BSNL Data Packs: மத்திய அரசுக்கு சொந்தமான தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல், அதன் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு கட்டணங்களின் அடிப்படையில், ப்ரீபெய்ட் மொபைல் திட்டங்களை வழங்குகிறது. பிஎஸ்என்எல் நிறுவனத்திடம் முழு அளவிலான 4ஜி, 5ஜி சேவைகள் இல்லை என்றாலும், தில பகுதிகளில் 2ஜி, 3ஜி, 4ஜி சேவைகளை வழங்குகிறது.
பெரும்பாலான நேரங்களில், 2ஜி, 3ஜி சேவைகளை கருத்தில் கொண்டு, டேட்டா பயன்பாட்டிற்கு பயனர்கள் பிஎஸ்என்எல்-ஐ சார்ந்து இருப்பது சிரமம்தான். இருப்பினும், சில வாடிக்கையாளர்களுக்கு, பிஎஸ்என்எல் மட்டுமே ஆப்ஷனாக இருக்கலாம். அவர்கள் தங்கள் பகுதியில் நல்ல வேகத்தையும் பெறலாம். எனவே, அத்தகைய பயனர்களுக்கு, சரியான நோக்கத்தை நிறைவேற்ற பல டேட்டா பேக்குகள் பிஎஸ்என்எல் வழங்குகிறது. சில சிறந்த பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் டேட்டா பேக்குகள் அல்லது பயனர்களுக்கு கிடைக்கும் திட்டங்களை இதில் காணலாம்.
டேட்டா பயன்பாட்டுக்கான பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் திட்டங்கள்
பிஎஸ்என்எல் அதன் பயனர்களுக்கு பரந்த அளவிலான டேட்டா பேக்குகளை வழங்குகிறது. தினசரி திட்டம் முதல் வருடாந்திர திட்டம் வரை வாடிக்கையாளர்கள் தங்கள் நலனுக்காக இந்த பேக்குகளைப் பயன்படுத்தலாம்.
ரூ. 16 - டேட்டா திட்டம்
பிஎஸ்என்எல், ரூ.16 ப்ரீபெய்ட் டேட்டா திட்டம் 2 GB டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டம் ஒரு நாள் மட்டுமே செல்லுபடியாகும்.
ரூ. 151 டேட்டா திட்டம்
ரூ.151 ப்ரீபெய்ட் டேட்டா திட்டம், பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு நன்மைகளுடன் 40 GB மொத்த டேட்டாவை வழங்குகிறது. டேட்டா பேக் 28 நாட்கள் செல்லுபடியாகும். இந்த பேக் பிஎஸ்என்எல் வழங்கும் ஆரம்ப நிலை Work From Home திட்டமாகும்.
மேலும் படிக்க | இந்த சோலார் ஜெனரேட்டர் உடனே வாங்குங்க, எலக்ட்ரிசிட்டி பில் வராது
ரூ. 198 டேட்டா திட்டம்
பிஎஸ்என்எல் ரூ.198 ப்ரீபெய்ட் டேட்டா திட்டம் 40 நாட்களுக்கு செல்லுபடியாகும். வாடிக்கையாளருக்கு ஒரு நாளைக்கு 2 GB டேட்டாவை வழங்குகிறது. 2 GB டேட்டா நிறைவடைந்த பிறகு, இணைய வேகம் 40 Kbps ஆகக் குறைக்கப்படும். மேலும் வாடிக்கையாளர்கள் வரம்பற்ற டேட்டாவைப் பயன்படுத்தலாம். இந்த திட்டம் கேமிங் நன்மைகளுடன் வருகிறது.
ரூ. 251 டேட்டா திட்டம்
Work from Home-இல் இருக்கும் வாடிக்கையாளர்களுக்கான மற்றொருமொறு திட்டம். இந்த டேட்டா பேக் வாடிக்கையாளர்களுக்கு ஜிங் நன்மைகளுடன் 70 GB மொத்த டேட்டாவை வழங்குகிறது. உங்கள் பகுதியில் 4ஜி நெட்வொர்க் இருந்தால் அல்லது 3ஜி நெட்வொர்க்கில் நல்ல வேகத்தைப் பெற்றால் இது நல்ல திட்டமாக இருக்கும்.
ரூ. 398 டேட்டா திட்டம்
பிஎஸ்என்எல்-இல் இந்த திட்டம் தனித்து நிற்கிறது, ஏனெனில் இது 30 நாட்களுக்கு எந்த கட்டுப்பாடுகளும் இல்லாமல் வரம்பற்ற டேட்டாவை வழங்குகிறது. மேலும், உண்மையிலேயே வரம்பற்ற டேட்டாவுடன், இந்த திட்டம் வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ், ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ், MTNL நெட்வொர்க்கில் ரோமிங்கிலும் செல்லுபடியாகும். நீங்கள் வரம்பற்ற டேட்டாவைத் விரும்புகிறவர்கள் என்றால் இந்தத் திட்டத்தை கண்மூடிக்கொண்டு தேர்வு செய்யலாம்.
ரூ.1,515 டேட்டா திட்டம்
பிஎஸ்என்எல் வழங்கும் இந்த டேட்டா திட்டம் ஆண்டு முழுவதும் டேட்டா பலன்களை வழங்குகிறது. வாடிக்கையாளர்கள் 365 நாட்களுக்கு 40 Kbps FUP வேகத்துடன் 2 GB டேட்டாவை அனுபவிக்க முடியும். எனவே, நீங்கள் வருடாந்திர டேட்டா திட்டத்தைத் தேடுகிறீர்களானால், இந்த திட்டம் குரல் அல்லது எஸ்எம்எஸ் நன்மைகள் இல்லாமல் பயன்பாட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்கிறது.
அறிக்கைகளின்படி, பிஎஸ்என்எல், எம்டிஎன்எல் ஆகியவை 4ஜி, 5ஜி சேவையை பெற்று, மேம்படுத்துவதற்காக இந்திய அரசிடம் இருந்து ரூ.53 ஆயிரம் கோடியைப் பெறும் என தெரிவிக்கப்படுகிறது.
மேலும் படிக்க | ஐபோன் 14 பிளிப்கார்டில் அசத்தல் தள்ளுபடி... ரூ. 12 ஆயிரத்திற்கும் மேல் குறைவு!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ