தற்போது பல தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்களது சேவை கட்டணங்களை உயர்த்தியுள்ள நிலையில் BSNL நிறுவனம் அதிருப்தி அடைந்திருக்கும் மக்களை மகிழ்ச்சிப்படுத்த அசத்தலான திட்டத்தை வழங்குகிறது.  அரசுக்கு சொந்தமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL) தனியார் தொலைத்தொடர்பு நிறுவனத்தின் அறிவிப்புப்படி,  பிற தொலைத்தொடர்பு நிறுவனங்களை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் BSNL க்கு மாறினால், அவர்களுக்கு BSNL நிறுவனம் 5 GB இலவச டேட்டாவை 30 நாட்களுக்கு வழங்கும் என்று அறிவித்துள்ளது.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ALSO READ | Flipkart சலுகை: iPhone 12 இல் மெகா பம்பர் தள்ளுபடிகள்.. முந்துங்கள்


BSNL வழங்கும் இந்த அதிரடி சலுகையானது ஜனவரி 15, 2022 வரை மட்டுமே வழங்கப்படுகிறது.  இதுகுறித்து அந்நிறுவனம் ட்விட்டரில்,  தற்போதைய திட்டத்துடன் சேர்ந்து இலவச 5 GB டேட்டா 30 நாட்கள் வரை செல்லுபடியாகும் என்று தெரிவித்துள்ளது.  அதனை தொடர்ந்து பிற தொலைத்தொடர்பு நிறுவனங்களில் இருந்து BSNLக்கு மாறும் புதிய பயனாளர்கள் எதனால் இந்த நிறுவனத்தை தேர்வு செய்தார்கள் என்பதற்கான காரணத்தை சமூக ஊடகங்களில் தெரிவிக்க வேண்டும் .  மேலும் அவர்கள் ட்விட்டர் மற்றும் பேஸ்புக்கில் #SwitchToBSNL என்ற ஹேஷ்டேக்கைப் பயன்படுத்துவதோடு, BSNLக்கு மாறியதற்கான ஆதாரத்தை அனுப்ப வேண்டும். பின்னர் சமூக ஊடக தளங்களில் BSNL ஐ டேக் செய்து, அந்நிறுவனத்தின் பக்கத்தினை பின்தொடர வேண்டும்.



இவ்வாறு பதிவிட்டதை பயனாளர்கள் ஸ்கிரீன்ஷாட் எடுத்து அதனை 9457086024 என்ற நம்பருக்கு நேரடி செய்தி மூலமாகவோ அல்லது வாட்ஸ்அப் மூலமாகவோ அனுப்ப வேண்டும்.  மேலும் BSNL மார்ச் 31, 2022 வரை இலவச 4G சிம் கார்டை வழங்குகிறது, பயனர்கள் தாங்கள் ஏற்கனவே வைத்திருக்கும் நம்பரையும் இந்த நிறுவனத்திற்கு மாற்றிக்கொள்ளலாம். தற்போது கேரளாவில் இந்நிறுவனம் பல சலுகைகளை வழங்கியுள்ளது. 


 



மேலும், BSNL இப்போது ப்ரீபெய்ட் திட்டத்தின் காலத்தை நீட்டித்துள்ளது .  BSNL-ன் ரூ.2399 திட்டம் 90 நாட்களுக்கு நீட்டிப்பு செய்யப்பட்டு வேலிடிட்டி 455 நாட்களாக வழங்கப்படும்.  இத்திட்டத்தின் மூலம் அன்லிமிடெட் அழைப்புகள் மற்றும் ஒரு நாளைக்கு 100 SMS உடன் தினசரி 3GB டேட்டாவை வழங்குகிறது. மேலும் இது இலவச ரிங்டோன்கள் மற்றும் Eros Now சேவையையும் வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


ALSO READ | Jio அசத்தல் திட்டம்; தினமும் 2.5 ஜிபி, 20% Cashback


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR