430 தள்ளுபடி கிடைக்கும். வாடிக்கையாளர்கள் முழுமையாக அனைத்து சலுகைகளையும் பெற முடிந்தால், வெறும் 20,761 ரூபாய்க்கு ஏசி-ஐ வாங்கிச் செல்லலாம். 


மேலும் படிக்க | போலி பொருட்களை விற்கும் 5 இந்திய நிறுவனங்கள் - அமெரிக்கா அதிரடி 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR