BSNL VS Jio Vs Vodafone... பயனர்களுக்கு சிறந்த ப்ரீபெய்ட் பிளான் எது..!
ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா போன்ற தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் சமீபத்திய கட்டணத்தை உயர்த்திய பிறகு, பல பயனர்கள் அரசுக்கு சொந்தமான BSNL சிம்களுக்கு மாறி வருகின்றனர்.
ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா ஆகியவற்றின் சமீபத்திய விலை உயர்வுக்குப் பிறகு, பல பயனர்கள் அரசுக்கு சொந்தமான BSNL சிம்களுக்கு மாறி வரும் நிலையில், பிஎஸ்என்எல் நிறுவனமும், இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு வாடிக்கையார்களை ஈர்க்க, பல திட்டங்களை அறிவித்து வருவகிறது. மேலும், மத்திய அரசும் தொழில்ட்ப மேம்பாடு மற்றும் வலுவான நெட்வொர்க் ஏற்படுத்த பட்ஜட்டில் அதிக நிதி ஒதுக்கியுள்ளது.
இந்நிலையில், பிஎஸ்என்எல், ரிலையன்ஸ் ஜியோ மற்றும் வோடபோன் நிறுவனங்களின் ஒரு வருட காலத்திற்கான ரீசார்ஜ் பிளான்களில், வாடிக்கையாளர்களுக்கு அதிக பலன்களை கொடுத்து செலவை மிச்சப்படுத்த உதவும் திட்டம் எது என்பதை அறிந்து கொள்ளலாம்.
BSNL வழங்கும் 1 வருட காலத்திற்கான திட்டத்தை மற்ற நிறுவனங்களுடன் ஒப்பிட்டுப் பார்ப்போம்.
பிஎஸ்என்எல் வழங்கும் ரூ.2395 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs.2395 Plan Details)
பிஎஸ்என்எல் (BSNL) வழங்கும் ரூ.2395 திட்டத்தில், பயனர்களுக்கு தினமும் 2 ஜிபி அதிவேக டேட்டா, எந்த நெட்வொர்க்கிற்கும் வரம்பற்ற இலவச அழைப்பு மற்றும் தினமும்100 எஸ்எம்எஸ் ஆகிய நன்மைகள் வழங்கப்படும். இது ஒரு வருட
ரீசார்ஜ் பிளான் செல்லுபடியாகும் காலம்: 395 நாட்கள்
அதிவேக டேட்டா: 2 ஜிபி/நாள்
தொலைபேசி அழைப்பு: அன்லிமிடெட் காலிங்
SMS: 100 SMS/நாள்
பிஎஸ்என்எல் வழங்கும் ரூ.3,599 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs.3,599 Plan Details)
பிஎஸ்என்எல் (BSNL) வழங்கும் ரூ.3,599 திட்டத்தில், பயனர்களுக்கு தினமும் 2 ஜிபி அதிவேக டேட்டா, எந்த நெட்வொர்க்கிற்கும் வரம்பற்ற இலவச அழைப்பு மற்றும் தினமும்100 எஸ்எம்எஸ் ஆகிய நன்மைகள் வழங்கப்படும்.
ரீசார்ஜ் பிளான் செல்லுபடியாகும் காலம்: 395 நாட்கள் (ஒரு வருடம் மற்றும் 1 மாத காலம்)
அதிவேக டேட்டா: 2 ஜிபி/நாள்
தொலைபேசி அழைப்பு: அன்லிமிடெட் காலிங்
SMS: 100 SMS/நாள்
வோடபோன் ரூ.3,699 ப்ரீபெய்ட் திட்டம் (Vodafone Rs.3,599 Plan Details)
ரூ.3,699 கட்டணத்தில் கிடைக்கும் இந்த ஜியோ ப்ரீபெய்ட் திட்டத்தில், நீங்கள் 2.5 ஜிபி அதிவேக டேட்டா, தினசரி 100 எஸ்எம்எஸ் மற்றும் இலவச வரம்பற்ற அழைப்பு ஆகியவற்றின் பலனைப் பெறலாம். இந்தத் திட்டத்தில் 1 வருட காலத்திற்கு டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தாவும் அடங்கும்.
ரீசார்ஜ் பிளான் செல்லுபடியாகும் காலம்: 365 நாட்கள்
அதிவேக டேட்டா: 2.5 ஜிபி/நாள்
தொலைபேசி அழைப்பு: அன்லிமிடெட் காலிங்
ரிலையன்ஸ் ஜியோ ரூ.3,599 ப்ரீபெய்ட் திட்டம் (Jio 3,599 Plan Details)
ரூ.3,599 கட்டணத்தில் கிடைக்கும் இந்த ஜியோ ப்ரீபெய்ட் திட்டத்தில், நீங்கள் 2.5 ஜிபி அதிவேக டேட்டா, தினசரி 100 எஸ்எம்எஸ் மற்றும் இலவச வரம்பற்ற அழைப்பு ஆகியவற்றின் பலனைப் பெறலாம்.
ரீசார்ஜ் பிளான் செல்லுபடியாகும் காலம்: 365 நாட்கள்
அதிவேக டேட்டா: 2.5 ஜிபி/நாள்
தொலைபேசி அழைப்பு: அன்லிமிடெட் காலிங்
BSNL VS Jio Vs Vodafone: பயன் தரும் திட்டம் எது?
தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களுடன் ஒப்பிடும் போது மற்ற நிறுவனங்களின் வருடாந்திர திட்டங்களை விட BSNL-இல் கிட்டத்தட்ட ஒரு மாதம் கூடுதலாக செல்லுபடியாகும்.
உங்கள் மொபைல் எண்ணை பிஎஸ் என் எல் சிம்மிற்உ போர்ட் செய்யும் வழிமுறை
முதலில், உங்கள் மொபைல் எண்ணில் இருந்து 1900 என்ற எண்ணுக்கு 'Port [space] உங்கள் 10 இலக்க மொபைல் எண்' குறிப்பிட்டு SMS அனுப்ப வேண்டும். உங்களுக்கு ஒரு தனிப்பட்ட போர்டிங் குறியீடு (UPC) கொடுக்கப்படும். இதனை வைத்து நீங்கள் பிஎஸ்என்எல் சிம்மிற்கு மாறிக் கொள்ளலாம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ