நாட்டில் மொபைல் போன்களுடன், அவற்றுடன் தொடர்புடைய தொலைத்தொடர்பு நிறுவனங்களின் புகழும் சந்தையில் அவறுக்கான தேவையும் அதிகரித்து வருகிறது. இந்த சந்தையில் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது.
எனினும், அரசாங்க தொலைத்தொடர்பு நிறுவனமான பாரதிய சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL) எந்த விதத்திலும் குறைந்து விட வில்லை. கடந்த மாதம், பிஎஸ்என்எல் தனது ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் திட்டங்களில் சில மாற்றங்களைச் செய்தது. அவை என்ன, அவை உங்களை எவ்வாறு பாதிக்கும் என்பதை இந்த பதிவில் காணலாம்.
பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் திட்டங்களில் மாற்றங்களைச் செய்தது
கடந்த மாதம், பிஎஸ்என்எல் தனது ப்ரீபெய்ட் திட்டங்களில் (Prepaid Plans) சில முக்கிய மாற்றங்களைச் செய்தது. மறைமுக வரி உயர்வின் ஒரு பகுதியாக, பிஎஸ்என்எல் அதன் ப்ரீபெய்ட் திட்டத்தின் விலையை மாற்றவில்லை, ஆனால் திட்டத்தின் நன்மைகளை குறைத்துள்ளது. இப்போது பிஎஸ்என்எல் தனது போஸ்ட்பெய்ட் திட்டங்களின் கட்டணங்களையும் அதிகரிக்கப் போகிறது.
BSNL இந்த திட்டத்தின் வாடிக்கையாளர்களை வேறு திட்டத்திற்கு மாற்றும்
தனது போஸ்ட்பெய்ட் திட்டங்களின் விலையை உயர்த்திய பிஎஸ்என்எல், ரூ .99 போஸ்ட்பெய்ட் திட்டத்தை நிறுத்துவதாக கூறியுள்ளது. இந்த திட்டத்தை பெற்றுள்ள வாடிக்கையாளர்கள், இந்த திட்டம் முடியும் வரை இதை பயன்படுத்திக்கொள்ள முடியும். அதன் பிறகு வாடிக்கையாளர் இந்த திட்டம் நிறுத்தப்பட்டதைப் பற்றி ஒரு ஒரு எஸ்எம்எஸ் பெறுவார்கள்.
ALSO READ: BSNL, Vi, Jio அட்டகாச ரீசார்ஜ் திட்டங்கள்: ஆண்டு முழுதும் கிடைக்கும் அதிரடி நன்மைகள்
இந்த எஸ்எம்எஸ் -ல் என்ன இருக்கும்?
அனைத்து பிஎஸ்என்எல் பயனர்களும் (BSNL Users) நிறுவனத்திடமிருந்து ஒரு எஸ்எம்எஸ்-ஐப் பெறுவார்கள். அதில் நிறுவனம் ரூ .99 திட்டத்தை நிறுத்துவது பற்றி குறிப்பிடப்பட்டிருக்கும். இந்த பயனர்கள் செப்டம்பர் 1 முதல் ரூ. 199 திட்டத்திற்கு மாற்றப்படுவார்கள். ரூ. 199 பற்றிய அனைத்து தகவல்களையும் இங்கே காணலாம்.
ரூ. 99 மற்றும் ரூ 199 போஸ்ட்பெய்ட் திட்டங்கள்
வாடிக்கையாளர் ரூ .99 திட்டத்தில் வரம்பற்ற அழைப்பு, தினசரி 100 எஸ்எம்எஸ் மற்றும் மாதம் முழுவதும் 25 ஜிபி இணைய வசதியைப் பெறுவார்கள். இப்போது இந்த வசதிகள் அனைத்தும் ரூ .199 திட்டத்திலும் கிடைக்கும். அதாவது, இரண்டு திட்டங்களின் நன்மைகளுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. ஆனால் விலை மட்டும் ரூ. 100 அதிகரித்துள்ளது.
BSNL திட்டங்களின் செல்லுபடி கால அளவை குறைத்தது
பிஎஸ்என்எல் அதன் பல திட்டங்களின் செல்லுபடியை குறைத்துள்ளது. 28 நாட்களுக்கு செல்லுபடியான பிஎஸ்என்எல்லின் ரூ .49 எண்ட்ரி-லெவல் வவுசர், இப்போது 24 நாட்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும். ரூ .75 ப்ரீபெய்ட் திட்டம் இப்போது 60 நாட்களுக்கு பதிலாக 50 நாட்களுக்கு செல்லுபடியாகும். ரூ .94 STV 90 நாட்களுக்கு பதிலாக இப்போது 75 நாட்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும். ரூ .106 மற்றும் ரூ. 207 வவுச்சர்கள் இப்போது 100 நாட்களுக்கு பதிலாக 84 நாட்களுக்கு செல்லுபடியாகும். ரூ .197 ப்ரீபெய்ட் திட்டம் 180 நாட்களுக்கு பதிலாக 150 நாட்களுக்கு செல்லுபடியாகும்.
ALSO READ: BSNL New Plan: BSNL-ன் புதிய ப்ரீபெய்ட் பிளான்கள்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR