BSNL: இனி இரவிலும் கொண்டாட்டம்தான்... பிஎஸ்என்எல் கொடுக்கும் மாஸான டேட்டா திட்டம்!
BSNL Night Unlimited Data Pack: இரவு நேரத்தில் அதிக டேட்டாவை பயன்படுத்துபவரா நீங்கள், உங்களுக்கு என்றே பிஎஸ்என்எல் நிறுவனம் ஒரு அற்புதமான திட்டத்தை வழங்குகிறது, அதுகுறித்து இங்கு காணலாம்.
BSNL Night Unlimited Data Pack: பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் என்ற பிஎஸ்என்எல், இந்தியாவின் அரசுக்கு சொந்தமான தொலைத்தொடர்பு நிறுவனமானது. பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல், அதன் வாடிக்கையாளர்களுக்கு பரந்த அளவிலான ப்ரீபெய்ட் மொபைல் திட்டங்களை வழங்குகிறது.
பிஎஸ்என்எல் தற்போது தனது வாடிக்கையாளர்களுக்கு 2ஜி, 3ஜி மற்றும் 4ஜி சேவைகளை இந்தியா முழுவதும் வரையறுக்கப்பட்ட அளவில் வழங்குகிறது. மேலும், பிஎஸ்என்எல் அதன் பயனர்களுக்கு பலவிதமான ப்ரீபெய்ட் ரீசார்ஜ் விருப்பங்களைக் கொண்டுள்ளது.
அந்த வகையில், நீங்கள் இரவு நேரத்தில் அன்லிமிடெட் டேட்டாவை வழங்கும் திட்டத்தை தேடுகிறீர்கள் என்றால், பிஎஸ்என்எல் ஒரு கவர்ச்சிகரமான ரீசார்ஜ் திட்டத்தைக் கொண்டுள்ளது. பிஎஸ்என்எல், 599 ரூபாய்க்கு வழங்கும் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தைதான் இங்கு குறிப்பிடுகிறோம். மேலும், இந்த ரீசார்ஜ் திட்டத்தின் புதுப்பிக்கப்பட்ட மற்றும் தற்போதைய நன்மைகளைப் இங்கு பார்ப்போம். https://zeenews.india.com/tamil/technology/bsnl-offers-this-special-70-day-validity-prepaid-plan-437396
மேலும் படிக்க | 5G உடன் இதுவும் இலவசமா? அமர்க்களப்படுத்தும் ஏர்டெல், பாராட்டும் கஸ்டமர்ஸ்!!
ரூ. 599 ரீசார்ஜ் திட்டம்
பிஎஸ்என்எல் 599 ரூபாய்க்கான ப்ரீபெய்ட் ரீசார்ஜ் வாடிக்கையாளர்களுக்கு உள்ளூர், எஸ்டீடி மற்றும் ரோமிங் உட்பட வரம்பற்ற வாய்ஸ்-கால்களை வழங்குகிறது. MTNL பகுதிகளில் கூட, ஒவ்வொரு நாளும் 3 ஜிபி அதிவேக டேட்டா மற்றும் 84 நாட்கள் செல்லுபடியாகும். இது ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் சேவையை இலவசமாக அளிக்கிறது.
டேட்டா நன்மைகள்
மேற்கூறிய நன்மைகளுடன், பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் மின்னஞ்சல்கள் மற்றும் உடனடி செய்தி அனுப்புதல் மற்றும் இரவு நேர வரம்பற்ற டேட்டா, அவசர பயன்பாட்டுக்கு 40 Kbps வேகத்தில் அதிவேக ஒதுக்கீட்டின் வரம்பற்ற டேட்டாவைப் பயன்படுத்தி மதியம் 12 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இந்த சேவையை அனுபவிக்க முடியும். இந்தக் காலகட்டத்தில் பயன்படுத்தப்படும் டேட்டா பயனரின் FUP (நியாயமான பயன்பாட்டுக் கொள்கை) டேட்டா வரம்பைப் பாதிக்காது. எனவே நீங்கள் இரவில் தாமதமாக விழித்திருந்தால், உங்கள் இருப்பிடத்தில் 3ஜி அல்லது 4ஜி வேகம் இருந்தால், இந்த இரவு நேர வரம்பற்ற டேட்டா பயனுள்ளதாக இருக்கும்.
மற்ற நன்மைகள்
டேட்டா, வாய்ஸ் கால் மற்றும் எஸ்எம்எஸ் நன்மைகளுடன், பிஎஸ்என்எல் இந்த ரூ. 599 திட்டத்தை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் நிலையில், இலவச பிஎஸ்என்எல் ட்யூன்கள், Zing Music, Astrotell மற்றும் GameOn சேவைகளையும் சேர்த்து வழங்குகிறது.
84 நாட்கள் செல்லுபடியாகும் பிரிவில், பிஎஸ்என்எல் 769 ரூபாய்க்கு வேறொரு சிறப்பான திட்டத்தையும் பிஎஸ்என்எல் அளிக்கிறது. இந்த திட்டத்துடன் வரம்பற்ற அழைப்புகள், டேட்டா, பொழுதுபோக்கு மற்றும் கேம்ஸ் சலுகைகளை வழங்குகிறது. நீங்கள் OTT விருப்பங்களைத் தேடுகிறீர்களானால், பிஎஸ்என்எல் 769 ரூபாய்க்கான ப்ரீபெய்ட் திட்டத்துடன் ரீசார்ஜ் செய்யலாம், இது ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டாவை வழங்குகிறது.
மேலே சொல்லப்பட்ட திட்டங்கள் பெரும்பாலான தொலைத்தொடர்பு வட்டங்களில் கிடைக்கின்றன. இருப்பினும், சில திட்டங்கள் வட்டம் சார்ந்ததாகவும் இருக்கலாம். அதை பிஎஸ்என்எல் ஆப் அல்லது இணையதளத்தில் பார்க்கலாம்.
மேலும் படிக்க | அதிகமாக SPAM கால் வருகிறதா? ப்ளாக் செய்வது எப்படி?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ