நீங்கள் இன்ஸ்டாகிராமில் மற்றவர்களின் புரொபைலை ஸ்டோரியாக வைக்கலாம். இந்த அம்சம் இப்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான இன்ஸ்டாகிராம் தளம்தான் தற்போது இளைஞர்கள் மத்தியில் சக்கை போடு போடுகிறது. இளைஞர்கள் தங்களின் நேரத்தை கழிப்பதற்கு இந்த சமூக வலைதளத்தை அதிகம் பயன்படுத்துகின்றனர்.
அதிலும் குறிப்பாக இதில் வரும் ரீல்ஸ் பார்ப்பதற்காகவே ஒரு கூட்டம் இருக்கிறது எனலாம். இன்ஸ்டாகிராம் தளமும் தங்களின் பயனர்களுக்கு ஏற்ப பல புதிய அம்சங்களை அவ்வப்போது வழங்கி வருகின்றனர்.
அப்படிதான் புதிதாக பிறருடைய ப்ரோபைலை ஒருவர் தனது ஸ்டோரில் வைக்கலாம் என்ற அம்சம் கொண்டுவரப்பட்டுள்ளது. அதாவது உங்களுக்குத் தெரிந்த நபர்கள் அல்லது பிரபலங்களின் ப்ரோபைலை அப்படியே உங்களுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் வைத்து, அந்த நபரின் சமீபத்திய மூன்று பதிவுகளை ஸ்டோரியில் காண்பிக்கும்படி செய்ய முடியும்.
இந்த அம்சத்தை எப்போதும் போல Add to Story ஆப்ஷன் பயன்படுத்தி வைக்கலாம். அதுமட்டுமின்றி உங்களுடைய ஸ்டோரியை பார்ப்பவர்கள் அந்த பயனரின் ப்ரொபைலை பார்ப்பதற்காக வியூவ் ப்ரொபைல் என்ற என்ற பட்டனும் வைக்கப்பட்டுள்ளது.
இந்த அம்சம் இன்ஸ்டாகிராமில் ஆரம்ப நிலையில் உள்ள கண்டென்ட் கிரியேட்டர்களுக்கு உதவியாக இருக்கும். அவர்களுக்கு விரைவாக அதிக ஃபாலோயிர்கள் கிடைப்பதற்கு பயனுள்ளதாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.
இதுவும் நீங்கள் சாதாரணமாக ஸ்டோரி வைப்பது போலவே 24 மணி நேரத்தில் மறைந்துவிடும். இந்த புதிய அம்சம் விரைவில் எல்லா பயனர்களுக்கும் பயன்பாட்டுக்கு வரும் என மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. இப்படி பல புதிய அம்சங்களை தங்களின் தளத்தில் கொண்டு வந்து, தன் பயனர்களை தன்வசமாக்கி வைத்துள்ளது இன்ஸ்டாகிராம்.