Reliance Jio-ன் இலவச திட்டம், கால நீட்டிப்பு திட்டத்தினை அடுத்து BSNL தனது தற்போது தனது வாடிக்கையாளர்களுக்கு ஓராண்டு சந்தா திட்டத்தினை அறிவித்துள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

Jio, Vodafone மற்றும் இதர டெலிகாம் நிறுவனங்களுடன் போட்டிப் போடும் வகையில் BSNL தற்போது வாடிக்கையாளர்களை தக்கவைத்துக் கொள்ளும் விதமாக தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகை திட்டத்தினை அறிவித்துள்ளது. அதன்படி ரூ.1999 செலுத்தி வாடிக்கையாளர்கள் ஓர் ஆண்டிற்கு பல சலுகைகள் பெற இயலும். 


இதுகுறித்து சென்னை BSNL தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவிட்டுள்ளதாவது...



விளம்பர சலுகையாக ரூ.1999-க்கு COMBO STV1999 திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் ஓர் ஆண்டிற்கு அனைத்து கால்களுல் இலவசம், நாள் ஒன்றிற்கு 2GB மொபைல் டேட்டா, 100 SMS வழங்கப்படும்.
ரோமிங் தருனத்தில் இந்த சலுகைகள் பொருந்தும் என அறிவித்துள்ளது.


மேலும் இந்த திட்டமானது விளம்பர சலுகை என்பதால் 25.06.2018-லிருந்து 22.09.2018-க்கு இடைப்பட்ட காலத்தில் மட்டுமே இந்த திட்டத்தினை வாடிக்கையாளர்கள் செயல்படுத்த இயலும் எனவும் அறிவித்துள்ளது.


முன்னதாக வாடிக்கையாளர்களை தக்கவைக்கும் திட்டமாக தனது அனைத்து கோம்போ பிளான்களிலும் 2GB கூடுதல் டேட்டா-வினை வழங்கவுள்ளதாக BSNL அறிவித்தது குறிப்பிடத்தக்கது!