BSNL இலவச 4G SIM: அட்டகாச சலுகையின் முழு விவரம் இதோ
பிஎஸ்என்எல் ஒரு புதிய 4 ஜி சிம்மை வழங்க ரூ .20 கட்டணம் வசூலிக்கிறது. எனினும், இந்த சலுகையின் கீழ் இந்த கட்டணம் நீக்கப்படுகிறது.
BSNL Latest News: நாட்டில் உள்ள அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் தங்களது வாடிக்கையாளர்களை மகிழ்விக்க மற்றும் புதிய வாடிக்கையாளர்களை தங்களை நோக்கி ஈர்க்க அனைத்து முயற்சிகளையும் செய்து வருகிறது. சமீபத்தில், அரசுக்கு சொந்தமான தொலைதொடர்பு நிறுவனமான பாரதியா சஞ்சார் நிகம் லிமிடெட் (BSNL) இலவச 4 ஜி சிம் வசதி உட்பட பல புதிய சலுகைகளை கொண்டு வந்துள்ளது. இந்த திட்டத்தின் விவரங்களை இந்த பதிவில் காணலாம்.
4 ஜி சிம் இலவசமாக கிடைக்கும்
BSNL சமீபத்தில் தனது வாடிக்கையாளர்களுக்கு இலவச 4G சிம் கொடுக்கும் வசதியைத் தொடங்கியது. பிஎஸ்என்எல்லில் இருந்து 100 ரூபாய்க்கு மேல் முதல் ரீசார்ஜ் கூப்பனை வாங்கும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் இந்த சேவை வழங்கப்படுகிறது. மேலும், இந்த சேவை எம்என்பி போர்ட்-இன் வாடிக்கையாளர்களுக்காகவும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த சேவைக்கான காலக்கெடு இப்போது டிசம்பர் 31, 2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
100 ரூபாய்க்கு மேல் ரீசார்ஜ் கூப்பன் வாங்குபவர்களுக்கு இலவச 4G சிம்
பிஎஸ்என்எல் சில காலங்களுக்கு முன்பு, 100 ரூபாய்க்கு மேல் தங்களது முதல் ரீசார்ஜ் கூப்பனை (Recharge Coupon) வாங்கும் வாடிக்கையாளர்கள், தாங்கள் விரும்பினால், 4G சிம்மை இலவசமாகப் பெறலாம் என கூறியது. பயனர்கள் ஒரு ரீசார்ஜ் கூப்பனை வாங்கி அதன் மூலம் பிஎஸ்என்எல் -க்கு மாறலாம். அதாவது, அவர்கள் அதற்கு கூடுதல் பணம் செலுத்த வேண்டியதில்லை.
தற்போது இந்த வசதியை BSNL தனது கேரளா டெலிகாம் வட்டத்தில் தொடங்கியுள்ளது. எனினும் இந்த வசதி விரைவில் விரிவுபடுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
ALSO READ: ஷாக் கொடுத்த BSNL: இந்த மலிவு விலை பிளான் நீக்கப்பட்டது!!
MNP போர்ட்-இன் வாடிக்கையாளர்களுக்கான சலுகை
புதிய வாடிக்கையாளர்களுடன், வேறு நிறுவனத்திலிருந்து தனது சிம் -ஐ பிஎஸ்என்எல் -க்கு போர்ட் செய்ய விரும்புபவர்களுக்கும் இலவச 4 ஜி சிம் கார்டுகளின் வசதி வழங்கப்படுகிறது. பிஎஸ்என்எல் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 4 ஜி சிம் கார்டுகளை போர்ட்-இன் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக வழங்கும் வசதியைத் தொடங்கியது.
ரூ.699 க்கு 6 மாதங்களுக்கு தரவும் இந்த நன்மைகளும் கிடைக்கும்
பிஎஸ்என்எல் 699 ரூபாய்க்கான விளம்பரத் திட்டத்தை வெளியிட்டது. இது செப்டம்பர் 28 அன்று நிறுத்தப்பட்டது. ஆனால் இப்போது நிறுவனம் அதை அடுத்த 90 நாட்களுக்கு மீண்டும் வழங்கியுள்ளது. இந்த ரூ .699 திட்டத்தில், நீங்கள் ஒரு நாளைக்கு 0.5 ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்பு மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகிய நன்மைகளை 180 நாட்களுக்கு பெறுவார்கள்.
இந்த திட்டத்தை (Recharge Plan) ஜனவரி 2022 வரை நீங்கள் வாங்கலாம். இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்ய உங்கள் அருகிலுள்ள சில்லறை கடைக்குச் செல்லலாம். அல்லது, 123 என்ற எண்ணில் 'PLAN BSNL699' என்று எழுதி எஸ்எம்எஸ் அனுப்பவும். அல்லது USSD ஷார்ட்கோட் *444 *699# டயல் செய்தும் இந்த வசதியைப் பெறலாம்.
பிஎஸ்என்எல் ஒரு புதிய 4 ஜி சிம்மை வழங்க ரூ .20 கட்டணம் வசூலிக்கிறது. எனினும், இந்த சலுகையின் கீழ் இந்த கட்டணம் நீக்கப்படுகிறது. இந்த சலுகையைப் பெற, நீங்கள் அருகில் உள்ள பிஎஸ்என்எல் சில்லறை விற்பனை நிலையங்களுக்குச் செல்லலாம் அல்லது பிஎஸ்என்எல் வாடிக்கையாளர் சேவை மையங்களையும் (BSNL CSCs) தொடர்பு கொள்ளலாம்.
ALSO READ: BSNL, Vi, Jio அட்டகாச ரீசார்ஜ் திட்டங்கள்: ஆண்டு முழுதும் கிடைக்கும் அதிரடி நன்மைகள்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR