Flipkart Sale: ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள இந்த லேப்டாப் வெறும் ரூ.15 ஆயிரத்துக்கு
ஃபிளிப்கார்ட்டில் கிராண்ட் கேஜெட் டேஸ் விற்பனை பிப்ரவரி 12 முதல் தொடங்கியுள்ளது, இன்று இந்த விற்பனையின் கடைசி நாளாகும்.
புதுடெல்லி: ஆன்லைன் ஷாப்பிங் தளமான பிளிப்கார்ட் கடந்த சில நாட்களாக கிராண்ட் கேஜெட் டேஸ் விற்பனையை நடத்தி வருகிறது. இந்த விற்பனையில், உங்களுக்கு அனைத்து வகையான மின்னணு சாதனங்களுக்கும் பெரும் தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. இன்று அதாவது பிப்ரவரி 16 இந்த விற்பனையின் கடைசி நாளாகும். விற்பனையின் கடைசி நாளில், ஆசஸ் விவோபுக் 15 (2021) லேப்டாப்பில் பெறும் அற்புதமான சலுகையை பெறலாம். இந்த சலுகையின் காரணமாக, இந்த லேப்டாப்பை ரூ.49,990க்கு பதிலாக ரூ.15,140க்கு வாங்கலாம். எப்படி என்று தெரிந்து கொள்வோம்..
ஆசஸ் லேப்டாப்பில் பெரும் தள்ளுபடி
ஆசஸ் லேப்டாப், ஆசஸ் விவோபுக் 15 (2021) மெல்லிய மற்றும் லேசான லேப்டாப் இன் ஒரிஜினல் விலை ரூ.49,990 ஆகம். ஆனால் பிளிப்கார்ட்டில் இந்த லேப்டாப்புக்கு 30% தள்ளுபடி வழங்கப்படுகிறது. அதன்படி இந்த லேப்டாப்பை ரூ.34,990க்கு வாங்கலாம். நீங்கள் விரும்பினால், இந்த லேப்டாப்பை இன்னும் மலிவாக வாங்கலாம். இந்த லேப்டாப்பிற்கு நீங்கள் பிளிப்கார்ட்ஆக்சிஸ் வங்கி கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி பணம் செலுத்தினால், உங்களுக்கு 5% கேஷ்பேக் கிடைக்கும், அதாவது ரூ.1,750 ஆகும். இதன் மூலம் லேப்டாப்பின் விலை ரூ.33,240 ஆக குறையும்.
மேலும் படிக்க | இந்த எண் உங்கள் பாஸ்வேர்டில் இருக்கிறதா? ஹேக்கர்களின் பிடியில் நீங்கள்
இந்த வழியில் 15 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கவும்
பிளிப்கார்ட்டில் ஒரு எக்ஸ்சேஞ்ச் ஆஃபரும் உள்ளது. அதன்படி உங்கள் பழைய லேப்டாப்பிற்கு ஈடாக இந்த லேப்டாப்பை வாங்கினால் ரூ.18,100 வரை தள்ளுபடி கிடைக்கும். இந்த எக்ஸ்சேஞ்ச் சலுகையின் முழுப் பலனையும் நீங்கள் பெற்றால், இந்த லேப்டாப்பை ரூ.49,990க்கு பதிலாக ரூ.15,140க்கு வீட்டிற்கு எடுத்துச் செல்லலாம். ஒட்டுமொத்தமாக, இந்த ஒப்பந்தத்தில் நீங்கள் ரூ.34,850 தள்ளுபடியைப் பெறலாம்.
இந்த சிறப்பு லேப்டாப்பின் அம்சங்கள்
ஆசஸ் இன் இந்த கோர் i3, 11th ஜென் லேப்டாப் விண்டோஸ் 10 ஹோம்மில் வேலை செய்கிறது மற்றும் மிகவும் மெல்லியதாகவும், இலகுவாகவும் உள்ளது. இந்த லேப்டாப்பில், நீங்கள் 15.6-இன்ச் எப்எச்டி ஆன்டி-க்ளேர் டிஸ்ப்ளே, 4ஜிபி ரேம் மற்றும் 25ஜிபி எஸ்எஸ்டி ஸ்டோரேஜ் மற்றும் வலுவான பேட்டரி ஆயுள் ஆகியவற்றைப் பெறுவீர்கள். யூ.எஸ்.பி போர்ட்கள் மற்றும் எச்.டி.எம்.ஐ போர்ட்டுடன், நீங்கள் வெப்கேமரையும் பெறுவீர்கள். இதில், நீங்கள் ஒரு வருட ஆன்-சைட் வாரண்டி மற்றும் ஒரு வருட உள்நாட்டு வாரண்டியையும் பெறுவீர்கள்.
மேலும் படிக்க | தள்ளுபடி விலையில் ஐபோன் 12! இன்றே முந்துங்கள்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR