BSNL நிறுவனம் சமீபத்தில் தனது 2G/ 3G சிம்களை 4G-ஆக மாற்றுவதாக அறிவித்துள்ளது, இதனால் அதன் பயனர்களுக்கு விரைவான நெட்வொர்க்கை வழங்க முடியும் என நிறுவனம் நம்புகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நாட்டில் 4G நெட்வொர்க்கை வழங்குவதில் ஆபரேட்டர் ஐந்து ஆண்டுகள் அவகாசம் எடுத்துக்கொண்டுள்ள நிலையிலும், தற்போது மற்ற தொலைதொடர்பு நிறுவனங்களுடன் போட்டியிடும் வகையில் BSNL இந்த முடிவை முன்னெடுத்துள்ளது.


நாட்டில் 4G வாடிக்கையாளரை தன் வசமாக்கி வரும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திற்கு பிரதான போட்டியாளர்களான ஏர்டெல் மற்றும் வோடபோன்-ஐடியா ஆகிய இரண்டும் மிருகத்தனமான விலை யுத்தம் மற்றும் கடன் காரணமாக வாடிக்கையாளர்களை இழந்து வருகின்றன. இந்நிலையில் BSNL இந்த கட்டத்தில் பயனர்களை தங்கள் பக்கம் ஈர்க்கவும், பழைய வாடிக்கையாளர்களை தக்க வைத்துக்கொள்ளவும் 4G நுட்பத்தை தற்போது கையில் எடுத்துள்ளது.


ரிலையன்ஸ் ஜியோவுடன் போட்டியிட விரும்பினால், அரசு நடத்தும் தொலைத் தொடர்பு ஆபரேட்டர் BSNL தனது சேவைகளை கவர்ச்சிகரமான திட்டங்கள் மற்றும் சேவைகளுடன் தொடங்க வேண்டும் என்பதும் இதன் பொருள்.


உண்மையில், ஆபரேட்டர் ஏற்கனவே தங்கள் 3G சிம்மை 4G சிம்களாக இலவசமாக மேம்படுத்த விரும்புவோருக்கு புதிய சலுகையை கொண்டு வந்துள்ளார். குறிப்பிடத்தக்க வகையில், இந்த சலுகை 90 நாட்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும், மேலும் இது எல்லா வட்டங்களிலும் கிடைக்கும். 


இந்த சலுகை பயனர் பெற முதலில் ரூ.100-க்கு ரீசார்ஜ் செய்ய வேண்டும்.  இதன் பொருள் நீங்கள் ரூ.100 செலுத்தி ஒரு 4G சிம்மை பெறலாம்.


4G சிம் செயல்படுத்துவது எப்படி?


படி 1: முதலில், உங்கள் BSNL எண்ணிலிருந்து ஒரு செய்தியை அனுப்ப வேண்டும்.
படி 2: நீங்கள் அனுப்பும் இந்த செய்தியில் RE4G என எழுத வேண்டும், அதை 53734 க்கு அனுப்ப வேண்டும்.
படி 3: அதன் பிறகு, நீங்கள் ஆபரேட்டரிடமிருந்து செய்தியைப் பெறுவீர்கள், அதற்கு நீங்கள் 'RE4G YES' என பதிலளிக்க வேண்டும்.
படி 4: பின்னர், நீங்கள் நிறுவனத்திடமிருந்து மற்றொரு செய்தியைப் பெறுவீர்கள். அதன் பிறகு, பழைய சிம்மிலிருந்து பிணைய சமிக்ஞை மறைந்து போக நீங்கள் காத்திருக்க வேண்டும்.
படி 5: பின்னர், புதிய 4G சிம்மில் நீங்கள் சமிக்ஞையைப் பெறுவீர்கள், பின்னர் நீங்கள் உங்கள் பழைய எண்ணைப் பயன்படுத்தலாம்.