New Smartphones: மார்ச் மாதம் பிறந்துவிட்டது. சந்தைகளில் சிற்சில மாற்றங்களும் நிகழ்ந்திருக்கும். அதேபோல், ஸ்மார்ட்போன் சந்தையிலும் பல்வேறு பொருள்கள் இந்த மார்ச் மாதத்தில் விற்பனைக்கு வர இருக்கின்றன. ஒவ்வொரு மாதமும் பல ஸ்மார்ட்போன்கள் உலகளவில் அறிமுகமாகிக் கொண்டுதான் இருக்கின்றன. முன்னணி நிறுவனங்கள் அதன் ஒவ்வொரு மாடல்களையும் அதற்கேற்ற சீசன்களில் வெளியிடுவதை வாடிக்கையாக வைத்திருக்கின்றன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சிலர் புதிய ஸ்மார்ட்போனை வாங்க வேண்டும் என திட்டமிட்டிருப்பார்கள். ஒரு சிலரோ இந்த மாதம் வெளியாகும் மொபைல்களை எதிர்நோக்கி காத்திருந்து அது ஏற்றதாக இருக்கும்பட்சத்தில் அதனை வாங்க முனைவார்கள். இதனாலேயே புதிய மொபைல்களை, இன்று ரிலீஸான புது படங்களுக்கு விமர்சனம் சொல்வது போன்று யூ-ட்யூபில் பல சேனல்கள் புதிய மொபைல்களை அக்கக்காக பிரித்துக் கூறி வீடியோ வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில், இந்த மார்ச் மாதத்தில் இந்திய சந்தையில் என்ட்ரி கொடுக்கப் போகும் ஸ்மார்ட்போன்கள் குறித்து இங்கு தெரிந்துகொள்ளலாம். 


மேலும் படிக்க | Hero Splendor: ஸ்பிளெண்டர் புது பைக்கை ஆன்லைனில் வாங்குவது எப்படி? இஎம்ஐ 2800 ரூபாய்


Realme 12 Plus


Realme 12 Plus ஸ்மார்ட்போன் வரும் மார்ச் 6ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இது MediaTek Dimensity 7050 சிப் உடனும், 120Hz புதுப்பிப்பு வீதத்துடன் கூடிய AMOLED டிஸ்பிளே உடன் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில், பாஸ்ட் சார்ஜிங் வசதி இருக்கும் என கூறப்படுகிறது. அதேபோல், பச்சை மற்றும் கோல்டன் நிறத்தில் ஸ்மார்ட்போன் என தெரிவிக்கப்படுகிறது. 


Vivo V30 Series


Vivo நிறுவனத்தின் V30 சீரிஸ் இரண்டு வேரியண்டில் மார்ச் 7ஆம் தேதி வெளியாகிறது. Vivo V30 மற்றும் Vivo V30 Pro என இரண்டு வேரியண்டில் வருகிறது. V30 மாடல் Snapdragon 7 Gen 3 சிப் உடன் இந்த ஸ்மார்ட்போன் வருகிறது. குறிப்பாக, இதில் பெரிய பேட்டரி, பாஸ்ட் சார்ஜிங் ஆப்ஷனுடன் வருகிறது. குறிப்பாக, 6.78 இன்ச் டிஸ்பிளே 120Hz புதுப்பிப்பு வீதத்துடன் வருகிறது. கேமராவும் அசத்தலாக உள்ளது. MediaTek Dimensity 8200 சிப் மற்றும் உயர்தர AMOLED டிஸ்ப்ளே உடன் Vivo V30 Pro மொபைல் வருகிறது. 


Nothing Phone 2a


வரும் மார்ச் 5ஆம் தேதி Nothing Phone 2a மொபைல் அறிமுகமாக உள்ளது. இதில் இரண்டு கேமரா அமைப்பு இருக்கும். இதில் MediaTek Dimensity 7200 Pro சிப் உடன் வருகிறது. 12ஜிபி RAM உடன் வருகிறது. 6.7 இன்ச் OLED டிஸ்பிளே உடன் வருகிறது. 5000mAh பேட்டரி உடன் பாஸ்ட்  சார்ஜிங் வசதியுடன் வருகிறது. 


Xiaomi 14


மார்ச் 7ஆம் தேதி அன்று அமேசானில் Xiaomi 14 மொபைல் அறிமுகமாக உள்ளது. 6.36 இன்ச் ஹை-ரெஸ்சோல்யூஷன் OLED டிஸ்பிளே 120Hz புதுப்பிப்பு வீதத்துடன் வருகிறது. இதில் 50MP மூன்று கேமரா அமைப்புடன் வருகிறது. முன்புற செல்ஃபி கேமரா 32MP உடன் வருகிறது.  


மேலும் படிக்க | மற்றவர்களின் இன்ஸ்டாகிராம் புரொபைலை ஸ்டோரியாக வைப்பது எப்படி?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ