Jio-க்கு போட்டியாக 97 ரூபாய்க்கு வருகிறது BSNL-ன் திட்டம்...
இந்தியாவில் டெலிகாம் நிறுவனதிற்கு இடையில் நடந்து வரும் போட்டிகளுக்கு மத்தியில்., BSNL தனது பயனர்களுக்கு சிறந்த வசதிகளை வழங்க இரண்டு புதிய ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தியாவில் டெலிகாம் நிறுவனதிற்கு இடையில் நடந்து வரும் போட்டிகளுக்கு மத்தியில்., BSNL தனது பயனர்களுக்கு சிறந்த வசதிகளை வழங்க இரண்டு புதிய ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
நிறுவனம் அறிமுகப்படுத்திய இந்த ரூ .97 மற்றும் ரூ .365 திட்டங்களில், பயனர்கள் 2 ஜிபி தினசரி தரவுகளின் பயனைப் பெறுவார்கள். இது தவிர, பயனர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் மற்ற திட்டங்களுடன் ஒப்பிடும்போது இந்த திட்டங்களில் இன்னும் பல நன்மைகள் வழங்கப்படுகின்றன. இந்த திட்டங்களை அறிமுகப்படுத்துவதோடு, BSNL தனது 4 G நெட்வொர்க்கை மேம்படுத்தவும் திட்டமிட்டுள்ளது.
---97 ரூபாய் புதிய திட்டம்---
தற்போது BSNL அறிமுகம் செய்துள்ள ரூ.97 STV திட்டத்தினை குறைந்த நாள் பயன்பாட்டாளர்களுக்கு பயனளிக்கும் வகையில் வடிவமைத்துள்ளது. இத்திட்டத்தின் மூலம் பயனர்கள் இனி 18 நாட்களுக்கு தினம் 250 அழைப்புகள் (BSNL உள்பட அனைத்து நெர்வொர்குகளுக்கும்) மற்றும் 2GB தினசரி தரவுகள் பெறுவர்.
---365 ரூபாய் புதிய திட்டம் ---
BSNL-ன் இரண்டாவது திட்டம் ரூ.365-க்கு வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் 365 நாட்களுக்கு தினம் 250 அழைப்புகள் (BSNL உள்பட அனைத்து நெர்வொர்குகளுக்கும்) அளிக்கப்படுகிறது. ஆனால் இத்திட்டத்தில் பயனர்களுக்கு முதல் 60 நாட்களுக்கு மட்டும் 2 GB தினசரி தரவு வசதி வழங்கப்படுகிறது.
எனினும் இந்த தேர்ந்தெடுக்கப்பட்ட BSNL ப்ரீபெய்ட் திட்டங்கள் இரண்டுமே தேர்ந்தெடுக்கப்பட்ட வட்டங்களில் மட்டுமே கிடைக்கும், அதாவது தமிழ்நாடு, கேரளா, சென்னை ஆகிய பகுதிகளில் மட்டுமே இத்திட்டம் செல்லுபடியாகும்.
இது தவிர, BSNL சமீபத்தில் சில வட்டங்களுக்கு ரூ.997 ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது, 365 நாட்களுக்கு செல்லுபடியாகும் இத்திட்டம், பயனர்களுக்கு தினம் 3GB தரவின் பயன்பாட்டை அளிக்கிறது. ஆனால் இந்த நன்மையை 180 நாட்களுக்கு மட்டுமே வாடிக்கையாளர்கள் பெற முடியும். என்றபோதிலும் இந்த திட்டத்தில், பயனர்கள் அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் அழைப்பதற்கு தினமும் 250 நிமிடங்கள் அளிக்கப்படுகிறது.