போலி பொருட்களை விற்கும் 5 இந்திய நிறுவனங்கள் - அமெரிக்கா அதிரடி

தரமற்ற பொருட்களை விற்பனை செய்வதாக 5 இந்திய ஆன்லைன் தளங்களை அமெரிக்கா போலி என அறிவித்துள்ளது

Written by - S.Karthikeyan | Last Updated : Feb 20, 2022, 08:10 PM IST
  • 5 ஆன்லைன் தளங்கள் மீது அமெரிக்கா குற்றச்சாட்டு
  • போலி பொருட்களை விற்பனை செய்வதாக புகார்
  • இந்தியா மார்ட் நிறுவனமும் பட்டியலில் இடம்பெற்றுள்ளது
போலி பொருட்களை விற்கும் 5 இந்திய நிறுவனங்கள் - அமெரிக்கா அதிரடி title=

உலகளவில் போலியான பொருட்களை விற்பனை செய்து வரும் ஆன்லைன் தளங்கள் குறித்த விவரங்களை அமெரிக்க வர்த்தக பிரதிநிதிகள் அமைப்பு வெளியிட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டுக்கான பட்டியிலில் 5 இந்திய ஆன்லைன் தளங்கள் இடம்பெற்றுள்ளன. பிரபல மின்னணு வர்த்தக நிறுவனமான இந்தியா மார்ட் டாட் காம் நிறுவனம் உட்பட பாலிகா பஜார், ஹீரா பன்னா, ஹிதர்பூர், டேங்க் ரோடு ஆகிய ஆன்லைன் தளங்கள் இந்தப் பட்டியலில் இடம்பிடித்துள்ளன.

மேலும் படிக்க | அதிகரிக்கும் 'Zero Click' ஹேக்கிங் - தப்பிக்க வழி உண்டா?

இந்தியாவில் பிரபலமாக இருக்கும் இந்திய மார்ட் டாட் காம் நிறுவனம் இந்தப் பட்டியலில் இடம்பெற்றிருப்பது வாடிக்கையாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மோசமான அல்லது போலி பொருட்களை விற்பனை செய்யும் பட்டியலை தயாரிக்கும் அமெரிக்க வர்த்தக பிரதிநிதிகள் கூட்டமைப்பானது ஆண்டுதோறும் இத்தகைய பட்டியலை வெளியிட்டு வருகிறது. 2021 ஆம் ஆண்டை பொறுத்த வரை உலகளவில் சுமார் 42 ஆன்லைன் தளங்கள், 35 ஆப்லைன் நிறுவனங்கள் இதில் இடம்பெற்றுள்ளன. 

இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள அமெரிக்க பிரதிநிதிகள் கூட்டமைப்பு, இந்தப் பட்டியலில் இடம்பிடித்துள்ள நிறுவனங்கள் தங்கள் தளங்களில் விற்பனை செய்யும் மோசமான மற்றும் தரமற்ற பொருட்களின் விற்பனையை தடுக்க தவறிவிட்டதாகவும், வாடிக்கையாளர்களின் குரல்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளது. 

மேலும் படிக்க | கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்கிறீர்களா; வருமான வரி விதிகள் கூறுவது என்ன !

மும்பையை சேர்ந்த ஹீரா பன்னா ஷாப்பிங் சென்டர், கோல்கட்டாவின் ஹிதர்பூர் பேன்ஸி மார்க்கெட் ஆகியவை போலி வாட்சுகள், காலணிகள், மற்றும் அழகு சாதன பொருட்கள் போன்றவற்றை அதிகம் விற்பனை செய்கின்றன என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. டெல்லி பாலிகா பஜார், டேங்க் ரோடு சந்தைகளும் மீது இதே குற்றச்சாட்டை முன்வைத்துள்ள இந்த நிறுவனம், திருட்டு பொருட்கள் அதிகம் விற்பனை செய்துள்ளதாகவும் கூறியுள்ளது. 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News