ரூ 769 ரீசார்ஜ் பிளான்..சலுகைகளை அள்ளி வீசும் பிஎஸ்என்எல்
பிஎஸ்என்எல் (பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட்) தமிழக வட்டார வாடிக்கையாளர்களுக்கு இந்த ரீசார்ஜ் திட்டத்தின் விலை ரூபாய் 769 ஆக இருக்கும். மேலும் இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்வதன் மூலம், நீங்கள் மொத்த வேலிடிட்டி 84 நாட்களுக்கு பெறுவீர்கள்.
பிஎஸ்என்எல் ரீசார்ஜ் திட்டம்: பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் - பிஎஸ்என்எல் (BSNL) தனது ப்ரீபெய்ட் திட்டங்களின் விலையை சைலெண்டாக விலை உயர்த்தி வருகிறது. அரசு நடத்தும் தொலைத்தொடர்பு நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாக மக்களிற்குத் தேவையான ரீசார்ஜ் திட்டங்களை மிகவும் குறைந்த விலையில் வழங்கி வருகின்றது. அதேபோல் ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்களுக்கு போட்டியாக பல சிறப்பான திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது பிஎஸ்என்எல் நிறுவனம். அந்தவகையில் பிஎஸ்என்எல் நிறுவனம் வழங்கும் ரூ 769 திட்டத்தைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.
பிஎஸ்என்எல் ரூ.769 ப்ரீபெய்ட் திட்டம்
பிஎஸ்என்எல் (பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட்) தமிழக வட்டார வாடிக்கையாளர்களுக்கு இந்த ரீசார்ஜ் திட்டத்தின் விலை ரூபாய் 769 ஆக இருக்கும். மேலும் இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்வதன் மூலம், நீங்கள் மொத்த வேலிடிட்டி 84 நாட்களுக்கு பெறுவீர்கள். அத்துடன் தினசரி 100 எஸ்எம்ஸ், ஈரோஸ் நவ் என்டர்டெயின்மென்ட், லிஸ்ட்ன் பாட்காஸ்ட் சர்வீசஸ், ஹார்டி மொபைல் கேம் சேவை, லோக்துன் மற்றும் ஜிங் உள்ளிட்ட பல சலுகைகளை பெறுவீர்கள்.
மறுபுறம் இன்டர்நெட் சேவை பற்றி பேசுகையில், பிஎஸ்என்எல் ரூ 769 திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. அத்துடன் வரம்பற்ற அழைப்பு நன்மையும் இந்த ரீசார்ஜ் திட்டத்தில் நீங்கள் பெறுவீர்கள்.
பிஎஸ்என்எல் ரூ 269 ப்ரீபெய்ட் திட்டம்
300 ரூபாய்க்கும் குறைவான பிஎஸ்என்எல் திட்டம் வேண்டுமெனில் 269 ரூபாய் திட்டத்தை நீங்கள் தேர்வு செய்யலாம். இந்த திட்டத்தில், பயனர்களுக்கு ஒவ்வொரு நாளும் 2 ஜிபி டேட்டா, அனைத்து நெட்வொர்கிற்கும் வரம்பற்ற அழைப்பு மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகிய வசதிகள் வழங்கப்படுகின்றன. அத்துடன் இதில் மொத்த வேலிடிட்டி 28 நாட்களுக்கு பெறுவீர்கள்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ