BSNL Plans: அரசுக்கு சொந்தமான தொலைத்தொடர்பு நிறுவனமான பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (BSNL) மற்ற டெலிகாம் நிறுவனங்களை விட மலிவான ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்குகிறது. நீங்கள் ஒரு வருட வேலிடிட்டி கொண்ட 365 நாட்கள் செல்லுபடியாகும் மலிவான ப்ரீபெய்ட் திட்டத்தைத் தேடுகிறீர்கள் என்றால், இந்த சிறப்பு செய்தி உங்களுக்கானது. பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ஒரு வருட கால ப்ரீபெய்ட் திட்டத்தைப் பற்றி இன்று தெரிந்துக்கொள்ளுவோம்.
இந்த பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி டேட்டா, குரல் அழைப்பு, எஸ்எம்எஸ் உட்பட பல நன்மைகள் கிடைக்கும். அதேபோல ஜியோ நிறுவனமும் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு 365 நாட்கள் செல்லுபடியாகும் திட்டத்தை வழங்கி வருகிறது. இந்த இரண்டு திட்டங்களையும் ஒப்பிட்டு, தங்களுக்கு எது சிறந்த திட்டம், எந்த நிறுவனத்தின் திட்டம் அதிக நன்மைகளை வழங்குகிறது என்பதைப் பார்த்து, எந்த திட்டத்தை வாங்க வேண்டும் என்பதைத் தாங்களே தீர்மானித்துக்கொள்ளலாம். பிஎஸ்என்எல் மற்றும் ஜியோவின் ப்ரீபெய்ட் திட்டங்களின் நன்மைகள் பற்றி விரிவாக அறிந்து கொள்வோம்.
மேலும் படிக்க: ஜியோ அசத்தல்! 15 ஓடிடி தளங்களை இலவசமாக பார்க்கலாம்
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.1,570 திட்டம்:
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் இந்த ரூ.1,570 திட்டமானது ஒரு நாளைக்கு 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. வேலிடிட்டி பற்றி பேசினால், இந்த திட்டத்தில் 365 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. குரல் அழைப்பு பற்றி பேசுகையில், இந்த திட்டத்தில் வரம்பற்ற உள்ளூர் மற்றும் எஸ்டிடி அழைப்புகள் கிடைக்கும். எஸ்எம்எஸ் பற்றி பேசினால், இந்த திட்டத்தில் தினமும் 100 எஸ்எம்எஸ் கிடைக்கும். அதே நேரத்தில், இந்த திட்டத்தில் அதிவேக டேட்டா வரம்பு முடிந்த பிறகு, வரம்பற்ற டேட்டாவை 40Kbps வேகத்தில் பயன்படுத்தலாம். இருப்பினும், இந்த திட்டம் குஜராத்தில் உள்ள ராஜ்கோட் சிட்டிசன் கூட்டுறவு வங்கி லிமிடெட் (RNSBL) வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: சீன நிறுவனத்துடன் கைகோர்த்த ஜியோ -மாஸ் பிளான் பின்னணி
ஜியோ நிறுவனத்தின் ரூ.2,879 திட்டம்:
ஜியோவின் ரூ.2,879 திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா கிடைக்கிறது, அதாவது 730ஜிபி. அதிவேக டேட்டா வரம்பு முடிந்ததும், 64Kbps வேகத்தில் வரம்பற்ற டேட்டாவைப் பயன்படுத்தலாம். வேலிடிட்டி பற்றி பேசினால், இந்த திட்டம் 365 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது. குரல் அழைப்புக்கு, இந்த திட்டம் வரம்பற்ற இலவச குரல் அழைப்பு நன்மையை வழங்குகிறது. எஸ்எம்எஸ் பற்றி பேசினால், இந்த திட்டத்தில் தினமும் 100 எஸ்எம்எஸ் இலவசமாக அனுப்பலாம். மற்ற நன்மைகளைப் பற்றி பேசினால், ஜியோ ஆப்ஸின் இலவச சந்தா இந்த திட்டத்தில் உங்களுக்கு கிடைக்கும்.
இந்த இரண்டு திட்டங்களை ஒப்பிட்டு எந்த திட்டம் உங்களுக்கு சிறந்ததாக இருக்கிறதோ, அந்த திட்டத்தை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
மேலும் படிக்க: இதுக்கு மேல பெஸ்ட் ப்ரீப்பெய்ட் பிளான் எதிர்பார்க்காதீங்க! மாஸ் காட்டும் ஜியோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ