BSNL: 4G சேவை இல்லமாலே 4G Volte சேவை வழங்கி அசத்துகிறது

தொலைதொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் அடுத்த ஆண்டு இறுதிக்குள் நாட்டில் 4 ஜி சேவையைத் தொடங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 4 ஜி டெண்டரை பிஎஸ்என்எல் ரத்து செய்த பிறகு 4 ஜி சேவைகளை தொடங்குவது தொடர்பாக நிறுவனம் பல சிக்கல்களை எதிர்கொள்கிறது. வெளிநாட்டு நிறுவனங்களும் ஏலத்தில் பங்கேற்கலாம் என்ற பி.எஸ்.என்.எல்லின் விருப்பம் தொடர்பாக பல கேள்விகள் எழுந்துள்ளன. 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Jun 26, 2021, 04:05 PM IST
  • 4G சேவை இல்லமாலே 4G Volte சேவை
  • இந்திய விற்பனையாளர்கள் 50,000 தளங்களை மேம்படுத்த வேண்டும்
  • BSNL அசத்தல்
BSNL: 4G சேவை இல்லமாலே 4G Volte சேவை வழங்கி அசத்துகிறது title=

தொலைதொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் அடுத்த ஆண்டு இறுதிக்குள் நாட்டில் 4 ஜி சேவையைத் தொடங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 4 ஜி டெண்டரை பிஎஸ்என்எல் ரத்து செய்த பிறகு 4 ஜி சேவைகளை தொடங்குவது தொடர்பாக நிறுவனம் பல சிக்கல்களை எதிர்கொள்கிறது. வெளிநாட்டு நிறுவனங்களும் ஏலத்தில் பங்கேற்கலாம் என்ற பி.எஸ்.என்.எல்லின் விருப்பம் தொடர்பாக பல கேள்விகள் எழுந்துள்ளன. 

இதனிடையில் மிகவும் ஆச்சரியமான விஷயமாக பி.எஸ்.என்.எல் ஏற்கனவே நாட்டின் சில தேர்ந்தெடுக்கப்பட்ட வட்டங்களில் 4 ஜி சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.   இன்னும் சரியான 4 ஜி சேவை இல்லாத நிலையில் எவ்வாறு 4 ஜி VOLTE சேவை வழங்கப்படுகிறது தெரியுமா?  

சென்னை, தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் பி.எஸ்.என்.எல் 4 ஜி VOLTE சேவையை மேம்படுத்தியுள்ளது. இந்த பட்டியலில் புதிய பகுதிகள் சேர்க்கப்படுகின்றன. VoLTE சேவையின் மூலம் உயர்தர வாய்ஸ் காலிங் வசதியை (voice calling) தருகிறது பி.எஸ்.என்.எல். அதோடு, டேட்டாவை பயன்படுத்தி வீடியோ கால்களும் செய்ய முடியும் என்பது கூடுதல் தகவல்.  

ALSO READ | Reliance AGM 2021 Highlights: Jio - Google கூட்டணியில் மலிவு விலை ஸ்மார்ட்போன்

நிறுவனத்தின் 4G VoLTE சேவையை பெற விரும்புபவர்கள், பிஎஸ்என்எல் 4 ஜி சிம் பயனர்கள் (BSNL 4G SIM users) தங்கள் போன் மூலமாக தங்கள் ஆபரேட்டருக்கு கோரிக்கையை அனுப்ப வேண்டும். பயனர்களின் தொலைபேசி 4G VoLTE ஆக இருக்க வேண்டும். பயனர்கள் 53733 என்ற எண்ணுக்கு குருஞ்செய்தியை அனுப்ப வேண்டும். இதற்குப் பிறகு, உங்கள் போனின் இந்த சேவையை பிஎஸ்என்எல் செயல்படுத்தும். 

2 ஜி மற்றும் 3 ஜி பயனர்கள் இந்த சேவையை பயன்படுத்த முடியாது இந்த சேவையை பயன்படுத்த விரும்பினால், அவர்கள் 20 ரூபாய் கட்டணம் செலுத்தி புதிய சிம் பெற வேண்டும். BSNL HYBRID 4G திட்டம் இது.  

இந்திய விற்பனையாளர்கள் 50,000 தளங்களை மேம்படுத்த வேண்டும் என்று பி.எஸ்.என்.எல் விரும்புகிறது. வெளிநாட்டு நிறுவனம் 57,000 தளங்களை மேம்படுத்துகிறது. பிஎஸ்என்எல் நாட்டில் 4 ஜி சேவையைத் தொடங்க வேண்டிய அவசியம் உள்ளது., பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் ஆகியவை மட்டுமே இந்தியாவில் 4 ஜி சேவைகளை வழங்காத ஆபரேட்டர்கள் என்பது ஆச்சரியமான விஷயம்.

ALSO READ | Microsoft Windows 11: அசத்தலான தோற்றம்; அசத்தலான அம்சங்கள்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News