BSNL Recharge Plan: பிஎஸ்என்எல் தன் பயனர்களுக்காக ஒரு சிறந்த திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இந்த திட்டம் பயனர்களுக்கு பல வித நன்மைகளை அளிக்கும் வகையில் உள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஒருபுறம், இந்தத் திட்டத்தில் பயனர்கள் ஏராளமான தரவைப் பெறுகிறார்கள். மறுபுறம் அழைப்பு வசதிகளும் மிகப்பெரியதாக இருக்கின்றன. தினமும் தரவு பயன்பாடு அதிகமாக இருக்கும் பயனர்களுக்கு BSNL-ன் இந்த திட்டம் மிக நல்ல திட்டமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. 


வாடிக்கையாளர்களுக்கு இந்த நன்மைகள் கிடைக்கும் 


BSNL நிறுவனத்தின் ரூ .499 திட்டம் இப்போது முன்பை விட அதிகமான தரவுகளுடன் வருகிறது. பிஎஸ்என்எல்-லின் 90 நாள் திட்டத்தின் விலை 499 ரூபாய் ஆகும். இந்த திட்டத்தில், வாடிக்கையாளர்களுக்கு தினமும் 2 ஜிபி தரவு வழங்கப்படுகிறது. 


இந்த வழியில், மொத்தம் 180 ஜிபி தரவை (Data) வாடிக்கையாளர்கள் பெற முடியும். இந்த திட்டம் அனைத்து நெட்வொர்க்குகளிலும் வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகிய நனமைகளை அளிக்கின்றது. 


ALSO READ: Vi, BSNL, Jio: 84 நாட்களுக்கு செல்லுபடியாகும் மிகச்சிறந்த ரீசார்ஜ் திட்டங்கள்


இது தவிர, BSNL Tunes மற்றும் Zing போன்ற இலவச சேவைகளும் வழங்கப்படுகின்றன. பிஎஸ்என்எல்லின் இந்த திட்டத்தில், பயனர்கள் ஒரு நாளைக்கு 1 ஜிபி தரவைப் பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 


நிறுவனத்தின் இந்த சலுகை தற்போதுள்ள மற்றும் புதிய ப்ரீபெய்ட் பயனர்களுக்கு கிடைக்கிறது. நீங்கள் இதைப் பயன்படுத்த விரும்பினால், டாப்-அப், ஆன்லைன் ரீசார்ஜ் போர்டல் மூலமாகவோஅல்லது நீங்களாகவோ இதை ஆக்டிவேட் செய்து கொள்ளலாம்.


இதனுடன், பி.எஸ்.என்.எல் 499 பிராட்பேண்ட் (Broadband) திட்டத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டம் அந்தமான் மற்றும் நிக்கோபார் வட்டத்துக்கானது. இந்த திட்டத்தில், பயனர்கள் 10 Mbps வேகத்தில் 40 ஜிபி தரவைப் பெறுவார்கள். FUP வரம்பு முடிந்ததும், பயனர்கள் 512Kbps வேகத்தில் தரவைப் பெறுவார்கள்.


ALSO READ: BSNL: 4G சேவை இல்லமாலே 4G Volte சேவை வழங்கி அசத்துகிறது


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR