ஆன்லைன் ஷாப்பிங் முதல் வீடியோ ஸ்ட்ரீமிங் வரை... இன்றைய காலகட்டத்தில், ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் டேட்டாவின் தேவை முன்பை விட அதிகமாகிவிட்டது. முன்பு ஒரு நாளைக்கு 1ஜிபி டேட்டா பயன்படுத்தப்பட்டது, இப்போது தினசரி 2ஜிபி டேட்டா கூட பயனாளர்களுக்கு போதுமானதாக இருப்பதில்லை. அந்தவகையில் அதிகபட்ச டேட்டாவை வழங்கும் திட்டத்தை நீங்கள் தேடுகிறீர்களானால், பிஎஸ்என்எல் நிறுவனத்தின் போர்ட்ஃபோலியோவில் உங்களுக்காக ஒரு சிறந்த திட்டம் உள்ளது. அதன் முழு விவரத்தை இங்கே தெரிந்துக்கொள்வோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் இந்த திட்டம் நீண்ட கால வேலிடிட்டி திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது, இதில் பயனர்களுக்கு ஒரு வருடத்திற்கு டேட்டா நன்மைகள் வழங்கப்படும். இருப்பினும், இந்த திட்டத்தின் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்த திட்டத்தின் கீழ், பயனர்கள் 1000ஜிபிக்கும் அதிகமான டேட்டா பயன்பாட்டைப் பெறுகிறார்கள். இப்போது இந்தத் திட்டத்தின் விலை மற்றும் அதன் நன்மைகள் பற்றி தெரிந்துக்கொள்வோம். 


மேலும் படிக்க | Tech Tips: விரிசல் அடைந்த மொபைல் திரையை வீட்டிலேயே சரி செய்யலாமா... உண்மை என்ன


பிஎஸ்என்எல் 1000ஜிபி டேட்டா திட்டத்தின் நன்மைகள்


அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் இன் இந்த திட்டத்தின் விலை ரூ.2,999 ஆகும், இதில் பயனர்களுக்கு 365 நாட்கள் அதாவது 1 வருடம் வரை வேலிடிட்டி வழங்கப்படும். இதன் நன்மைகளைப் பற்றி பேசுகையில், பிஎஸ்என்எல் நிறுவனம் இந்த திட்டத்தில் பயனர்களுக்கு அன்லிமிடெட் காலிங்க வழங்குகிறது, இதில் நாம் ஆண்டு முழுவதும் எந்த நெட்வொர்க்கிலும் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பேசலாம். இதில் அனைத்து உள்ளூர் மற்றும் எஸ்டிடி அழைப்புகள் போன்றவை அடங்கும். 


இன்டர்நெட் சேவை பற்றி பேசுகையில், இந்த திட்டம் பயனர்களுக்கு தினசரி 3 ஜிபி டேட்டா பயன்பாட்டை வழங்குகிறது. 365 நாட்களுக்கு தினசரி 3 ஜிபி டேட்டாவின் படி, இந்த திட்டம் ஆண்டு முழுவதும் 1,095 ஜிபி டேட்டாவை அணுகும். அதே நேரத்தில், தினசரி டேட்டா கோட்டா தீர்ந்த பிறகு, இணைய வேகம் 80 கேபிபிஎஸ் ஆக குறையும். இது தவிர, இந்த திட்டம் தினசரி 100 இலவச எஸ்எம்எஸ் அனுப்ப அனுமதிக்கிறது.


ஜியோ-ஏர்டெல் நன்மைகள்
இந்த விலையில் தினசரி 2.5 ஜிபி டேட்டா வழங்கும் திட்டத்தை ஜியோ நிறுவனம் தந்துள்ளது, இதில் ஒரு வருடம் முழு வேலிடிட்டி வழங்கப்படும். ஆண்டின் படி, இந்த திட்டம் 912.5 ஜிபி டேட்டா பயன்பாட்டிற்கு கிடைக்கிறது. இது தவிர, இதன் பலன்கள் பிஎஸ்என்எல் திட்டத்தைப் போலவே உள்ளது. அதே நேரத்தில், ஏர்டெல் இந்த விலையில் தினசரி 2ஜிபி டேட்டாவை மட்டுமே வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | Flipkart வழங்கும் அசத்தல் சலுகை; ₹699 விலையில் Nokia Smart TV!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ