அட்டகாசமான புதிய Yamaha MT15க்கான முன்பதிவுகள் ஆரம்பம்
யமஹா மோட்டார் இந்தியாவின் புதிய வகை MT15 V2.0க்கான முன்பதிவு டீலர் மட்டத்தில் தொடங்கப்பட்டுள்ளது மற்றும் ஆர்வமுள்ளவர்கள் 5,000-10,000 ரூபாய் டோக்கன் செலுத்தி முன்பதிவு செய்யலாம்.
யமஹா மோட்டார் இந்தியா தனது சக்திவாய்ந்த மோட்டார் சைக்கிள் எம்டி15 இன் புதிய பதிப்பை மிக விரைவில் சந்தையில் அறிமுகப்படுத்த உள்ளது. தற்போது ஆடம்பரமாக தோற்றமளிக்கும் வி2.0 பைக்கின் முன்பதிவு டீலர் மட்டத்தில் தொடங்கப்பட்டுள்ளது, மகாராஷ்டிராவில் உள்ள ஒரு டீலர் யமஹா எம்டி15 வி2.0 இன் புகைப்படத்தை வெளியிட்டு முன்பதிவு தொடங்குவது குறித்து தெரிவித்துள்ளது. இதுதவிர நாட்டின் பல்வேறு யமஹா விற்பனையாளர்களும் புதிய எம்டி15 வெர்ஷன் 2.0 மாடலுக்கான முன்பதிவை துவங்கி உள்ளன.
புதிய யமஹா எம்டி15 வெர்ஷன் 2.0 மாடலுக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 2 ஆயிரத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 10 ஆயிரம் வரை வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த கட்டணம் விற்பனையாளர் மற்றும் மோட்டார்சைக்கிள் நிறத்திற்கு ஏற்ப வேறுபடும். இந்த மாடல் கிரே, வைட், கிளாசி பிளாக் மற்றும் ரேசிங் புளூ என நான்கு விதமான நிறங்களில் கிடைக்கும்.
மேலும் படிக்க | அட்டகாச மைலேஜ், மலிவான விலை: இந்தியாவின் மிகச்சிறந்த பைக்குகள்
யமஹா எம்டி15 வெர்ஷன் 2.0 மாடலின் அம்சங்கள் பற்றி பெசுகையில், இதில் மேம்பட்ட ஸ்டிரீட் நேக்கட் மோட்டார்சைக்கிள் மாடலில் கோல்டு ஃபினிஷ் செய்யப்பட்ட யுஎஸ்டி முன்புற ஃபோர்க்குளை கொண்டிருக்கும் என தெரிகிறது. மேலும் இதில் டூயல் சேனல் ஏ.பி.எஸ்., டிராக்ஷன் கண்ட்ரோல் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்படும். புதிய யமஹா எம்டி15 வெர்ஷன் 2.0 குவிக் ஷிஃப்டர் வசதியை பெறும் என தெரிகிறது. இத்துடன் முற்றிலும் புதிய இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், ப்ளூடூத் கனெக்டிவிட்டி உள்ளிட்டவை வழங்கப்படும் என கூறப்படுகிறது. அத்துடன் இதில் ரியல் டைம் டேட்டா மற்றும் இதர விவரங்களை ஸ்மார்ட்போனில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். மேம்பட்ட எம்டி15 வெர்ஷன் 2.0 மாடலில் ஆர்15 வி4 மாடலில் வழங்கப்பட்ட என்ஜினே வழங்கப்படும் என தெரிகிறது.
என்ஜின் பற்றி பேசுகையில் இதில், 155சிசி, சிங்கில் சிலிண்டர், லிக்விட் கூல்டு என்ஜின் மற்றும் விவிஏ தொழில்நுட்பம் வழங்கப்படலாம். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் மற்றும் அப்-குயிக் ஷிஃப்டர் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 18.1 பி.ஹெச்.பி. பவர், 14.2 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது என்றே தெரிகிறது.
இந்திய சந்தையில், புதிய யமஹா எம்டி15, டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி, பஜாஜ் பல்சர் என்எஸ் 200 மற்றும் கேடிஎம் டியூக் 200 போன்ற பைக்குகளுடன் போட்டியிடும். இந்த பைக்குகள் அனைத்தும் எஞ்சின் அடிப்படையில் வலிமையானவை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | Post Office வாடிக்கையாளர்களே அலர்ட், ஏப்ரல் 1 முதல் முக்கிய மாற்றங்கள்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR