கோயப்புத்தூரை சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனமான பூம் மோட்டார்ஸ் (Boom Motors) இந்தியாவில் புதிய Corbett EV என்னும் மின்சார ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியுள்ளது. நிறுவனம் இந்த புதிய மின்சார இரு சக்கர வாகனத்தின் விலையை ரூ.89,999 என நிர்ணயித்துள்ளது. சந்தையில் உள்ள மற்ற பேட்டரியில் இயங்கும் ஸ்கூட்டர்களுடன் போட்டியிடப் போகும் நிலையில், நிறுவனம் நவம்பர் 12, 2021 முதல் புதிய கார்பெட் எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான முன்பதிவைத் தொடங்க உள்ளது. கார்பெட் EV (Corbett EV) ஆனது 2.3 kWh பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது. இதனை ஒரு முறை சார்ஜ் செய்தால் 200 கிமீ வரை இயக்க முடியும். பேட்டரி திறனை இரட்டிப்பாக்கி, 4.6 kW ஆக மாற்றும் ஆப்ஷனும் உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கார்பெட் மின்சார ஸ்கூட்டருடன் (Electric Scooter), தனியாக பிரித்தெடுக்கும் வகையிலான பேட்டரி வழங்கப்படுகிறது. இந்த ஸ்கூட்டரின் சார்ஜரை வீட்டில் உள்ள எந்த சாக்கெட்டிலும் பொருத்த முடியும் என்று மின்சார வாகன உற்பத்தியாளர் கூறுகிறார். இந்த புதிய ஸ்கூட்டரை மணிக்கு 75 கிமீ வேகத்தில் இயக்க முடியும். அதே நேரத்தில் 200 லோடுகள் இதில் ஏற்றலாம். மின்சார ஸ்கூட்டரை 5 வருட EMI உடன் வாங்கலாம் என்றும் கார்பெட் EV கூறியுள்ளது. கார்பெட் EV வாங்க மாதத்திற்கு 1,699 ரூபாய்  EMI செலுத்தினால் போதும். பூம் மோட்டார்ஸ் இந்த ஸ்கூட்டருக்கு 7 வருட வாரண்டியையும், பேட்டரிக்கு 5 வருட வாரண்டியையும் வழங்குகிறது.


ALSO READ:Ola Electric மின்சார ஸ்கூட்டர்: மீண்டும் தொடங்கும் முன்பதிவு 


பூம் மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அனிருத்தா ரவி நாராயணன் கூறுகையில், “இந்த நேரத்தில் பருவநிலை மாற்றம் என்பது நம் அனைவருக்கும் மிகப்பெரிய சவாலாக உள்ளது, மேலும் இந்தியாவில் மாசுபாட்டிற்கு மிகப்பெரிய காரணமாக உள்ள ‘வாகன மாசுபாட்டை’ முறியடிப்பது எங்கள் இலக்காக உள்ளது. பூம் மோட்டார்ஸ் பற்றி அவர் கூறும்போது, ​​“கடந்த 2 ஆண்டுகளாக பூம் மோட்டார்ஸின் ஒட்டுமொத்த குழுவும் தொடர்ந்து பணியாற்றி சாதனை புரிந்து, சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆண்டுக்கு 1 லட்சம் பைக்குகள் தயாரிக்கும் திறன் கொண்ட உற்பத்தி ஆலையை கோவையில் திறந்துள்ளோம். இந்த ஆலையில் நூற்றுக்கணக்கானவர்களுக்கு வேலை வாய்ப்பையும் அளித்துள்ளோம்’ என்றார். 


ALSO READ:Cheapest Electric Scooter: ரூ.50,000-க்குள் கிடைக்கும் அட்டகாசமான மின்சார ஸ்கூட்டர்கள் 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR